விடுமுறை நாளொன்றின் புகைப் படக் குறிப்புக்கள்

By சினிமா

கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில் இருக்கிறது பிலாத்தூஸ் (Pilatus) குன்று. லுசேர்ண் மாநிலத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரத்து பயணத்தில் இவ்விடத்தை அடையக் கூடியதாயிருக்கிறது. மிக அருகில் இருப்பினும் இதுவரை சென்று பார்க்க வேண்டுமெனத் தோன்றவில்லை. இன்று புறப்பட்டோம்.

Luzern

லுசேர்ண் மாநிலத்தின் பிரபல்யமான பகுதி இது. சுவிசில் படம் பிடிக்கப்பட்ட திரைப்பட பாடல்காட்சிகளில் பெரும்பாலும் இடம் பெறும் இப்பகுதி பிரதான தொடரூந்து நிலையத்திற்கு அண்மையில் இருக்கிறது. நியூயோர்க் நகரம் உறங்கும் நேரமென சூர்யா பொய் சொல்லி பாடியது இவ்விடங்களில்த்தான்!

Bahn

பதினைந்து நிமிடப் பயணத்தில் அடையும் ஒரு இடத்திலிருந்து கேபிள் கார்கள் பிலாத்தூஸ் மலைக் குன்றுக்கு வரிசையாகப் புறப்படுகின்றன. நான்கு பேர் அமரக் கூடிய அளவில் தொடர்ச்சியாக அவை புறப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

people

ஒரு சிலர் நடந்தும் மலையேறுகின்றனர். கடந்த வாரம் Imax இல் அல்ப்ஸ் தொடர்பான விவரணபடம் ஒன்று பார்த்தேன். மலையேறும் கணங்கள் மயிர்கூச்செறிய வைத்தன.

Mountain

ஆரம்பத்தில் சாய்வாக செல்லும் மலை பிறிதொரு இடத்தில் இன்னுமொரு கேபிள் காருக்கு மாறிய பின்னர் செங்குத்தாக உயரத் தொடங்குகிறது. கீழே பனி மூட்டங்களிலிருப்பதால் தெளிவாக்க முடியவில்லை.

Hotel

மலைக் குன்று. கீழே வெயில் கொழுத்திக்கொண்டிருக்க இங்கு சில்லிட வைக்கிறது குளிர். அவ்வப்போது பனிப் புகார் வந்து மூடி மறைத்துப் பின் போகிறது.

Swiss music

சுவிசின் பாரம்பரிய இசைக் கருவியொன்று. இது பற்றி மலைநாடான் எழுதியிருந்தார்.

Train

மலைக் கரையோரம் இவ்வாறு சாய்வாகச் செல்லும் வண்டிகளிலும் மலையை அடைய விட்டகல முடிகிறது.

Last modified: August 19, 2007

22 Responses to " விடுமுறை நாளொன்றின் புகைப் படக் குறிப்புக்கள் "

  1. Sri Rangan says:

    சயந்தன்,இரண்டு தடவைகள் இந்தப் பிலாற்ரூஸ் மலைக்குச் சென்று,பெருந்தொகை பணம் இழந்ததுதாம் மிச்சம்.இரு தடவைகளும் பனி மூட்டத்தால் பெரிதாக எதையும் பார்க்க முடியவில்லை.எனினும,; சிறார்கள் மகிழ்ந்தார்கள்.லுசார்ன் நகரத்தின் அழகுக்கு இந்த மலைகளும்,அதனடிவாரத்தில் வளைந்தோடும் நதியுமே மிக முக்கியமான காரணம்.அந்த நகரத்துக்குப் பெருந்தொகையான இந்தியர்களும்,ஜப்பானியர்களும் ஊருலாவுக்காக-தேன் நிலவுக்காக வருவதாகச் சொன்னார்கள்.சுவிட்ஸர்லாந்து என்னைக் கவர்ந்த அழகான நாடுகளில் ஒன்று.இங்கு பல தடவைகள் வந்துள்ளேன்.இந்தப் பிலாற்ரூஸ் என்னை ஏமாற்றிய மலை.அத்தோடு அடிக்கடி கேபிள் அறுந்து விபத்துக்குள்ளாவது-மரிப்பதும் உண்டுதானே?

  2. Sri Rangan says:

  3. Sri Rangan says:

    இன்னுமொன்றைக் கூறாது விட்டுவிட்டேன்.இந்த மலையடிவாரத்தில்-முதலாவது கேபிள் கார்கள் முடியுமிடத்தில் இருக்கும் றோடல்பான் ஓடவில்லையா?அதுதாம் மிக மகிழ்ச்சியானது. Sommer Rodelbahn ஓடுவது அவ்வளவு விலையில்லை. :-)))))

  4. Sri Rangan says:

  5. யோகன் பாரிஸ்(Johan-Paris) says:

    சயந்தன்!
    கொள்ளை அழகு, பார்க்கவேண்டுமெனும் ஆசையைதூண்டியது.
    ம்…. அனுபவியுங்கள்.
    கிட்ட இருக்கும் நல்லது புரிவதில்லை என்பது உண்மை.

  6. யோகன் பாரிஸ்(Johan-Paris) says:

    சயந்தன்!
    கொள்ளை அழகு, பார்க்கவேண்டுமெனும் ஆசையைதூண்டியது.
    ம்…. அனுபவியுங்கள்.
    கிட்ட இருக்கும் நல்லது புரிவதில்லை என்பது உண்மை.

  7. சயந்தன் says:

    //அந்த நகரத்துக்குப் பெருந்தொகையான இந்தியர்களும்,ஜப்பானியர்களும் ஊருலாவுக்காக-தேன் நிலவுக்காக வருவதாகச் சொன்னார்கள்//

    ஓம். லுசேண் தொடரூந்து நிலயைத்தில் எப்போதும் அவர்களைக் காணமுடியும்.

    //ஊருலாவுக்காக//

    இத் தமிழ் வார்த்தையின் அர்த்தத்தை தரும் ஜெர்மன் வார்த்தையும் ஊர்லாப் (Urlaub) என்பது ஆச்சரியமாயில்லையா.. :))

    //அத்தோடு அடிக்கடி கேபிள் அறுந்து விபத்துக்குள்ளாவது-மரிப்பதும் உண்டுதானே?//

    அண்ணை இதுகளை முதலே சொல்லக் கூடாதோ.. 🙁

    //முதலாவது கேபிள் கார்கள் முடியுமிடத்தில் இருக்கும் றோடல்பான் ஓடவில்லையா?//

    அதில் ஓடவில்லை. ஆனால் கயிறுகளில் தொங்கிப் பறந்து நடந்து சாகசம் காட்டினேன். (ஆண்டவனை வேண்டியபடி 🙂

  8. சயந்தன் says:

  9. Dheeba says:

    superp photos

  10. Dheeba says:

    superp photos

  11. மாயா says:

    மிக அழகாயிருக்கின்றன

  12. மாயா says:

    மிக அழகாயிருக்கின்றன

  13. SurveySan says:

    அடேங்கப்பா. அமக்களமான படங்கள்.

    ரொம்ப நாளா பாக்கணும் பாக்கணும்னு lucerne ட்ரிப் தள்ளிக்கிட்டே போவுது.

    வந்தா சுத்தி (not ரியல் சுத்தி, அது இங்கயே இருக்கு) காமிப்பீங்கல்ல?

  14. SurveySan says:

    அடேங்கப்பா. அமக்களமான படங்கள்.

    ரொம்ப நாளா பாக்கணும் பாக்கணும்னு lucerne ட்ரிப் தள்ளிக்கிட்டே போவுது.

    வந்தா சுத்தி (not ரியல் சுத்தி, அது இங்கயே இருக்கு) காமிப்பீங்கல்ல?

  15. மீரா ஜாஸ்மின் காதலன் says:

    ////அத்தோடு அடிக்கடி கேபிள் அறுந்து விபத்துக்குள்ளாவது-மரிப்பதும் உண்டுதானே?//

    அண்ணை இதுகளை முதலே சொல்லக் கூடாதோ.. :(//

    ஐசே

    முதலே சொன்னால் த்ரில் இருக்காது கண்டீரோ?

  16. மீரா ஜாஸ்மின் காதலன் says:

    ////அத்தோடு அடிக்கடி கேபிள் அறுந்து விபத்துக்குள்ளாவது-மரிப்பதும் உண்டுதானே?//

    அண்ணை இதுகளை முதலே சொல்லக் கூடாதோ.. :(//

    ஐசே

    முதலே சொன்னால் த்ரில் இருக்காது கண்டீரோ?

  17. சயந்தன் says:

    //வந்தா சுத்தி (not ரியல் சுத்தி, அது இங்கயே இருக்கு) காமிப்பீங்கல்ல?//

    கண்டிப்பா. நான் இதுவரை பார்க்காத இடங்களும் நிறைய இருக்கு. அப்பிடியே உங்க கூடவே வந்திடலாம் 🙂

  18. சயந்தன் says:

    //வந்தா சுத்தி (not ரியல் சுத்தி, அது இங்கயே இருக்கு) காமிப்பீங்கல்ல?//

    கண்டிப்பா. நான் இதுவரை பார்க்காத இடங்களும் நிறைய இருக்கு. அப்பிடியே உங்க கூடவே வந்திடலாம் 🙂

  19. wilson says:

    I have come there once. Its nice. we went to rigi also

  20. wilson says:

    I have come there once. Its nice. we went to rigi also

  21. காரூரன் says:

    இயற்கை எழில் எஙகள் கண்களுக்கும் மனதுக்கும் குளிர்மை. அருமையான படங்கள்.

  22. காரூரன் says:

    இயற்கை எழில் எஙகள் கண்களுக்கும் மனதுக்கும் குளிர்மை. அருமையான படங்கள்.

× Close