சினிமா

நான் போட்ட பின்னூட்டங்கள்

எனது வலைப்பதிவில் பிறர் இடுகின்ற பின்னூட்டங்களைத் திரட்டினால்ப் போதுமா..? நான் மற்றவர்களுக்கு இடுகின்ற பின்னூட்டங்களைத் திரட்ட வேண்டாமா..? அவற்றை நினைவு வைத்துக்கொள்வது எப்படி..? இப்படி யோசித்ததன் விளைவு தான் பக்கத்தில் நீங்கள் பார்க்கின்ற நான் இட்ட பின்னூட்டங்கள் என்னும் பகுதி.

cocomment என்னும் தள உதவியுடன் Fire fox உலாவியின் அனுசரணையுடன் இதனைச் செய்துள்ளேன். இதன் மூலம் நான் எவருக்கெல்லாம் பின்னூட்டமிடுகின்றேனோ அவர்களின் பதிவின் பெயர் இடுகையின் பெயர் மற்றும் எனது பின்னூட்டத்தின் ஒரு பகுதி இவையாவும் எனது வலைப்பதிவிலும் வந்து தாமாகவே குந்திக் கொள்வார்கள்.

உதாராணமாக கானா பிரபாவின் ஒரு பதிவுக்கு நான் பின்னூட்டமிடுகிறேன். Fire fox இல் நிறுவப்பட்டுள்ள ஒரு நீட்சி அந்தப் பின்னூட்டத்தைத் தானாகவே தூக்கி சென்று ஒரு இடத்தில் சேமிக்கும். சேமிக்கப் பட்ட இடத்திலிருந்து எனது வலைப்பதிவு அதனை தானாகவே பெற்றுக் கொள்ளும். அதிலும் கானா பிரபா எனது பின்னூட்டத்தை அனுமதிக்கும் காலம் வரை காத்திராமல் உடனடியாகவே காட்சிப் படுத்தும். (அனுமதிக்காட்டியும் காட்டுவோமே..)

எனது பயன்பாட்டுக் கணணிகள் தவிர்ந்த புதிய கணணியொன்றில் எந்த வித ஏற்பாடுகளுமற்று நான் பிறருக்கு இடும் பின்னூட்டம் திரட்டப்பட மாட்டாது.

வலைப் பதிவு தவிர்ந்த வேறு களங்களில் நான் ஏதாவது எழுதினால் கூட அவையும் திரட்டப்படக் கூடும். (ஈ மெயில்களையும் திரட்டுமோ..:((

என்ன பதிவு என்ன இடுவையென தனித் தனியே பிரித்துக் காட்டுவது சிறப்பானது.

ஒழுங்காக வேலை செய்தால் விபரமாக எழுதுகிறேன். 🙂

By

Read More

என் காதல் கதை

ஏதோ மின்னல் ஏதோ மின்னல் தேகம் தொடுகிறதே
பூட்டிப் போட்ட தாழம் பூவில் பூட்டு உடைகிறதே
சல்லாப வெயில் அடிக்க கள்ளூறும் புயல் அடிக்க
ஆசை மொட்டுவிட நாணம் கட்டிவிட கூந்தல் கூடச் சுடுதே
பார்வை பின்னலிட ஜாடை ஜன்னலிட தாகம் மூட்டி விடுதே..

செல்லக்கடிகளும் சின்னக் கீறல்களுமெனும் பூனைக் கதையை வாசித்த நண்பர் ஒருவர் அனுப்பிய நாய்க்காதற்கதை இது. அத்தோடு இன்னொரு விடயம், என் காதல் கதை எழுதுவது நாயாகிய நான் என தலைப்பினைத் திருத்தி வாசித்துக் கொள்ளவும்.

wweeeeeeeeeee

wweeeeeeeeeee

By

Read More

தமிழ்மணத் தடையினை உடைத்தவன் நான்

என்ன பாக்கிறீங்க.. ஆச்சரியமா இருக்கா.. இவனுக்கு மட்டும் எப்பிடி 34 வது பின்னூட்டத்தினையும் தமிழ்மணம் திரட்டுது என்று தானே ஆச்சரியப் படுறீங்க.? தடைகள் தாண்டப்பட வேண்டியவை அல்ல.. தகர்த்தெறியப்பட வேண்டியவை என்று என்ர ஆசிரியர் அடிக்கடி சொல்லுவார். அதனால என்ர அறிவைப் ? பாவிச்சு …. … இந்த இடத்தில நீங்க கண்டு பிடிச்சிடுவீங்க. இவன் சுத்துறான் எண்டு.

சத்தியமா எனக்கொண்ணும் தெரியாதுங்க. வெறும் 8 பின்னூட்டத்தை 34 பின்னூட்டம் எண்டு காட்டுறதில எனக்கொண்டும் பிரச்சனையில்லைத்தான். ஆனா என்ர கவலையெல்லாம் இனி வாற 9வது 10வது பின்னூட்டங்கள் காட்டப்படுமா இல்லாட்டி 35 வது பின்னூட்டம் வரைக்கும் காத்திருந்து பிறகு தான் திரட்டுமா என்பது தான். (அப்பிடிப் பாத்தால் கூட 35 என்ற எண் 30 க்கு பிறகு வாறதாலை தமிழ்மணத்தில வராதே..)

By

Read More

விடுதலைப் புலிகளைப் பற்றி வீராச்சாமி

ஈழவிடுதலை பற்றியும் விடுதலைப் புலிகள் பற்றியும் அசாதாரண ஒரு நிலையில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசும் எந்த ஒரு பேச்சையும் நான் இதுவரை கேட்டதில்லை. ஈழத்தில் தமிழ் அரசியல் வாதிகள் செல்வாக்கு செலுத்தாத காலத்தில் பிறந்தவன் என்பதாலேயோ வளர்ந்தவன் என்பதானாலேயோ இவ்வாறான உரைகளைக் கேட்டதில்லை. சமாதான காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆங்காங்கே பரப்புரைகளை நடாத்திய போதும் தமிழக தலைவர்களினது உணர்ச்சி மிகு உரைகளைப் போல அவை இருந்ததில்லை.

புலிகள் கூட தமது நிகழ்வுகளில் அவ்வாறு பேசியதில்லை. அதனால்த் தானோ என்னவோ ஆணி வேர் திரைப்படத்தில் நந்தா மேடையில் ஏறி நாம் பூனைகள் அல்ல புலிகள் என்று உறுமிய போது எனக்கு இந்திய தமிழ்ச் சினிமா பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால் முதல்த் தடவையாக விடுதலைப் புலிகள் பற்றியும் ஈழத்தமிழர்கள் பற்றியும் ஒரு தமிழக அரசியல் பிரமுகர் அத்தனை ஆக்ரோசமாகப் பேசியதைக் கேட்டேன். அவர் யாருமல்ல. வீராசாமியெனும் காவியம் அளித்த விஜய ரி ராஜேந்தர் தான் அவர். கேட்கிறீங்களா..?



By

Read More

செல்லக் கடிகளும் சின்னக் கீறல்களும்..

12 வருசங்களுக்கு முன்பு முற்றம் கோடி தாழ்வாரம் கிணற்றடி என வாழ்ந்த சூழலில் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் வளர்த்த காலத்தின் பின் மீண்டும் அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஒரு கிராமத்தின் ஏதோ ஒரு கோடியில் வாய்த்து விட்ட வீடாயினும் அமைதியும் கதவைத் திறந்தால் முன் முற்றத்தில் இறங்கி விளையாடும் சூழலும் வளர்ப்புப் பிராணிகளை விரும்பி ஏற்கப் பண்ணின.

இப்போ சற்று முன்னர் பூனைக் குட்டியாரைத் திரத்தித் திரத்திப் படமெடுத்தேன். அப்போ ஜெர்மன் மொழியில் அவர் சிந்தித்ததை முடிந்தவரை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். பார்க்கிறீங்களா..?

wweeeeee

wweeeeee

By

Read More

× Close