எனது வலைப்பதிவில் பிறர் இடுகின்ற பின்னூட்டங்களைத் திரட்டினால்ப் போதுமா..? நான் மற்றவர்களுக்கு இடுகின்ற பின்னூட்டங்களைத் திரட்ட வேண்டாமா..? அவற்றை நினைவு வைத்துக்கொள்வது எப்படி..? இப்படி யோசித்ததன் விளைவு தான் பக்கத்தில் நீங்கள் பார்க்கின்ற நான் இட்ட பின்னூட்டங்கள் என்னும் பகுதி.
cocomment என்னும் தள உதவியுடன் Fire fox உலாவியின் அனுசரணையுடன் இதனைச் செய்துள்ளேன். இதன் மூலம் நான் எவருக்கெல்லாம் பின்னூட்டமிடுகின்றேனோ அவர்களின் பதிவின் பெயர் இடுகையின் பெயர் மற்றும் எனது பின்னூட்டத்தின் ஒரு பகுதி இவையாவும் எனது வலைப்பதிவிலும் வந்து தாமாகவே குந்திக் கொள்வார்கள்.
உதாராணமாக கானா பிரபாவின் ஒரு பதிவுக்கு நான் பின்னூட்டமிடுகிறேன். Fire fox இல் நிறுவப்பட்டுள்ள ஒரு நீட்சி அந்தப் பின்னூட்டத்தைத் தானாகவே தூக்கி சென்று ஒரு இடத்தில் சேமிக்கும். சேமிக்கப் பட்ட இடத்திலிருந்து எனது வலைப்பதிவு அதனை தானாகவே பெற்றுக் கொள்ளும். அதிலும் கானா பிரபா எனது பின்னூட்டத்தை அனுமதிக்கும் காலம் வரை காத்திராமல் உடனடியாகவே காட்சிப் படுத்தும். (அனுமதிக்காட்டியும் காட்டுவோமே..)
எனது பயன்பாட்டுக் கணணிகள் தவிர்ந்த புதிய கணணியொன்றில் எந்த வித ஏற்பாடுகளுமற்று நான் பிறருக்கு இடும் பின்னூட்டம் திரட்டப்பட மாட்டாது.
வலைப் பதிவு தவிர்ந்த வேறு களங்களில் நான் ஏதாவது எழுதினால் கூட அவையும் திரட்டப்படக் கூடும். (ஈ மெயில்களையும் திரட்டுமோ..:((
என்ன பதிவு என்ன இடுவையென தனித் தனியே பிரித்துக் காட்டுவது சிறப்பானது.
ஒழுங்காக வேலை செய்தால் விபரமாக எழுதுகிறேன். 🙂