சினிமா

படங்களில் நோண்டுதல்

சில்லென்ற தண்ணீரும் அழகிய மாலையும் அதோ தூரத்தில் பனி மலையும் இன்னும் ஒரு மொட்டை மரமும் வீடும். படங்களில் மேல் கிளிக்குக.

wweeeeee

wweeeeee

By

Read More

எனக்கெண்டொரு றேடியோ

தடங்கலுக்கு வருந்துகிறேன். சொதப்பிட்டுது. சரி வந்தது தான் வந்தியள். பக்கத்தில இருக்கிற என்ர பாடலை கேட்டுப் போங்கோ. அதுவும் புது றேடியோத்தான்.

By

Read More

உலக வலைப் பதிவுகளில் முதல் முறையாக

கொஞ்ச நாளுக்கு முன்னாலை வசந்தன் தன்ர வலைப்பதிவின்ர ரண்டாம் ஆண்டு நிறைவுக்காக ஏதாவது செய்ய இருக்கிறதாகவும் என்ன செய்யலாம் எண்டும் கேட்டார். வழமையா குரல் பதிவுகள் தான் அவரின்ர விசேசமான பதிவுகள். அதனாலை ஒரு குரல் பதிவைப் போடும் எண்டு சொன்னன். சரியெண்டு அவரும் அதைப்பற்றிக் கதைச்சக் கொண்டிருக்கும் போது இதை ஒரு கலந்துரையாடல் குரல்ப்பதிவாப் போடலாமே எண்டு நான் தான் அவருக்குச் சொன்னன்.

ஏற்கனவே வானொலிக்காக சிலரைச் செவ்வி கண்டு அதனை நேரடியாக கணணியில் ஒலிப்பதிவு செய்த அனுபவம் இருந்தபடியாலை இது பெரிய அளவில் கஸ்ரமாக இருக்கவில்லை.

அதுவும் ஒரு சதமும் செலவழியாமல் இந்த கலந்துரையாடல் நடந்தது. Voip தொழில் நுட்பத்துக்கூடாக அவரை தொலைபேசியில் அழைத்து இந்தக் கலந்துரையாடலை ஒலிப்பதிந்தன். நன்றி Voipcheap.com

ஆயத்தம் ஏதுமில்லாமல் செய்த படியாலை முழு ஒலிப்பதிவையும் கால் மணி நேரமளவக்குச் சுருக்க வேண்டியிருந்ததாலை அங்கங்கே வெட்டியதும் நான் தான். இதனாலை சிலநேரம் தொடர்ச்சித் தன்மை இல்லாமல் இருக்கும். இப்ப முழுசா கேட்ட பிறகு இன்னும் சிலதை வெட்டியிருக்கலாம் போல இருக்கு. ஆனா இனி வெட்டிப் பிரியோசனம் இல்லை.

வசந்தன் சயந்தன் அவ்வப்போது சிலரால் கிளப்பப்படும். கடைசியா குழம்பியவ தமிழ்நதி அக்கா. ஆரம்பத்தில் படு தீவிரமாக குழம்பியது மட்டுமல்லாமல் மற்றோரையும் குழப்பியவர் கறுப்பியக்கா.

பதிவை வசந்தன் வெளியிட்ட பின்னர்தான் வந்த கருத்துக்களின் அடிப்படையில் இதுவரை வலையுலகில் இப்படி யாரும் செய்திருக்கவில்லையெண்டு உணர முடிந்தது. இதை ஒரு தொடக்கமாக வைத்து இதுபோலவே வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடி வலையில் ஏற்றலாம். ஏற்றுவோம்.

இந்த ஒலிப்பதிவு கேட்பதற்கு இங்கே கிளிக்கவும்
நட்பு ரீதியில் கலாய்த்துரையாடிய இந்தப் பதிவின் மூலம் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் very very sorry.

By

Read More

பசுத்தோல் போர்த்திய புலிகளோ?

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வட்டுக்கோட்டையில் ஊரடங்கு நேரத்தில் நடமாடிய இரண்டு பசுமாடுகளை இராணுவத்தினர் சுட்டுக் கொன்று விட்டார்கள் – சோமிதரன் (சந்தோசம் தானே மச்சான்..)ஆனந்த விகடன், 10.01.07


Photobucket - Video and Image Hosting

படம் – திரு கிளிநொச்சியிலிருந்து

By

Read More

ஜெருசேலம்

கூடி மகிழ்ந்திட்ட கோவில் வயல் வெளி
யாவும் இவர் இழந்தாரே – நேற்றுப்
பாடி மகிழ்ந்திட்ட ஊரைத் திறந்துமே
போகும் திசையறியாரே..
-புதுவை இரத்தினதுரை-


Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

படங்கள்: திரு – கிளிநொச்சி

By

Read More

× Close