சினிமா

ஊர் நினைவில் ஒரு வீடு – சிட்னியில்

சிட்னியில் penrith (என்று தான் நினைக்கிறேன்..) போகிற வழியில் தெரிந்த ஒருவர் இருந்தார். மிக அண்மையில் அந்த இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தார். நகர்ப்புறத்தில் இருந்து மிக அதிகமாக விலகிய ஒரு காடு சார்ந்த ஒரு சூழலில் அவர் வீடு இருந்தது.

ஒரேஞ் தோட்டம் செய்வதற்கு ஏதுவான இடமாம். அவரது காணிக்குள்ளேயே நிறைய ஒரேஞ் (என்று தான் நினைக்கிறேன்..) மரங்கள் காய்த்துக் குலுங்கின.. தவிர வீட்டைச் சுற்றி கோழிகள் அங்குமிங்கும் ஓடித்திரிந்தன.. அவற்றுக்கு முற்றத்தில் அரிசி வீசிக் கிடந்தது.

இரண்டோ மூன்று ஆட்டுக்குட்டிகள்..

ஒரு நாய்..

ஒஸ்ரேலியாவில் முழுக்க முழுக்க தனது வீட்டினை ஒரு கிராமத்து சூழலில் மாற்றிவிட்டிருந்தார்.

காலையில் சேவல் கூவி நித்திரைவிட்டெழும் பாக்கியம் அவருக்கு!

அங்கு எடுத்த சில படங்கள் இவை.. அந்த ஒரு நாளும் எனக்கும் ஏதோ ஊர்ச் சூழலில் வாழ்வது போன்ற உணர்வு கிடைத்தது..


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com

இந்தச் சேவலுக்கு இது இறுதிப்படம். அன்று விருந்தினராய்ப் போன எங்களுக்காக தன்னையே தந்த அந்த சேவலுக்கு எனது நன்றி நன்றி நன்றி…

By

Read More

இது எங்க பாடல்!

கத்தரித்தோட்டத்து மத்தியில கழுத்தறுத்து விட்டது. இதுக்கு முதலில போட்ட பாட்டு நினைச்ச நேரங்களில மட்டும் தான் வேலை செய்யுது. அதனால வன்னியன்ரை உதவியோடை இந்தப்பாட்டை அவரின்ரை தளத்தில திரும்பவும் போடுறன். கூடவே போனசா இன்னும் ஒரு பாட்டும் போடுறன். அதையும் கேளுங்கோ!! அந்தப்பாட்டுக்கு சும்மா அவசரத்துக்கு வரிகள் எழுதினது.. ஒரு பரீட்சாத்த முயற்சியாக.. மற்றும் படி அதில இசை நுணுக்கங்களை தேடாதேங்கோ.. தேடினாலும் கிடைக்காது.


கத்தரித்தோட்டத்தின் மத்தியிலே..


நெருப்பெரிந்த நிலமாய்…

By

Read More

கத்தரித் தோட்டத்து மத்தியிலே..

சென்ற முறை இலங்கை சென்ற போது வசந்தன் திரும்பத் திரும்ப சொன்ன விசயத்தினை நான் நிறைவேற்றாமல் வந்தேன். அது சில சிறுவர் பாடல்களை ஒலிப்பதிவு செய்து வருதல். குறிப்பாக அவர் கத்தரித்தோட்டத்து மத்தியிலே பாடலை கண்டிப்பாக ஒலிப்பதிவு செய்து வரும்படி சொல்லியிருந்தார்.

சென்ற வாரம் சிட்னி சென்ற போது எப்பிடியாவது அந்தப்பாடலை ஒலிப்பதிவு செய்ய சொல்லியிருந்தார். இம்முறை அவரது விருப்பத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற நோக்கில்… இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்திருக்கிறேன்.

இந்தப்பாடலுக்கு தனியாக இசையமைக்கப்பட்டது. சிட்னியில் எனது நண்பன் ராஜ் (தல) இதற்கான இசையை தந்திருந்தார். குரல் வழங்கியிருக்கிறார்.. அத மட்டும் சொல்ல மாட்டன்.

வசந்தனுக்கு இப்ப சந்தோசமாயிருக்கும். என்ன வசந்தன் சந்தோசம் தானே!

By

Read More

சிட்னியில் இருந்து..

வணக்கம்! சிட்னியில் நடந்து முடிந்த மாநாடு, மெல்பேண் வலைப்பதிவாளர்கள் சார்பில் வானொலியில் செய்த நிகழ்ச்சிகள், சில சிறுவர் பாடல் ஒலிப்பதிவுகள் என சிட்னிப்பயணம் போய்க்கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் மெல்பேண் திரும்பியவுடன் எழுத இருக்கிறேன்.

நாளை வானொலியில் வலைப்பதிவுகள் குறித்த ஒரு அறிமுகம் வழங்கப் போறன்.. சும்மா கத்தரிக்காய் கறி வைக்கிறது எப்பிடியெண்டு கத்தாமல் பிரியோசனமா ஏதாவது பண்ணும் என வசந்தன் கத்தியதன் விளைவு அது!!

இப்போதைக்கு இன்று சிட்னியில் எடுத்த இரண்டு படங்கள்… மீதி வரும்!!!


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com

By

Read More

சைய சையா நய்.. தைய தையா

எல்லாமாச் சேத்து ஒரு 15 000 சனம் வந்திருக்கும். அதில ஒரு முக்கால்ப் பங்கு இந்திய அதுவும் ஹிந்தி மொழி பேசும் சகோதரர்களாக இருந்திருப்பார்கள். நாங்கள் ஒரு ஏழெட்டு தமிழ்ப்பெடியள்.

வழமை போலத்தான் கொஞ்சம் லேற்றாகப் போனம். உள்ளே நுழைஞ்ச போது ஏதோ ஒரு ஹிந்திப்பாட்டை ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். நீண்ட முடி வளர்த்திருந்த அவர் சரியாகச் சொல்லப்போனால் பேயோட்டுபவர் மாதிரி பாடிக்கொண்டிருக்க ‘ஐயோ.. பயமாக்கிடக்கு’ எண்டு முதல் அலறல் எங்களிட்டை இருந்து வெளிப்பட்டது.

இருக்கைகளில் 3D கண்ணாடிகள் வைக்கப்பட்டிருந்தன. இருந்தவுடனையே எடுத்துப் போட்டுப்பாத்தன். எல்லாம் அப்பிடியே தான் இருந்திச்சு. ‘கழட்டுடா. எப்ப போடுறது எண்டு சொல்லவாங்கள் எண்டான் எனக்கு பக்கத்தில இருந்தவன்.

இரண்டு பெரிய திரைகள் அரங்கத்தின் அருகருகாக இருக்க அதில நிகழ்வுகள் போய்க்கொண்டிருந்தன. ரஹ்மான் மேடையின்ரை நடுவில கொஞ்சம் பின்னுக்காக நின்றுகொண்டு keyboard வாசிச்சுக்கொண்டிருந்தார். மேடையின் ஒரு புறத்தில சிவமணி தாரை தப்பட்டையளோடை நிண்டு கொண்டிருந்தார்.

முதலில் போனதெல்லாம் பரிச்சயமில்லாத ஹிந்திப்பாடல்கள் எண்ட படியாலை அமைதியாத்தான் இருந்தம்.

ஒரு கொஞ்ச நேரத்தில சங்கர் மகாதேவன் வந்தார். ‘தமிழ்ப்பாட்டு ஒண்ணு பாடலாமா’ எண்டதும் தான் தாமதம், ஆங்காங்கே இருந்து ஹே என்ற கத்தல்கள். (தமிழர்கள் தங்கள் சிறுபான்மைப் பலத்தை காட்டிச்சினம்.)

உப்பக்கருவாடு பாட்டைத்தான் சங்கர் பாடினவர்.

அந்தப்பாட்டு முடிய திரும்பவும் ஹிந்திக்கு போயிட்டினம். எண்டாலும் எங்களுக்கு தெரிஞ்ச தமிழ்ப்பாடல்களின் மெட்டுக்கள் தான். அதே நேரம் ஹிந்திப்பாட்டுக்களின் இடையில அவ்வப்போது தமிழ் வரிகளையும் சேத்திச்சினம். அந்த நேரமெல்லாம் நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகளாக இருந்தம்.

எண்டாலும் ஹிந்தியில ஆரம்பிச்ச பாட்டுக்கள் ஒரு கட்டத்தில அடுத்தடுத்து தமிழுக்கு மாறிச்சுது. சிலர் we want hindi எண்டு கத்துற அளவுக்கு நிலைமை இருந்திச்சு. எங்களுக்கு முன்னாலை இருந்த ஒருவர் சைய சையா எண்டு கத்தினார்.

பின்னாலை இருந்த நாங்கள் சைய சையா நய்.. தைய தையா எண்டு கத்த அவர் ஒரு நட்புடன் எங்களைப்பாத்து சிரிச்சார்.

அவ்வப்போது இப்பொழுது உங்கள் 3D கண்ணாடிகளை அணியுங்கள் என்றும் இப்பொழுது கழற்றுங்கள் என்றும் அறிவிப்பு திரையில் வந்தது.

3Dயில் திரையில் அவ்வப்போது சில காட்சிகள் போய்க்கொண்டிருந்தன. ஆரம்பத்தில் அவற்றைப்பார்ப்பதில் இருந்த ஆர்வம் பின்னர் இல்லாமல் போய்விட்டது.

ஒரு கட்டத்தில எங்களுக்கு பின்வரிசையில் இருந்த ஹிந்திச் சகோதரிகள் நாலைந்து பேர் ஆடத்துடங்கி விட்டார்கள். எனக்குப் பக்கத்தில இருந்த செந்தூரன் டேய்.. புரோக்றாமை பாரடா எண்டு என்ரை தலையை அடிக்கடி முன்னாலை திருப்பிக் கொண்டிருந்தான்.

நிகழ்வின் நடுவில் சிவமணியின் தாளவாத்திய நிகழ்வு நடந்தது. அந்த நேரம் ஒரு வெள்ளைக்கார பெண்மணியும் சேர்ந்து ஏதோ ஆங்கிலத்தில பாடினவ. அவ பாடுற நேரம் தவித்து மற்ற நேரங்களில் சிவமணியின் கைகள் புரியும் நர்த்தனத்தை வாய் பாத்தக்கொண்டிருந்தா.

அதுக்கு பிறகும் ரஹ்மான் உங்கள் எல்லாருக்கு bombay dreams வேணுமா எண்டு கேட்டார். முதல் பாடின வெள்ளைக்கார பெண்மணி தான் வந்து பாடினா. அது தாளத்தில வாற ஒரு பாட்டுமாதிரி இருந்தது.

அ.ஆ படத்தில இருந்து ரஹ்மான் ஒரு பாட்டுப் பாடினார்.

ஆறரைக்கோடி பேர்களில் ஒருவன்.. அடியேன் தமிழன்.. எண்ட பாட்டு..

ஒவ்வொரு முறையும் அடியேன் தமிழன் எண்டும் போதும்.. கலக்கிட்டமில்ல!!

அதுக்கடுத்ததா வந்தது மரங்கொத்தியே பாட்டு. தமிழென்ன ஹிந்தியென்ன? அந்த ஹிந்திச் சகோதரிகள் ஆடிக் கொண்டேயிருக்க ஒரு கட்டத்தில எங்களுக்கு இருப்புக் கொள்ளேல்லை. எழும்பிட்டமில்ல!!

இறுதிப்பாடல் சரிகமே! மொத்த அரங்கமும் எழுந்து நின்றாடியது.

கடைசியாக வந்தே மாதரம்! அத்துடன் நிறைவுற்றது நிகழ்வு. வீட்டுக்கு வந்திட்டமில்ல!!

By

Read More

× Close