சிட்னியில் penrith (என்று தான் நினைக்கிறேன்..) போகிற வழியில் தெரிந்த ஒருவர் இருந்தார். மிக அண்மையில் அந்த இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தார். நகர்ப்புறத்தில் இருந்து மிக அதிகமாக விலகிய ஒரு காடு சார்ந்த ஒரு சூழலில் அவர் வீடு இருந்தது.
ஒரேஞ் தோட்டம் செய்வதற்கு ஏதுவான இடமாம். அவரது காணிக்குள்ளேயே நிறைய ஒரேஞ் (என்று தான் நினைக்கிறேன்..) மரங்கள் காய்த்துக் குலுங்கின.. தவிர வீட்டைச் சுற்றி கோழிகள் அங்குமிங்கும் ஓடித்திரிந்தன.. அவற்றுக்கு முற்றத்தில் அரிசி வீசிக் கிடந்தது.
இரண்டோ மூன்று ஆட்டுக்குட்டிகள்..
ஒரு நாய்..
ஒஸ்ரேலியாவில் முழுக்க முழுக்க தனது வீட்டினை ஒரு கிராமத்து சூழலில் மாற்றிவிட்டிருந்தார்.
காலையில் சேவல் கூவி நித்திரைவிட்டெழும் பாக்கியம் அவருக்கு!
அங்கு எடுத்த சில படங்கள் இவை.. அந்த ஒரு நாளும் எனக்கும் ஏதோ ஊர்ச் சூழலில் வாழ்வது போன்ற உணர்வு கிடைத்தது..




இந்தச் சேவலுக்கு இது இறுதிப்படம். அன்று விருந்தினராய்ப் போன எங்களுக்காக தன்னையே தந்த அந்த சேவலுக்கு எனது நன்றி நன்றி நன்றி…
நல்ல வேலைதான்.
மனமுண்டானால் சினிட்யிலும் இடமுண்டு!
எழுதிக்கொள்வது: நாய்
நான் வடிவாக போஸ் குடுக்கிறன்..
20.2 28.9.2005
எழுதிக்கொள்வது: vasi
undefined
16.50 28.9.2005
உங்களால் ஒரு சேவல் அநியாயமா உயிரை
விட்டுட்டுதே..
______
Vasi
அதேதான். ஷ்ரேயா சொன்னது.
மனமிருந்தால் மார்க்கமுண்டு.
எழுதிக்கொள்வது: ShiyamSunthar
நீர் யாழ்ப்பாணம் போய் வந்த படங்களை காட்டி ஏமாற்றுகிறீரோ
23.28 29.9.2005