எஸ்.வாசன்

“பொதுசன நூலகங்களில் இருக்கின்ற கனமான புத்தகங்கள் எனக்கு வாழ்வின் பல மோசமான உண்மைகளை கற்று தந்திருக்கின்றன” – இது நாம் அதிகம் அறிந்திராத தனது இளவயதில் மரணித்த ஈழத்து எழுத்தாளர் முனியப்பதாசன் ஒரு தடவை கூறிய வாசகம். இதனை வாசித்ததிலிருந்து கனமான தடித்த புத்தகங்களை காணும்போதெல்லாம் இந்த வாசகம்…

ஜே கே

ஐநூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் பக்கம். 24 – 04 – 2009 முள்ளிவாய்க்கால் சந்திராவுடைய வாய் மெல்லத் திறந்திருந்தது. உதடுகளில் மண்பருக்கைகள். “நான் கேக்கிற நிறையக் கேள்வியளுக்கு நீங்கள் ஏன் பதில் சொல்லுறேல்லை…” அத்தார் சந்திராவைக் கட்டிக்கொண்டு வெடித்து அழத்தொடங்கினான். “அண்ணை வெளிக்கிடுங்கோ…” வெள்ளையன் கையை ஆறுதலாகப் பற்றினான். “என்னை விடு….

இரவி அருணாச்சலம்

இப்போது இதனைக் குறித்துக் கொள்ள வேண்டும், ஒருபேப்பர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்த சயந்தன் அவர்கள் `ஆதிரை’ என்ற புனைவுப் பாய்ச்சல் நிகழ்த்தியுள்ளார். அது குறித்த பத்தி எழுத்தே இது. சயந்தனுக்கு இது முதலாவது நெடுங்கதையல்ல, ஏலவே, `ஆறாவடு’ என அறியப்பட்டவர். `ஆறாவடு’ புதினத்தை வாசிப்பதற்கு முன்னர்…

நடராஜா வாமபாகன்

தெனியாய எனப்படும் மலையகத்தோட்டத்தில் லயன்களில் ( காம்ப்ராக்கள்) 77இல் மூட்டப்படும் பெரும் தீயுடன் ஆரம்பிக்கும் கதை மார்பின் குருதிச்சேற்றில் புதைந்திருக்கும் சயனைட் குப்பியை ஆதிரை சிரமப்பட்டு இழுப்பதோடு முடிகின்றது, இடையில் பல கிளைக்கதைகள், ஈழப்போர் என்ற மையக்கருவை சிதைக்காமல் பின்னப்பட்ட ஓர் பல்சுவைக்கதம்பம் இந்த ஆதிரை. இதில் காதல்…

லவநீதன் ஜெயராஜ்

ஒரு நாவல்/நூலினை வாசகரொருவர் வாசித்து முடித்துவிடும் போது ஏற்படும் மன எண்ணங்களில் தான் அதன் வெற்றி தங்கியுள்ளது என நான் நினைக்கிறேன். அதற்காக நூலினை விளங்கமுடியாமல் போவது ஆசிரியரின் பிழை அல்ல, அது நிற்க ஆதிரை நாவலை வாசித்துமுடிந்தவுடன் அதனை மூடி வைக்கலாமா அல்லது இன்னுமொரு தரம் வாசிக்கலாமா…