அமல்ராஜ் பிரான்சிஸ்

மூன்றுவாரப் பயணம்… இன்றுதான் கடைசிப் பக்கத்தில் முட்டி பெரும் கனத்தோடு நிமிர்ந்திருக்கிறேன். ஆதிரை..! இது சுமார் இரண்டு தசாப்தகால ஈழத்து வாழ்வியலின் அடுக்கு. வன்னி, புலிகள், போராட்டம், இறுதியுத்தம், முள்ளிவாய்க்கால், மெனிக்பாம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, முன்னாள் புலிகள், மீண்டும் வன்னி என சுழலுகின்ற ஒரு பேரிடர்க்காலத்தின் அறியப்படாத முகம்….

பாதசாரி

ஆதிரை நாவல் முதல் வாசிப்பு முடித்தேன். நுட்பங்களை தவற விடாமல் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.. அதற்குள் அவசரப் பட்டு எழுதத்தூண்டுது அந்தரித்த மனது..! வாழ்க்கைக்கும் வார்த்தைக்குமான இடைவெளித்தூரம் என்பது இந் நாவலில் ஒரு பெருமூச்சின் நீளமே… படைப்பு நோக்கத்தின் அடிப்படைத் தார்மீகம், படைத்த விதத்தில் நம்பகத்தன்மை,…

தமிழ்நதி

எந்தவொரு படைப்பையும் முன்முடிவுகளோடு வாசிக்கக்கூடாதென அண்மைக்காலமாக எண்ணுகிறேன். ஆனால், முகநூலும் சில இணையப் பதிவுகளும் தந்த சித்திரங்களை எளிதில் துடைத்தழித்துவிட்டு வாசிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும். அதிலும் குறிப்பாக அ.இரவியால் எழுதப்பட்ட விமர்சனங்கள்… பிடித்த குழந்தையை கொஞ்சிக் கொஞ்சி கன்னம் வலிக்கப் பண்ணும் நேசம் அது. முப்பதாண்டு…

அ.இரவி (பொங்குதமிழ் இணையம்)

2011 நத்தார் தினங்களில் ஒன்று. ‘ஒருபேப்பர்’ வைத்த விருந்து ஒன்றில் சயந்தன் சொன்னார். “நான் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்.” நான் நினைத்தேன்: ‘அது இலேசான காரியமோ? சிறுபிள்ளை வேளாண்மை. வீடு வந்து சேர்ந்தாலும் உண்ண முடியாதது.’ பிறகு சயந்தன் சொன்னான். “அந்த நாவலுக்கு இயக்கம் என்று பெயர் வைத்திருக்கிறேன்.”…

யூட் ப்ரகாஷ்

“ஆதிரை” என்ற இலக்கிய செழுமை நிறைந்த ஒரு தரமான நாவலை விமர்சிக்கும் தகைமை எனக்கில்லை. எம்மினத்தின் வலிகள் சுமந்த ஒரு புத்தகத்தை, எங்கள் போராட்டத்தின் இன்னுமொரு பிம்பத்தை வரைந்த ஒரு நாவலை, போர் சுமந்த வன்னி மண்ணின் அவலத்தை மீட்ட ஒரு பதிவை, நாங்கள் தப்பியோடி வெளிநாடு வந்து…