மலைநாடான்

அதிகாலை 3.45. புத்தகத்தை மூடி வைத்துவிட்டெழுந்து, சாளரத்தின் திரை விலக்கிப் பார்க்கின்றேன். காணவில்லை… கதவு திறந்து பலகணிக்கு வந்தேன். உனது நிலமல்ல… குளிர் முகத்திலறைந்து சொன்னது. இருக்கலாம், ஆனால் ஆகாயம்.. ? அந்தப் பொதுமைப் பரப்பில் தேடினேன். பிரகாச நட்சத்திரங்கள் இருபதில், பத்தாவது இடம் ஆதிரைக்கு. காணவில்லை…அல்லது கண்டுகொள்ளத்…

ஜே கே

ஐநூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் பக்கம். 24 – 04 – 2009 முள்ளிவாய்க்கால் சந்திராவுடைய வாய் மெல்லத் திறந்திருந்தது. உதடுகளில் மண்பருக்கைகள். “நான் கேக்கிற நிறையக் கேள்வியளுக்கு நீங்கள் ஏன் பதில் சொல்லுறேல்லை…” அத்தார் சந்திராவைக் கட்டிக்கொண்டு வெடித்து அழத்தொடங்கினான். “அண்ணை வெளிக்கிடுங்கோ…” வெள்ளையன் கையை ஆறுதலாகப் பற்றினான். “என்னை விடு….

நேர்காணல் – அம்ருதா மாத இதழ்

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் வாழும் சயந்தன் தமிழில் எழுதும் முக்கிய படைப்பாளி. “ஆறாவடு“ நாவலின் மூலமாக தமிழ்ப்பரப்பில் கூடுதல் கவனத்தைப் பெற்றவர். “பெயரற்றது“ இவருடைய சிறுகதைகளின் தொகுதி. இப்பொழுது வந்திருப்பது “ஆதிரை“. வந்த சில வாரங்களிலேயே அதிகமான உரையாடல்களை “ஆதிரை“ உண்டாக்கியுள்ளது. ஈழப்போர் மற்றும் ஈழப்போராட்டம் என்ற தளத்தில்…

லவநீதன் ஜெயராஜ்

ஒரு நாவல்/நூலினை வாசகரொருவர் வாசித்து முடித்துவிடும் போது ஏற்படும் மன எண்ணங்களில் தான் அதன் வெற்றி தங்கியுள்ளது என நான் நினைக்கிறேன். அதற்காக நூலினை விளங்கமுடியாமல் போவது ஆசிரியரின் பிழை அல்ல, அது நிற்க ஆதிரை நாவலை வாசித்துமுடிந்தவுடன் அதனை மூடி வைக்கலாமா அல்லது இன்னுமொரு தரம் வாசிக்கலாமா…

ரேவதி யோகலிங்கம்

நம்மவர்களின் படைப்புகளில் பிழியப் பிழிய வலியும் வேதனையும் மட்டுமே வெளிப்படுகிறதென்றும் இலக்கிய நளினம் இருப்பதில்லை என்றும் விமர்சிப்பவர்கள் உண்டு.தாயகத்தில் நிகழ்ந்த போர்கள்,இடப்பெயர்வுகளை மையப்படுத்தி ஏராளமான படைப்புகள் வெளிவந்துவிட்டன. சிறையின் மூத்திர நெடியையும் சித்திரவதையின் உச்சத்தில் எதிராளியின் முகத்தில் வழியும் வலியை காமத்தில் உச்சத்தைத் தொட்டது போல் அனுபவிக்கும் விசாரணையாளனின்…