குற்ற உணர்வின் பிரேத பரிசோதனை: யதார்த்தன்
நான் போரினை உணரத்தொடங்கும் போது போர் முடியத்தொடங்கி விட்டது. துப்பாக்கிகளும் பீரங்கிகளும் கிபிர் சத்தமும் உறுமி கேட்ட செவிப்பறைகளை கொண்ட இறுதித்தலை முறையாக நாங்கள் நிற்கின்றோம். தோற்ற தரப்புகளும் வென்ற தரப்பும் எஞ்சிய தர்ம அதர்மங்களை பங்கு போட்டு இன்னும் முடியவில்லை. ஒட்டு மொத்த மானுட இருப்பையும் போர்கள்…
