பூரணம்

பதுங்கு அகழிக்குள்ளிருந்து தலையை உயர்த்திப் பார்த்தேன் என்றாள். காயக்காரர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கப்பல் அவளையொரு தனித் தீவில் கைவிட்டுவிட்டு தொலைவாகப் போய்க்கொண்டிருந்தது. முதுகிலேயோ தொடையிலேயோ எனக்கும் ஒரு வெடி பட்டிருந்தால் என்னையும் ஏற்றிச் சென்றிருப்பார்கள் என்று நினைத்தேன் என்றாள். ‘சின்னக்காயம் எண்டால் ஏத்த மாட்டார்கள்..’ ஒருத்திக்கு வயிறு பிளந்திருந்தது… தொடர்க

புலம்பெயர் தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியே கிடையாது

சமகால ஈழ எழுத்தாளர்களுள் சயந்தன் குறிப்பிடத்தகுந்தவர். ”ஆறாவடு” நாவலின் மூலம் வெகுவாக அறியப்பட்ட இவரின் இரண்டாவது நாவலான “ஆதிரை“ (தமிழினி பதிப்பகம்)  ஈழப்படைப்புக்களில் முக்கியமான வருகை. நாவல்களை மட்டுமல்லாது சிறுகதைகளையும் எழுதும் சயந்தனின் மிக அண்மைய சிறுகதையான “பூரணம்” விவாதத்திற்கு உள்ளானது. ஆதிரை என்கிற பெயரில் பதிப்பகம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இப்போது… தொடர்க

அஷேரா! புனைவெனும் பொய் – நந்தா கந்தசாமி

ஒரு எழுத்து அது ஒரு நாவலாக இருந்தாலென்ன அல்லது அது ஒரு வெறும் கடதாசி எழுத்தாக இருந்தாலென்ன, புனைவெனிலும் அது உண்மைக்கு மிக அருகாக போகுமெனில் அது ஒரு மேன் இலக்கியம் ஆகின்றது . நான் “அஷேராவை” வாசிச்சு நொந்து போனேன். சயந்தனின் “அஷேரா” நாவலில் முதல் பக்கதில்… தொடர்க

ஒரு சொட்டுக் கண்ணீர்

அவர்கள் சாப்பாட்டிற்கு அடிக்கடி போகும் ஒரு வீடிருந்தது. அது சியாமளா அக்கா வீடு. வீதியிலிருந்து விலகி உள்ளே போகின்ற குச்சொழுங்கையில் நான்கு வீடுகளே இருந்தன. ஒழுங்கையின் முடிவில் சியாமளா அக்காவின் வீடு தொடங்கியது. பின்னால் நெடிய பனை மரங்கள் அடர்த்தியாக வளர்ந்த கூடலொன்றிருந்தது. பிறகு வயல் விரிந்தது. தப்பியோடுவதற்குப்… தொடர்க

கிழவனின் உயிர்!

“பொழுதுவிடிந்து வெளிச்சம் பரவியதும், புதைத்த இடத்தில் பூ வைக்கலாமென்று போனால், ஆண்டவரே, பச்சைப் பிள்ளையை மூடிய குழியில் மண்ணைக் கிளறிப் போட்டிருந்தார்கள். என்னால் தாங்க முடியவில்லை..” மர்மக்கதையொன்றின், முதலாவது முடிச்சை இலாவகமாக முடிவதுபோல நடேசுக் கிழவர் ஆரம்பித்தபோது நான் நிமிர்ந்து உட்கார்ந்து தலையை அவரிடத்தில் சரித்தேன். இம்மாதிரியான திகில்… தொடர்க