மெல்பேண், சிட்னி, நியூஸிலான்ட்- சங்கமம்

தென்துருவ வலைப்பதிவர் கழகமும் ஒரு பகிரங்க அறிவித்தலும்.வலைப்பதிவர் சந்திப்பொன்றை ஒஸ்ரேலியாவில நடத்தி நிறைய நாளாச்சு. கடைசியா போன சித்திரை மாசம் எண்டு நினைக்கிறன் ஒரு வலைப்பதிவா சந்திப்பை நானும் வசந்தனும் திறம்பட நடத்தி முடிச்சிருந்தனாங்கள். இந்த இடைப்பட்ட காலத்தில எங்கடை மெல்பேண் வலைப்பதிவர் கழக கண்மணிகளுக்கு நிறைய நேர…

முதலாளியின் அப்பா

என்னுடைய வேலை அனுபவத்தைப் பற்றியும் எழுத வேண்டும் என்ற ஆவல் தாரா வின் ஒரு பதிவினை பார்த்த பிறகு ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அது கட்டாயம் எழுதப்பட்டேயாக வேண்டும் என்ற முடிவினை எட்டியது. அதாகப்பட்டது, ஒஸ்ரேலியா வர முன்பே அங்கு போனால் ஏதாவது பகுதி நேர வேலை செய்தே…

லக்ஸ்மன் கதிர்காம (ர் இல்லை)

போன சனிக்கு முதல் சனிக்கிழமை! முதல்நாள் வரை பாயாசம் காய்ச்சுவதாக இருந்த எண்ணத்தை கதிர்காமரின் இறப்புச் செய்தி கேட்டு கைவிட்டு விட்டம். ஏற்கனவே பிளான் பண்ணியிருந்தது தான் என்றாலும், நாளைக்கு கதிர்காமரின் இறப்பை பாயாசம் காய்ச்சி கொண்டாடினாங்கள் எண்ட பழிச்சொல் வரக்கூடாது பாருங்கோ! அண்டைக்கு காலமை போல என்னோடை…

கிட்டு மாமா பூங்கா

யாழ்ப்பாணத்தில நல்லூருக்கு கிட்டவாக இறுதிக்காலங்களில் நான் யாழ்ப்பாணத்திலிருந்த எங்கள் வீட்டுக்கு அண்மித்தாக கிட்டு மாமா பூங்கா இருந்தது. எனக்கு சுப்பிரமணிய பூங்கா தெரியாது. விருத்தெரிய முதலே அது அழிந்து விட்டது. பூங்கா என்றால் இப்படி இப்படி இருக்குமாம் என்று கேள்விப்பட்டதனை முதலில் நேரடியாக பார்த்தது இங்கு தான். அப்பிடியென்ன…

SuperCup க்கு தமிழ் என்ன இலங்கையில் 3A

மோட்டச்சைக்கிளில் (அதை மோட்டச்சைக்கிள் என்று சொல்லலாமோ தெரியாது. சோமிதரன் தான் கொண்டு வந்திருந்தான். TVS 50 ரகம் போல வேறொன்று. லைசென்ஸ் தேவையில்லையென்ற படியால் இறங்கி ஏறும் சோதனைச்சாவடிகளில் அந்த வண்டிதான் சரியான தெரிவு என அவன் சொன்னான்.) நானும் சோமிதரனும் நாவற்குழி பாலத்தை தாண்டுகிறோம். பாலத்தில் வேலைகள்…