ஜே கே
ஐநூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் பக்கம். 24 – 04 – 2009 முள்ளிவாய்க்கால் சந்திராவுடைய வாய் மெல்லத் திறந்திருந்தது. உதடுகளில் மண்பருக்கைகள். “நான் கேக்கிற நிறையக் கேள்வியளுக்கு நீங்கள் ஏன் பதில் சொல்லுறேல்லை…” அத்தார் சந்திராவைக் கட்டிக்கொண்டு வெடித்து அழத்தொடங்கினான். “அண்ணை வெளிக்கிடுங்கோ…” வெள்ளையன் கையை ஆறுதலாகப் பற்றினான். “என்னை விடு….