ஒரு பூனையின் வாக்குமூலம் – வீடியோ

By சினிமா

தமிழ் இணையச் சூழலில் வீடியோப் பதிவுகள் எவ்வளவு தூரம் பரவல்த் தன்மை கொண்டதென்பது கேள்விக்குரிய ஒன்றாயினும், Google विडो, You tube போன்றவற்றில் கொட்டிக் கிடக்கும் தமிழ் ஒளித் தொகுப்புக்கள் ஓரளவுக்கு அவற்றின் பரவல்த்தன்மையை எடுத்துச் சொல்கின்றன

வீட்டுப் பூனையை வைத்து இரு மாதங்களுக்கு முன்பொரு தடவை செல்லக் கடிகளும் சின்னக் கீறல்களும் என ஒரு ஒளிப்படப் பதிவினை இட்டபோது, இவ்வாறே ஒரு வீடியோ பதிவிட்டால் என்ன எனத் தோன்ற அடுத்த வாரங்களிலேயே பூனையை வைத்து படப்பிடிப்புக்களை மேற்கொண்டிருந்தேன்.

நான்கைந்து வருடங்களுக்கு முன்பு, வீடியோ தொகுப்பினை அறிந்து கொண்ட காலங்களில் அதிலிருந்த ஆர்வம் பின்னர் அற்றுப் போனதெனும் நிலை வரை குறைந்து விட்டிருந்தது. அதனால் எடுத்த ஒளிக் காட்சிகளைத் தொகுத்தல், குரல் கொடுத்தல் என அலுப்படித்த வேலைகளில் ஈடுபடாமலே விட்டுவிட்டேன்.

மீண்டும் இப்போ பதிவுலகில் நான் மிச்சம் வைத்ததாக இருக்கக் கூடாது என்ற நினைப்பில் அவற்றைத் தூசி தட்டியிருக்கிறேன் கொஞ்சம் மினக்கெட்டால் இன்னும் நன்றாகச் செய்திருக்க முடியும்

பிற்குறிப்பு: குளோஸ் அப் காட்சிகளில் பூனை மிரண்டு விடாமல் இருக்க நான் வீடியோ எடுப்பதனைத் தவிர்த்து வேஜினியாவிடம் கொடுத்திருந்தேன்। போஸ் கொடுக்கும் காட்சிகளில் பூனையும் ஒத்துழைப்புத் தந்தது. படத்தை தொகுத்து விட்டு பின்னர் ஓட விட்டு, குரலைப் பதிந்தேன். (இதனையும் சிறப்பாக செய்திருக்கலாம்)



Last modified: April 17, 2007

39 Responses to " ஒரு பூனையின் வாக்குமூலம் – வீடியோ "

  1. ரவிசங்கர் says:

    எங்கடா பூனை உறவினர்களைக் காணோம்? 😉

    ஒளிப்பதிவு அருமை. உண்ட தீனிக்கு வஞ்சகம் இல்லாமல் பூனை நன்றாக ஒத்துழைத்து நடித்துக் கொடுத்து இருக்கிறது.

    வர்ணனையின் உரை பரவால. ஆனா, narration style, tone இன்னும் சிறப்பா செஞ்சிருக்கலாம்.

    தமிழ் வலையுலகின் சிறந்த wildlife photographer விருதுக்குப் பரிந்துரைக்கிறேன் 😉

  2. ரவிசங்கர் says:

    எங்கடா பூனை உறவினர்களைக் காணோம்? 😉

    ஒளிப்பதிவு அருமை. உண்ட தீனிக்கு வஞ்சகம் இல்லாமல் பூனை நன்றாக ஒத்துழைத்து நடித்துக் கொடுத்து இருக்கிறது.

    வர்ணனையின் உரை பரவால. ஆனா, narration style, tone இன்னும் சிறப்பா செஞ்சிருக்கலாம்.

    தமிழ் வலையுலகின் சிறந்த wildlife photographer விருதுக்குப் பரிந்துரைக்கிறேன் 😉

  3. தூயா says:

    பூனையை இப்படியா சித்திரவதை செய்வாங்க..அடுத்த பிறப்பில் நீங்க பூனையா பிறக்கணும்…

    நல்ல பதிவு

  4. தூயா says:

    பூனையை இப்படியா சித்திரவதை செய்வாங்க..அடுத்த பிறப்பில் நீங்க பூனையா பிறக்கணும்…

    நல்ல பதிவு

  5. சின்னக்குட்டி says:

    மிருக வதை தடை சட்டத்திலை உள்ளை போட போறாங்கள்

  6. பொன்ஸ்~~Poorna says:

    ஹல்ல்லோ.. பீப்பிள் ஃபார் அனிமல்ஸிலிருந்து உங்களையும் வேஜினியாவையும் பிடித்துவரச் சொன்னாங்க.. எப்படி வசதி? 😉

    ஏங்க பாவம், அந்தப் பாவப்பட்ட சீவனை வதைக்கிறதைப் படமெடுத்திருக்கீங்க?!!! நான் மட்டும் அஞ்சு வருடத்துக்கு முன்னால பதிவுசெய்யக் கண்டுபிடித்திருந்தால், எங்க வீட்டு அம்மு தன் மகள் பொம்முவுக்கு எலி பிடித்துவந்து சாப்பிடச் சொல்லிக் கொடுத்ததை அழகா பதிவு பண்ணிருப்பேன்.. ம்ஹும்.. அப்ப வலைபதிவும் தெரியலை, அசைபடம் பதிவு பண்ணவும் தெரியலை.. என்னத்த சொல்ல..

    [சயந்தன், எங்க பொம்முவைப் பார்த்திருக்கீங்களா?..]

  7. சயந்தன் says:

    வதையா.. வழமையாக செல்லமாக இப்படித்தான் வெளையாடுவோம். இதில பயன்படுத்தப் படுகின்ற மியாச் சத்தங்கள் இணையத்தில் பெறப்பட்டு சேர்க்கப்பட்டவை. அதாவது பூனைக்கு டப்பிங்..
    மற்றும் படி இதை இன்னும் கொஞ்சம் ஆர்வமூட்டும் வகையில் செய்திருக்கலாம். குறிப்பாக கதை சொல்வது போல அல்லாமல் நிகழ்காலத்தில் நடக்கும் உரையாடல்கள் போல செய்திருக்கலாம்.

    பக்கத்து வீட்டுப் பண்ணையில் முயல் பசு கோழி எல்லாம் வளர்க்கிறார்கள். இவையெல்லாவற்றையும் நடிக்க வைக்க முயற்சியெடுக்கிறேன்.. 🙂

  8. தமிழ்நதி says:

    “மிருக வதை தடை சட்டத்திலை உள்ளை போட போறாங்கள்…”
    சின்னக்குட்டியரை வழிமொழிகிறேன். பெடியள்தான் ‘வீட்டை விட்டுப் போறன்’எண்டு கடிதம் எழுதிவைச்சிட்டுப் போறாங்கள் எண்டால் பூனையுமா…ம்… ஆனா நல்ல வடிவான பூனை…ஆளைப் பாத்தால் கொலஸ்ரோல் இருக்கும்போலை இருக்கு. ஒருக்கா ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போய்ப் பாருங்கோவன்.

  9. மதி கந்தசாமி (Mathy) says:

    என்ன பூனையின்ர சொந்தக்காறர் ஒருத்தரையும் காணேல்ல. எல்லாரையும் விரட்டிவிட்டுட்டீங்களோ?

    -0-

    பூனை இப்ப எங்க நிக்குதோ. என்ன செய்யுதோ. பூனை உங்களுக்கெல்லாம் றொமாண்டிக் லுக் வேற விடோணுமோ? அறுவான்கள்.

    ஹிஹி

    மிச்ச மீதியை கடைசி பெஞ்ச் காறர் வந்து சொல்லுவேர்..

    -மதி

  10. கானா பிரபா says:

    மேனகாஜி, அமலாஜி ஓடியாங்கோ, இந்த அநியாயத்தை வந்து பாருங்களேன்

  11. சினேகிதி says:

    இதைவிடப் பூனையையே கதைக்க விட்டிருக்கலாம் நீங்கள்:-))
    முயல் கதைச்சு நான் பார்த்ததேயில்லை அது எப்ப கதைக்கிகுதாம் எங்களுக்காக?

    நல்லாயிருக்கு சயந்தனண்ணா:-)))

    பிரபாண்ணா அமலாஜிக்கு செய்தி சொல்லியாச்சா?:-)))

  12. சயந்தன் says:

    //மேனகாஜி, அமலாஜி//

    எனக்கு சிவாஜி தான் தெரியும். இதெல்லாம் ஓ.. .இவையையெல்லாம் தெரியாது.

    //முயல் கதைச்சு நான் பார்த்ததேயில்லை அது எப்ப கதைக்கிகுதாம் எங்களுக்காக?//

    என்னை வைத்தே ஒரு படம் எடுக்கத் திட்டம்.. உங்கள் ஏகோபித்த ஆதரவுடன். .

  13. மதி கந்தசாமி (Mathy) says:

    //என்னை வைத்தே ஒரு படம் எடுக்கத் திட்டம்.. உங்கள் ஏகோபித்த ஆதரவுடன். .//

    இப்ப என்ன சொல்லிட்டன் எண்டு இப்படி மிரட்டுறீங்க? :(((

    -மதி

  14. மலைநாடான் says:

    //இப்ப என்ன சொல்லிட்டன் எண்டு இப்படி மிரட்டுறீங்க? :(((//

    இளையதளபதி விஜயை விட அழகாக இருக்கக் கூடிய சயந்தனைப்பார்த்து இப்படிக் கேட்பதைக் கடுமையாக, வன்மையாக, காட்டமாக,(இன்னும் என்னென்ன இருக்கோ அவற்றையெல்லாம் நீங்களே போட்டுங்க) கண்டிக்கின்றேன். சயந்தனின் படம் வெளிவரட்டும் பிறகு ஈழத்து இளைய தளபதி என்டு ஆளாளுக்கு அலையிறதைப் பாக்கத்தானே போறம் ..:)). சயந்தன்! துணிந்து செல்லுங்கள்.

  15. மதி கந்தசாமி (Mathy) says:

    ////இப்ப என்ன சொல்லிட்டன் எண்டு இப்படி மிரட்டுறீங்க? :(((//

    இளையதளபதி விஜயை விட அழகாக இருக்கக் கூடிய சயந்தனைப்பார்த்து இப்படிக் கேட்பதைக் கடுமையாக, வன்மையாக, காட்டமாக,(இன்னும் என்னென்ன இருக்கோ அவற்றையெல்லாம் நீங்களே போட்டுங்க) கண்டிக்கின்றேன். சயந்தனின் படம் வெளிவரட்டும் பிறகு ஈழத்து இளைய தளபதி என்டு ஆளாளுக்கு அலையிறதைப் பாக்கத்தானே போறம் ..:)). சயந்தன்! துணிந்து செல்லுங்கள்.//

    ஆஆஆஆ…..

    சயந்தன், உங்களுக்கு ஆபத்து எங்கயும் இல்ல. பக்கத்திலயே இருக்குப்போல.

    பார்த்து மகனே பார்த்து.

    இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும்.

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்……..

    -மதி

  16. சயந்தன் says:

    //இளையதளபதி விஜயை விட அழகாக இருக்கக் கூடிய சயந்தனைப்பார்த்து //

    ஆனாலும் அண்ணை நீங்கள் இப்பிடி உண்மைகளைப் போட்டு உடைக்கப் படாது. வசந்தனுக்குத் தெரியும். கறுப்பியக்காவும் இதை தான் ஒரு முறை சொன்னவ.. அது சரி.. உண்மையத்தானே சொல்ல வேணும்..?

  17. சின்னக்குட்டி says:

    இந்த வீடியோக்குள்ளை மலை நாடன் சொன்ன விஜய் இன்ரை தம்பி நிக்கிறார் போலை ..சும்மா ஒரு ஊகம் தான் அதை பார்க்க இங்கே அழுத்தவும்

  18. ரவிசங்கர் says:

    தமிழ்ப் பதிவுலக இராம. நாராயணன் என்று பட்டத்தை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்கிறேன் 🙂

  19. Anonymous says:

    //இந்த வீடியோக்குள்ளை மலை நாடன் சொன்ன விஜய் இன்ரை தம்பி நிக்கிறார் போலை ..சும்மா ஒரு ஊகம் தான்//

    யார் அது யார் அது..

  20. மலைநாடான் says:

    //இந்த வீடியோக்குள்ளை மலை நாடன் சொன்ன விஜய் இன்ரை தம்பி நிக்கிறார் போலை ..சும்மா ஒரு ஊகம் தான் அதை பார்க்க இங்கே அழுத்தவும் //

    சின்னக்குட்டியா கொக்கா? கில்லாடிதானப்பா. ஆனா நான் சொன்னது சரிதானே?:))

  21. சின்னக்குட்டி says:

    ஓம் மலைநாடர் மெத்த சரி தான்… இஞ்சை மேலை பாருங்கோ.. அநோமதையமாய் ஆர் ஆள் ஆள் என்று அவஸ்தை படுவதை… உது பெண் புரசாய் தான் இருக்கோணும்

  22. வி. ஜெ. சந்திரன் says:

    //ஓம் மலைநாடர் மெத்த சரி தான்… இஞ்சை மேலை பாருங்கோ.. அநோமதையமாய் ஆர் ஆள் ஆள் என்று அவஸ்தை படுவதை… உது பெண் புரசாய் தான் இருக்கோணும்//

    :)))))

  23. கானா பிரபா says:

    மலைநாடான்

    உங்களுக்குள்ளை ஆயிரம் பிரச்சனை இருக்கலாம், அதுக்காக சயந்தனை (தலைவாசல்) விஜய் என்று சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  24. சினேகிதி says:

    \\உங்களுக்குள்ளை ஆயிரம் பிரச்சனை இருக்கலாம், அதுக்காக சயந்தனை (தலைவாசல்) விஜய் என்று சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.\\

    prabanna :-))))))

  25. சினேகிதி says:

    \\இளையதளபதி விஜயை விட அழகாக இருக்கக் கூடிய\\

    இதை ஒருதரும் வடிவா வாசிக்கேல்லப் போல ..அந்த “கூடிய வைக் கவனியுங்கோ.

  26. சயந்தன் says:

    பூனைப் படம் போட்டால் அதைப் பற்றிக் கதைக்க வேணும். வேணுமெண்டால் என்னை வைச்சு எடுத்த படத்தை போட்டாப் பிறகு என்னைப் பற்றிக் கதையுங்கோ.. (பாசக் காரப் பயலுக..)
    சின்னக் குட்டி உங்கள் ஊகம் மெத்தச் சரி..

  27. Anonymous says:

    //உங்களுக்குள்ளை ஆயிரம் பிரச்சனை இருக்கலாம், அதுக்காக சயந்தனை (தலைவாசல்) விஜய் என்று சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

    ;)))))))

  28. Anonymous says:

    //பூனைப் படம் போட்டால் அதைப் பற்றிக் கதைக்க வேணும். வேணுமெண்டால் என்னை வைச்சு எடுத்த படத்தை போட்டாப் பிறகு என்னைப் பற்றிக் கதையுங்கோ.. (பாசக் காரப் பயலுக..) //

    எங்க கதைக்கிறது? அதைத்தான் ஓடிப்போக வச்சிட்டீங்களே.. போன இடத்திலயாவது அது சந்தோசமாயிருக்கட்டும்!

  29. துளசி கோபால் says:

    நல்லாத்தான் நடிச்சுக் கொடுத்துருக்கார் உம்ம பூனையார்.

    ஆஸ்கார் அவார்டுக்குப் பரிந்துரை செய்யட்டுமா? 🙂

  30. சயந்தன் ரசிகர் மன்றம் says:

    //உங்களுக்குள்ளை ஆயிரம் பிரச்சனை இருக்கலாம், அதுக்காக சயந்தனை (தலைவாசல்) விஜய் என்று சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

    மலைநாடான், விஜயை விடக் கூடிய என்று எழுதிய பின்னும், சின்னக்குட்டி வீடியோவில் காட்டின பின்னும், இப்படிக்கதைத்தால், வலைப்பதிவுலகில் முதல் தடவையாக ‘கட்அவுட்’ கலாச்சாரத்தை அறிமுகம் செய்ய வேண்டிவரும்.

  31. பருத்திவீரன் says:

    ஏலே…. முத்தழகு….. முத்து…. மச்சான் சும்மா தானே விளையாடினேன்…. இதுக்கெல்லாமா வீட்ட விட்டு போவாங்க… இந்தா என்ன பாரு புள்ள, அதான் கேட்குறோம்லே…. மாமன் ஆசையா விளையாடினா அத போய் பெரிசு படுத்திடு… அட வா புள்ள வீட்டுக்கு போலாம்…. அதான் சொல்லுறொம்லே……

  32. சயந்தன் says:

    //நல்லாத்தான் நடிச்சுக் கொடுத்துருக்கார் உம்ம பூனையார்.

    ஆஸ்கார் அவார்டுக்குப் பரிந்துரை செய்யட்டுமா? :-)//

    துளசியக்கா.. பூனையை வைத்து எனது கனவுப் படத்தை இயக்கிய பின்னர் அதனைப் பரிந்துரை செய்யுங்கள். சில பல காரணங்களால் அது தள்ளித் தள்ளிப் போகிறது. எப்படியும் இந்த வருட இறுதிக்குள் அத் திரைப்படத்தை பூனையை வைத்து இயக்குவேன்.:))படத்தில் நட்புக்காக நாய் மாடு முயல் எல்லாம் நடிக்கின்றன என்பதை மட்டும் இப்போ சொல்கின்றேன்..

  33. முத்தழகு says:

    என்னடா வீரா மப்பா….பப்ளிக் பிளேசில நாசூக்கா நடந்துக்கடா.இப்பிடியே
    குசும்பு பண்ணிக்கிட்டுத் திரிஞ்சான்னு வையு அப்புறம் இந்த முத்தழகு
    கை சும்மா இருக்காது

  34. மோகன்தாஸ் says:

    ஒரு மெய்ல் அனுப்புங்களேன்.

    mohandoss.i@gmail.com

  35. சின்னக்குட்டி says:

    வீட்டை விட்டு கோபிச்சு கொண்டு போன பூனை.. ஜஸ்வர்யா உடைய கல்யாண நிகழ்ச்சியை ஜாலியாக டிவி யில் பார்த்து கொண்டிருப்பதை காண இங்கே அழுத்தவும்

  36. பூனை மச்சான் says:

    சின்னக்குட்டி தந்த இணைப்பில் உன்னைப் பார்த்தேன் காதலியே. நீ நலமாய் சொகுசாய் இருப்பது கண்டு மகிழ்ச்சி. ஆனால் உனக்கு முன்னால் இருக்கும் அந்தக் கறுப்புப் பூனை யாரடி.? உண்மையில் நீ வீட்டில் கொடுமை தாங்காமல் போனாயா.. அல்லது வேறு யாரோடாவது போனாயா..? சொல்லடி.. எங்கே செல்லும் இந்தப் பாதையென்று நானும் போகவேண்டியது தானா..? உன் நினைவில் வாடும்
    பூனை மச்சான்

  37. நித்தியா says:

    கொடுமை சயந்தன்.. கொடுமை..

    நேசமுடன்..
    -நித்தியா

  38. தூயா says:

    உங்கட பூனை இப்போ யாழில் இருக்கு…போய் பாருங்க

  39. Anonymous says:

    ஒண்டைக் கவனிச்சனிங்களே… பூனைக்கும் சயந்தனுக்கும் என்ன தொடர்பு… அவனவன்… பொட்டையள படம் எடுத்து போட்டுக் கொண்டு இருக்க.. இவர் பூனைப் படம் எடுத்து போடுறார்… என்ன்மோ நடக்குது ஒலகத்தில… இது ஒரு பூனை abuse…

× Close