
செயற்கை நுண்ணறிவு — ஓர் அறிமுக வகுப்பு
இன்று செயற்கை நுண்ணறிவு நம் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் தொட்டு விரிந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகையில் நாம் அதனுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம். அது இல்லாமல் நமது வாழ்க்கை இயங்க முடியாத நிலையை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால், நாம் உண்மையில் செயற்கை நுண்ணறிவை அறிந்திருக்கிறோமா? அது எவ்வாறு செயல்படுகிறது? அதன் சாத்தியக்கூறுகள் என்ன? அதன் எல்லைகள் என்ன?
நமது தொழில், கல்வி, அன்றாடச் செயல்பாடுகள் ஆகியவற்றில் அதை எவ்வாறு திறம்படப் பயன்படுத்திக் கொள்ளலாம்?
அதேசமயம், அதைத் தவறாகப் பயன்படுத்துவது நமது அறிவாற்றலை மழுங்கடிக்குமா? நமது கற்றல் முறைகளைச் சிதைக்குமா? நமது பொழுதை வீணடிக்குமா? நமது அசல் சிந்தனையே அதனால் இல்லாமல் போகக்கூடுமா?
இந்தக் கேள்விகளை மையமாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவின் இயல்பு, செயல்பாடு, சாத்தியங்கள், எல்லைகள், பயன்பாடுகள் மற்றும் அதனால் உருவாகக்கூடிய சிக்கல்கள் குறித்து ஓர் அறிமுக வகுப்பு.
பல்வேறு துறைகளில் கல்வி கற்றுக்கொண்டிருப்பவர்கள், பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள், கலை மற்றும் இலக்கியத் துறைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் வகையில் இவ்வகுப்பு அமையும்.
முனைவர் பிரகாஷ் செல்வக்குமார் இவ்வகுப்பை நடத்துகிறார். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் துறையில் 21 ஆண்டுகள் அனுபவம் உடையவர்.
இது தொழில்நுட்ப நிபுணர்களுக்கான வகுப்பு அல்ல. மாணவர்கள் உட்பட அனைவருக்குமானது. ஆனால் தொழில்நுட்பத்தை மேலும் அறிய விழையும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் உதவியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்
நாட்கள் நவம்பர் 20, 21 மற்றும் 22
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com
அறிவிக்கப்பட்ட வகுப்புகள் – இடமிருப்பவை

தமிழும் சைவமும் அறிமுக வகுப்புகள்
தமிழ் மரபிலக்கியத்தை ஓரளவேனும் வாசித்து, ரசித்து, அறிந்துகொள்ளாத ஒருவரால் தமிழ்ப்பண்பாடு, சைவம், வைணவம் ஆகியவற்றைப் பற்றிய அடிப்படைப் புரிதலைக்கூட அடைய முடியாது என்பதே உண்மை.
ஆர்வமுடையவர்கள் இத்தகைய நூல்களை வாங்கி வைத்துக்கொள்வதுண்டு. ஆனால் அவற்றைப் படிக்க முடிவதில்லை. ஏனெனில் அவை நம்முடைய இன்றைய வாசிப்பு முறைக்காக எழுதப்பட்டவை அல்ல. இன்றைய வாசிப்பு என்பது அகவாசிபு அல்லது தனிமனித வாசிப்பு. ஐரோப்பியக் கல்விமுறையின் அறிமுகத்திற்குப் பின்னரே இந்த நவீன வாசிப்பு முறை நம்மிடையே பரவியது. மரபிலக்கியங்கள் வேறொரு வகையான வாசிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டவை.
அந்த வாசிப்பு முறையை அறிந்துகொள்ளாமல் அவற்றைக் கற்றுக்கொள்வது கடினம். அவற்றை அந்தத் தளத்தில் கற்று, அவற்றின் நுட்பங்களைப் புரிந்துகொள்ள, முறையாகப் பயிற்றுவிக்கும் தகுதி கொண்ட ஒருவரின் வழிகாட்டுதல் தேவை.
மரபின் மைந்தன் முத்தையா, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மரபிலக்கியத்தை முறையாகக் கற்றவர். சைவ ஆதீன வித்வான் என்ற மதிப்பையும் பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தை ரசிக்கவும், அதன் நுட்பங்களை உணர்ந்து உள்வாங்கவும் அவர் தொடர்ந்து பயிற்றுவித்து வருகிறார்.
எங்கள் அமைப்பு சார்பில் அவர் நடத்தும் ஐந்தாவது நிகழ்வு இது. இதில் தமிழ் மரபிலக்கியத்தை வாசிப்பதற்கும் ரசிப்பதற்குமான பயிற்சியுடன், சைவத் திருமுறைகள் பற்றிய ஓர் அறிமுகமும் வழங்கப்படும். இது இலக்கண வகுப்பு அல்ல, கவிதைகளை ரசிப்பதற்கான பயிற்சி மட்டுமே.
நாட்கள் நவம்பர் 13, 14 மற்றும் 15
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com
வரவிருக்கும் வகுப்புகள்

இந்திய தத்துவ அறிமுக வகுப்புகள்- ஆறாம் நிலை
இந்திய தத்துவ வகுப்புகள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. நவம்பர் இறுதிவாரம் இந்திய தத்துவ வகுப்பின் ஆறாம் நிலை நிகழவுள்ளது. ஐந்தாம் நிலை முடித்தவர்கள் பங்கெடுக்கலாம்
நாள் 27 ,28 மற்றும் 29
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

கருத்துகள்