
https://www.southboundreview.com/
அன்புள்ள ஜெ,
வெள்ளிமலையில் சவுத்பவுண்ட் ரிவ்யூ தொடர்பான சந்திப்பு செப்டம்பரில் நிகழ்ந்தது. அந்நிகழ்வு நமது முதல் இதழ் வெளிவரும் முன்பாக நடந்ததால், ஒவ்வொரு பகுதி குறித்தும் வரைவை அளித்து, அது எப்படி அமைய வேண்டும், எவ்வாறு நாம் அதை மேலும் செறிவாக்கலாம், எடிட்டரும் பங்களிப்பாளர்களும் புரிந்துகொள்ள வேண்டியது என்ன எனப் பல விஷயங்கள் பேசப்பட்டன. அதில் பங்குகொண்டவர்களில் பலர் நம் இதழுக்காக எழுதவும் தொடங்கிவிட்டனர்.
இதழ்கள் வெளிவரத் தொடங்கி சில வாரங்கள் ஆன நிலையில், வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் பலர் இதில் பங்களிப்பாற்ற விரும்புவது குறித்து அறிந்தோம். அது தொடர்பான ஒரு கலந்துரையாடல் நடந்தால் பங்களிப்பாற்ற நினைப்பவர்களுக்குச் சில தெளிவுகள் கிடைக்கும் என்பதால் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கிறோம். ஆசிரியர் குழுவின் எதிர்பார்ப்புகள், புதிய கருத்துகள், செயல்திட்டங்கள் எனப் பலவற்றை இதில் கலந்துரையாடலாம் என்பது திட்டம்.
இந்தச் சந்திப்பை ஐரோப்பா மற்றும் பிரிட்டன் (UK) வாழ் நண்பர்களுக்கு மட்டும் என வகுத்துள்ளோம். ஏனெனில், மிகுதியான நண்பர்கள் கலந்துகொண்டால் அனைவரும் பேச நேரமிருக்காது. ஆனால், இதே வகையில், வரும் நாட்களில் US நண்பர்களுக்கும் இந்திய நண்பர்களுக்கும் நடத்தலாம்.
இந்திய நேரப்படி நவம்பர் 1ஆம் தேதி இரவு 9:30 முதல் 11:00 மணி வரை நிகழும்.
இணையான ஐரோப்பிய நேரம்: CET 5:00 PM to 6:30 PM
இணையான UK நேரம்: GMT 4:00 PM to 5:30 PM
கலந்துரையாடல் தொடர்பான சூம் லின்க் விபரங்கள்:
Southbound Communication is inviting you to a scheduled Zoom meeting.
Topic: Southbound Review – UK and Europe circle meeting
Time: Nov 1, 2026 09:30 PM Mumbai, Kolkata, New Delhi
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/89188170766?pwd=UE546JJB7Zm3MbssO86akmwMwJgFUq.1
Meeting ID: 891 8817 0766
Passcode: 213272
One tap mobile
+13092053325,,89188170766#,,,,*213272# US
+13126266799,,89188170766#,,,,*213272# US (Chicago)
Join by SIP
நன்றி,
ஆசிரியர் குழு
சவுத்பவுண்ட் ரிவ்யூ

கருத்துகள்