புதுசு கண்ணா புதுசு

புது புளொக்கருக்கு மாறிய பின்னரும் நான் கிளாசிக் வகை வார்ப்புருவையே பயன்படுத்துவதால் புளொக்கரின் புதிய வசதிகளைப் பயன்படுத்த முடியாது இருந்தது. குறிப்பாக லேபிள் இடும் வசதி..

அதற்காக சும்மா இருந்து விட முடியுமா..? இணையத்தில் விழுந்து மூழ்கி புரண்டு எழுந்ததில் கிடைத்த அறிவுத் துணுக்குக்களை முன்வைத்து எனது பதிவிலும் லேபிள்களைக் கொண்டு வந்திருக்கிறேன். அதற்காக ஒரு வெறும் பதிவினை வெளியிட வேண்டிய கட்டாயம். இதற்கு முன்னைய பதிவு அதற்காகத் தான்.லேபிள்களைச் சுட்டுவதன் மூலம் திரட்டப்படும் பதிவுகள் இந்தப் பிரிவுகள் பதிவின் உள்ளடக்கத்திலேயே திரட்டப்படும்.

புளொக்கர் தரும் லேபிள் வசதிகளைப் பரிசோதித்த போது அவற்றின் லேபிள்களை சுட்டினால் அவை குறித்த முழுப் பதிவுகளும் மொத்தமாய் பதிவு உள்ளடக்கத்தோடு வருகின்றன. உதாரணமாக அனுபவம் என்ற லேபிளில் 17 பதிவுகள் இருப்பின் அந்த 17 பதிவுகளும் ஒரே பக்கத்தில் தோன்றுவது அத்துணை நல்லது அல்ல.

நான் இட்டிருக்கும் லேபிள்கள் அவற்றிற்குரிய பதிவுகளின் தலைப்புக்களையும் பதிவு பற்றிய மேலோட்டத்தினை மட்டுமே தரும். இது பக்கம் இலகுவில் தரவிறங்க ஏதுவாகிறது. என்னுடைய லேபிள்கள் பெரும் பிரிவுகள் என்ற தலைப்பில் பக்கத்தே உள்ளது.

இது பற்றிய தொழில் நுட்ப விபரங்களைப் பின்னர் எழுத இருக்கிறேன்.

16 Comments

  1. வாழ்த்துக்கள் சயந்தன்.
    பக்கம் நல்லா லட்சனமா பார்ப்பதற்கு கண்ணுக்கு இதமா இருக்கு.

  2. வாழ்த்துக்கள் சயந்தன்.
    பக்கம் நல்லா லட்சனமா பார்ப்பதற்கு கண்ணுக்கு இதமா இருக்கு.

  3. நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.. இது rss பயன்படுத்தி செய்ததா..?

  4. நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.. இது rss பயன்படுத்தி செய்ததா..?

  5. சயந்தன்!
    கலக்கப்பு;கலக்கு!
    வாழ்த்துக்கள்
    யோகன் பாரிஸ்

  6. சயந்தன்!
    கலக்கப்பு;கலக்கு!
    வாழ்த்துக்கள்
    யோகன் பாரிஸ்

  7. நன்றி மாசிலா..
    அநாநி நீங்கள் சொன்னது சரி..
    யோகன் நன்றி.. உங்கடை வலைப்பதிவில வெட்டுக் குத்தாமே..

  8. நன்றி மாசிலா..
    அநாநி நீங்கள் சொன்னது சரி..
    யோகன் நன்றி.. உங்கடை வலைப்பதிவில வெட்டுக் குத்தாமே..

  9. அழகாக பட்டியல் இடப்படுகிறது. தவிர உங்கள் பக்கம் அழகு..

  10. அழகாக பட்டியல் இடப்படுகிறது. தவிர உங்கள் பக்கம் அழகு..

  11. நன்றி சீலன், காந்தன்.. இப்போது drop down menu மூலம் பிரிவுகளை வகைப் படுத்தியுள்ளேன்.
    காந்தன்.. முழுப் பரிசோதனை முயற்சிகளும் முடியட்டும். கண்டிப்பாக எழுதகிறேன்

  12. நன்றி சீலன், காந்தன்.. இப்போது drop down menu மூலம் பிரிவுகளை வகைப் படுத்தியுள்ளேன்.
    காந்தன்.. முழுப் பரிசோதனை முயற்சிகளும் முடியட்டும். கண்டிப்பாக எழுதகிறேன்

  13. எனக்கும் கூட நீங்கள் இப்பக்கம் அமைத்த விதம் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது.
    நானும் என் பக்கத்தை முடிந்தவரை திருத்தி உள்ளேன். முடிந்தால் போய் பார்க்கவும்.

  14. எனக்கும் கூட நீங்கள் இப்பக்கம் அமைத்த விதம் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது.
    நானும் என் பக்கத்தை முடிந்தவரை திருத்தி உள்ளேன். முடிந்தால் போய் பார்க்கவும்.

Comments are closed.