சொதி மீதான மறு வாசிப்பும் சோமியின் பாடலும்

நாமோர் உறுதியெடுத்திருந்தோம். வெறுமே அலட்டுகிறோமெனவும், வெறும் வெண்ணைகளாயிருக்கிறோமெனவும், சிரித்துச் சிரித்து வந்த சீனாத்தானா போல சித்தரிக்கப்பட்டிருந்த நிலையில், எங்களாலும் பயனுள்ள வகையில் எதையாவது தரமுடியுமென நிரூபித்திருக்கிறோம். இது ஆரம்பம் தான். இந்த ஒலிப்பதிவில் நிறையப் பயனுள்ள தகவல்களைத் தந்த சென்னைச் சாமி எங்கள் சோமிக்கு நன்றி.



36 Comments

  1. சோமி,சயந்தன்

    சோமின்ர பாட்டு அருமை!
    உண்மையைச் சொல்லட்டுமா, எங்கட ஊரில குஞ்சியப்பு இந்த ராகத்தில தான் ” பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே” என்று பாடுறவர்.:-))))

    சரியான சிரிப்புத்தான்:-))))
    ஆரம்பமே கலக்குது, தொடரட்டும் உங்க அரும்பணி!:-)))

  2. //ஆரம்பமே கலக்குது, தொடரட்டும் உங்க அரும்பணி!:-)))//

    பாத்தியளோ.. நீங்கள் இவ்வளவு நாளும் மாரித் தவளைகள் மாதிரி கத்தியிருந்தாலும் செல்லியக்கா இதை தான் ஆரம்பம் எண்டுறா.. அப்ப உங்கடை பழைய அலட்டல் எல்லாம் வீண். சரியான சொதிப்பயலுகளப்பா நீங்கள்.:)

  3. சயந்தன்,சோமி
    முருகேசருக்கு நான் ஏதும் விட்ட குறை தொட்ட குறையா அறியாத்தனமா பிழை செய்திட்டனோ?
    ஏன் இந்தாள் என்னை உங்களோட தகராறில மாட்டிவிடப் பாக்குது?

    முருகேசரையா கொஞ்சம் என்னில கோவிக்காம நேசமா எழுதுமப்பா!
    மேன்மாரே! இந்தாள் என்னைப் பற்றி ஏதும் சொன்னா நம்பாதேங்கோ, உங்களுக்குப் புண்ணியங் கிடைக்கு, சொல்லிப்போட்டன்.

  4. //சோமி வாற்பேத்தைகளைப் பிடிச்சு சொதி வச்சாரோ//
    😀

    சயந்தன்…சொல்லி வேலையில்லை..
    அந்தமாதிரி இருக்கு!
    பேசுங்கோ!பேசுங்கோ!!
    பேசிக்கொண்டே இருங்கோ.

  5. சோமி! நான் நினைக்கிறன் நீங்கள் கனடாவிலை ஒலிபரப்பாகிற ஒரு குறிப்பிட்ட வானொலிச்சேவையைக் கேட்டிருக்கிறீங்கள் எண்டு. கனநாளைக்குப் பிறகு தமிழ்மணத்துக்கு வந்து என்னென்ன புதினம் எண்டு பாக்க இப்பிடியொரு சொறிக்கதை மன்னிக்கவேணும் சொதிக்கதை. இப்பிடியும் இப்பிடியும் பதிவு போடலாமெண்டு நீங்கள் ஒரு வகுப்பு எடுக்கலாம். ‘ஓடுகின்ற பாய்மரத்தில் காகமானேன்’எண்டு எங்கடை ஆச்சியும் சோமியின்ரை ராகத்திலைதான் பாடுறவ. சோமி!இந்தச் சொதிக்கதையைக் கேட்டாப் பிறகு உங்களுக்குப் புட்டு அவிச்சுத் தாறதைப் பற்றி யோசிக்கவேண்டியிருக்கு. சொதியிலை இவ்வளவு சிறப்புத்தகைமை பெற்றிருக்கிறவர் புட்டுக்கு என்ன சொல்லுவாரோ எண்டொரு தயக்கம்தான் காரணம்.

  6. சோமியின் சொறிக் கதை சூப்பர்..மன்னிக்கணும்.. சொதிக்கதை. புலிச்சொதி பற்றி எனக்கு தெரியாது.. சொதி.. sorry சொறி

  7. kurangkukaL maathiri eenraappa puddai thirumpavum izukkiriyall.

    vaangkik kaddina paththaathe.

    manamoru kurangkaa vawthu sikkEkai puddai izukkaathengkodaa.

    thirumpavum oru

  8. அன்பும் பாசமும் உள்ள தமிழ்நதி அக்காவுக்கு,
    உங்கல புட்டைப் பற்றியும் பரவலாக இலங்கையில அவிக்கிற புட்டுப் பற்றியும் பதிவேதும் போடுறது எண்டால் உங்கள் ஆலோசனைப் படிதான் செய்வன்.

    நீங்களும் முடிந்தால் நீங்கள் வச்சிருக்கிற சமையல் புத்தகத்தில இருந்து சில குறிப்புக்களைச் சொன்னால் எங்களுக்கு உதவியாக இருக்கும்.

  9. அவிக்கிற புட்டுப் பற்றியும் பதிவேதும் போடுறது அடுப்படிலயோ?

    :-))))))))))))

  10. சோமி ராகம் பாடும் போது பா பா தா எனப் பாடுவதை என்னால் உணர முடிகிறது. மற்றவர்களுக்கு எப்படி..?

  11. சோமி, தமிழ்ப்படங்களுக்குப் பாட்டெழுத இன்னும் வாய்ப்புத் தேடி வரவில்லையா???
    [ஏதோ மா, சொதி, பா(ப்)பா என்டு பாடியே ஒப்பேற்றி விட்டார். :O)) ]

    கூனி என்டுறது றால் என்டெல்லோ நினைச்சன்!!

    அடுத்த பதிவாய் சம்பல் எப்பிடிச் செய்யிறது என்டு போடுவீங்களோ தம்பிமார்?

  12. நல்லாத்தான் சொதிக்கிறீங்கிள் இரண்டுபேரும்…மூன்றுதரம் பாலா?? இங்க ஒருதரம் பால் விடச்சொன்னாலே அம்மாவும் அக்காவும் அடிக்கத்தான் வருவினம்.

    சின்னவயசில துலைஞ்சு போன என்ர பெரியம்மான்ர மகனை இன்னும் தேடுறம் நாங்கள்.

    எப்ப பாயாசம் வைக்கிறீங்கள்?? எப்பிடி உங்கட குரல்பதிவு மட்டும் நல்ல தெளிவா இருக்கு??

  13. பருத்தித்துறை வடை பற்றி நீங்கள் எப்பிடி கதைக்கலாம்?? சோமியண்ணா திருகோணமலையெல்லோ?? அப்ப திருகோணமலை வடை பற்றிச் சொல்லுங்கோ..பருத்தித்துறை எங்கட ஏரியாவாக்கும்.

  14. சயந்தன், சிரிக்கிறத குறைச்சாச்சு ! அப்படியே பேசுறதையும் குறைச்சு இனி சோமிய மட்டும் பாட விட்டுப் பதிவு போடுங்கோ 😉

    நீங்க சொல்லித் தான் இந்த சொதிப் பத்தி தெரியும்.

    சுவிஸ் உணவு பத்தியும் குறிப்பு தந்தா சாரல் பதிவு உலகத்தரத்தில இருக்குமில்ல 😉

    சாரல் header படங்கள் அனைத்தும் அருமை

  15. சினேகிதி, நான் பருத்திதுறைக் காரனுங்கோ….தயவுசெய்து என் வலைத்தல்த்தைப் பார்க்கவும். வேலாயுதம் பாடசாலைக்குப் பினால்தான் அப்பாவிண்ட வீடு இருக்கு

  16. //எப்பிடி உங்கட குரல்பதிவு மட்டும் நல்ல தெளிவா இருக்கு??//

    அதி நவீனமானதும் உச்ச நுட்பத் திறன் வாய்ந்ததும் மிகு செயற்திறன் மிக்கதுமான வழி முறைகளினைப் பின்பற்றுகின்றோம்.

    அல்லது..

    குரல்கள் எப்போதும் தெளிவாகவே வரும்.:)

  17. நான் வந்து கஸ்ரப்பட்டுக் கோள் மூட்டி விட்டேன். ஆனா யாருமே என்னைக் கண்டுக்கலை.. எனக்கு அழுவையா வருது.. ப்ளீஸ் யாராச்சும் என்னை கண்டுக்குங்கப்பா..

  18. கருத்தெழுதியவர்களுக்கு நன்றி சொல்லிப் பின்னூட்டம் போட்டால் அவ்வப்போது உங்கள் பதிவை தமிழ்மண முகப்பில் வைத்திருக்கலாமே..?

  19. கொன்னுட்டீங்க சோமி

    ஒலிப்பதிவைக் கொஞ்சம் சத்தமா வச்சுக் கேட்டேன், பக்கத்து வீட்டில சேடம் இழுத்துக் கொண்டிருந்த கிழவன் உங்கட சொதிப்பாட்டு கேட்டு அவுட்.

  20. பிரபா அண்ணை ஏதோ எங்களால் முடிந்த சமூக சேவையைச் செய்யுறம்.

    சயந்தன், கதைச்ச எனக்கே போரடிக்குமாப்போல கிடக்கு இனி மெய்யாலுமே பிரியோசனமா கதைப்பம் அப்பதான் டிசே,பெயரிலி பாலபாரதி உள்ளிட்ட பெரியவர்களும் பயனுள்ள விடையங்களை பேசுபவர்களும் இந்தப் பக்கம் வருவார்கள் எண்டு நேற்று ஒரு வலைப் பதிவர் சொன்னார்.

  21. //அப்பதான் டிசே,பெயரிலி பாலபாரதி உள்ளிட்ட பயனுள்ள விடையங்களை பேசுபவர்களும் இந்தப் பக்கம் வருவார்கள் //

    அப்ப இதுவரை வந்திருக்கிற செல்லி முருகேசர் பொபி தமிழ்நதி வரவணையான் சோமி ஸ்ரேயா சினேகிதி ரவிசங்கர் கானா பிரபா இவையெல்லாம் பயனற்ற விடயங்களையோ பேசுகிறார்கள்.. :))

  22. //அப்ப இதுவரை வந்திருக்கிற செல்லி முருகேசர் பொபி தமிழ்நதி வரவணையான் சோமி ஸ்ரேயா சினேகிதி ரவிசங்கர் கானா பிரபா இவையெல்லாம் பயனற்ற விடயங்களையோ பேசுகிறார்கள்.. :)) //

    அதுதானே, இந்தக் கொடுமையைத் தட்டிக்கேட்க நாதியில்லையா?

  23. //அப்ப இதுவரை வந்திருக்கிற செல்லி முருகேசர் பொபி தமிழ்நதி வரவணையான் சோமி ஸ்ரேயா சினேகிதி ரவிசங்கர் கானா பிரபா இவையெல்லாம் பயனற்ற விடயங்களையோ பேசுகிறார்கள்.. :)) //

    நல்ல வேளை நான் பின்னூட்டம் போடாதது,அல்லாட்டி என்ர பேரையும் உந்தப் பட்டியலில சேத்திருப்பியள்.

  24. சொதி திருநெல்வேலியில் பழக்கமான ஒரு சொல். எங்க பக்கத்து ஆட்கள்
    விருந்து விசேஷம் என்றால் செய்வது
    அந்த பால் சொதி.
    கல்யாணத்துக்க்கு மறுநாள் மாப்பிள்ளைவீட்டு சாப்பாடு இருக்கும்
    மறுவீட்டு சாப்பாடு என்று அதில்
    கண்டிப்பாக தேங்காய்ப்பால் சொதி
    இருக்கும்.
    உங்கள் குரல் பதிவு கேட்க அருமையாகவும் …சிரிப்பாவும் இருக்கு..அதுவும் நடுவில் நடுவில் போட்டுக்கொள்ள சில வார்த்தைகள் என்று சொல்கிறீகளே அந்த வகையிலே நிச்சயமாக சொல்லப்போனால் இப்பதிவு நல்லாருக்கு. தொடருங்க தொடருங்க.

  25. நீங்களும் உங்கள் …….
    ஒரு சர்வதேச வலைத்தளத்தில் எழுதும் போது ஒரு பொதுவான விடயத்தை
    எழுதவும்.

  26. ஹி ஹி ஹி ஹி சொதி பாட்டு சூப்பர்.
    பால் சொதி
    மீன் சொதி
    கூனி சொதி
    புளி சொதி
    ..ஏன் முட்டை சொதியை விட்டுட்டுங்கள்??? :
    ( அடுத்த முறை நேயர் விருப்பமாக முட்டை சொதி பற்றி கதைக்கணும் நீங்க.

  27. வணக்கம்.

    சொதி குறித்த ஒலிபரப்பு அருமை. நன்றி. பின்னிழையில் ஓடும் நகைச்சுவைக்கு கூடுதல் நன்றி.

    காய்கறி இருந்த சொதி ஒருமுறை சாப்பிட்டதுண்டு. ஈழ நண்பர், யானையடி துறவு – சொந்த ஊராய் கொண்டவர்; அவர் வீட்டில் சோற்றுடன் சேர்த்து சாப்பிட்ட பின் சில மணித்தியாலங்கள் தலைச் சுற்றிக் கொண்டிருந்தது. தேங்காய் பாலின் கொழுப்புதான் காரணமாயிருந்திருக்க வேண்டும் 😉

    திருமணம் செய்து கொண்ட வகையில் உறவினரான எனது இந்திய மாமிகளில் ஒருவர், கோவில்பட்டி பக்கம். பெண் பார்க்கும் போதோ அல்லது பெண் புக்கம் நுழைந்த பிறகோ, பெண் எப்படி சொதி வைக்கிறார் என்பதை சோதிப்பார்களாம், நெல்லை மாவட்டத்தில். அவர் சொன்னது நினவிலுள்ளது.

  28. முத்துலட்சுமியின் கருத்துப்படியும் வாசனின் பின்னூட்டத்தின்படியும் தமிழகத்தில் நெல்லை மாவட்ட திருநெல்வேலிப் பகுதிகளில் சொதி உண்டென்பது நிரூபனமாகிறது. தமிழக வழக்கு மொழிகளில் சொதி என்ற சொல் இல்லையென தவறான தகவலைத் தந்தமைக்காக சோமியை பகிரங்கமாகக் கண்டிக்கிறேன். 🙂 அதற்கான விளக்கத்தினை அவர் இங்கு பின்னூட்டமாக இட வேண்டும் என தீர்ப்பளிக்கிறேன்.

  29. Sothi is available in the deep south of Tamilnadu. I like it eventhough its not my favourite. But I have never heard of these many varieties in SOTHI. 🙂

    The chat was interesting and useful 😉

  30. கொட்டை எடுத்து.. பிசைந்து… என்னடா கதை??
    சி சி சி சி சி என்ன பழக்கம் சோமி…

  31. வலைப்பதிவில பரபரப்புகளை ஏற்படுத்திய சோமிக்கு சொதிச்சோமி என்ற பட்டப் பெயரைத் தந்த அவரை பிரபலப்படுத்திய இந்த மாதிரி ஒலிப்பதிவுகள் இப்போ ஏன் வருவதில்லை..

    பொடியள் செட்டிலாயிட்டாங்கள்..

Comments are closed.