மெல்பேணில் இசை நிகழ்வு

Image hosted by Photobucket.com இன்று மெல்பேணில் தமிழர் புனர்வாழ்வு கழக நிதிக்காக இன்னிசை மாலை நிகழ்வொன்று நடைபெற்றது. போயிருந்தேன்.

வசந்தனும் வந்திருந்தார். அவர் என்னிடம் இலங்கையிலிருந்து கொண்டு வரச் சொன்ன சில புத்தகங்களையும் நானாக கட்டாயம் படியும் எனச்சொல்லிக் கொடுத்த ஷோபா சக்தியின் தேசத்துரோகிகள் தொகுப்பினையும் பெற்றுக்கொண்ட அதே வேளை எனக்கு இரவு வேலை நேரம் நேரத்தினை போக்குவதற்காக மட்டும் சாண்டில்யனின் கடல் புறா மூன்று தொகுதிகளையும் கொண்டு வந்து தந்திருந்தார்.

நிகழ்வின் ஆரம்பத்திலிருந்தே மேடையில் அந்த இசையமைப்பாளரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு வேளை அவராக இருக்குமோ என்று யோசிப்பதும் பிறகு.. இருக்காது அவர் இப்பிடி மேடை நிகழ்ச்சியில் பாட்டெல்லாம் பாட வருவாரோ என்று சிந்திப்பதுமாக இருந்தேன்.

Image hosted by Photobucket.com அப்போது அமைக்கப்பட்டிருந்த திரையில் அவரைக் காட்டினார்கள். அவரே தான்.
ஜோய் மகேஸ்வரன்.
தமிழீழ பொருளாதார வள ஆலோசகர், தவிரவும் நடந்து முடிந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பெரும்பாலானவற்றில் விடுதலைப்புலிகள் தரப்பில் பங்குபற்றியவர்களில் ஒருவர். விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட இடைக்கால நிர்வாக சபை கட்டமைப்பு குழுவில் அங்கம் வகித்தவர்.

இன்றைய நிகழ்வில் அவரது சொந்த இசைக் குழுவே நிகழ்ச்சியினை வழங்கியது. சினிமாப் பாடல்கள் தான். ஒரேயொரு..!! புலிகளின் பாடலும் மற்றுமொரு சுனாமி பாடலும் பாடினார்கள். சுனாமி பாடலை ஜோய் மகேஸ்வரன் பாடினார். அவரே நிகழ்வின் இறுதியில் சந்திரமுகியின் அண்ணனோடை பாட்டு.. ஆட்டம் போடுடா என்ற பாடலையும் பாடினார். அவரின் மனைவியே அறிப்புச் செய்தார்.

Image hosted by Photobucket.com வெளிநாட்டு மக்களுக்கு ஜொலியான ஆட்டம் போட வைக்கின்ற, வாய்விட்டு சிரிக்க வைக்கின்ற, களிப்பூட்டும் Entertainment ஒன்றினை கொடுத்தே தாயகத்தில் அவதியுறும், அல்லல் படும் மக்களுக்கு துயர் துடைக்க வேண்டியிருக்கிறது என்ற உண்மை உறைத்தாலும், நிகழ்வு நிறைவு.

18 Comments

  1. “உன் இடது கை செய்வதை வலது கை அறியாதிருக்கட்டும்”

  2. “உன் இடது கை செய்வதை வலது கை அறியாதிருக்கட்டும்”

  3. //இலங்கையிலிருந்து கொண்டு வரச் சொன்ன சில புத்தகங்களையும்//

    அண்ணோய்,
    “சில” எண்ட சொல்லின்ர அர்த்தத்தை ஒருக்காச் சொல்லுவியளோ?

  4. //இலங்கையிலிருந்து கொண்டு வரச் சொன்ன சில புத்தகங்களையும்//

    அண்ணோய்,
    “சில” எண்ட சொல்லின்ர அர்த்தத்தை ஒருக்காச் சொல்லுவியளோ?

  5. என்ன ஒரு ஐம்பது அறுபது இருக்குமே?

  6. என்ன ஒரு ஐம்பது அறுபது இருக்குமே?

  7. எழுதிக்கொள்வது: Shiyam Sunthar

    இவர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட பாடகர்களா?

    23.40 7.8.2005

  8. எழுதிக்கொள்வது: Shiyam Sunthar

    இவர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட பாடகர்களா?

    23.40 7.8.2005

  9. சில என்பதற்கு குறைந்தபட்சம் இரண்டாவது இருக்க வேணும்.

  10. சில என்பதற்கு குறைந்தபட்சம் இரண்டாவது இருக்க வேணும்.

  11. எழுதிக்கொள்வது: Sayanthaa

    /எனக்கு இரவு வேலை நேரம் நேரத்தினை போக்குவதற்காக மட்டும் சாண்டில்யனின் கடல் புறா மூன்று தொகுதிகளையும் கொண்டு வந்து தந்திருந்தார்./ You will start to save your next $800. I think you should give more than $800 for “KADALPURA”

    8.52 8.8.2005

  12. எழுதிக்கொள்வது: Sayanthaa

    /எனக்கு இரவு வேலை நேரம் நேரத்தினை போக்குவதற்காக மட்டும் சாண்டில்யனின் கடல் புறா மூன்று தொகுதிகளையும் கொண்டு வந்து தந்திருந்தார்./ You will start to save your next $800. I think you should give more than $800 for “KADALPURA”

    8.52 8.8.2005

  13. எழுதிக்கொள்வது: Appu

    ஏனுங்க? ஆண் பாடகர்கள் யாருமே இல்லயா..? இல்ல.. நீங்க கண்டுக்fiyah..?

    12.44 8.8.2005

  14. எழுதிக்கொள்வது: Appu

    ஏனுங்க? ஆண் பாடகர்கள் யாருமே இல்லயா..? இல்ல.. நீங்க கண்டுக்fiyah..?

    12.44 8.8.2005

  15. எழுதிக்கொள்வது: Naan Thaan

    //ஏனுங்க? ஆண் பாடகர்கள் யாருமே இல்லயா..? இல்ல.. நீங்க கண்டுக்fiyah..?//

    ஆமால்ல!

    19.26 8.8.2005

  16. எழுதிக்கொள்வது: Naan Thaan

    //ஏனுங்க? ஆண் பாடகர்கள் யாருமே இல்லயா..? இல்ல.. நீங்க கண்டுக்fiyah..?//

    ஆமால்ல!

    19.26 8.8.2005

  17. எழுதிக்கொள்வது: periya padahi

    every night in my dreams i see you……
    i feel you…….
    that is is how i know you………..
    go onnnnnnnn
    iyyy enakum pattu varuthu

    18.26 10.8.2005

  18. எழுதிக்கொள்வது: periya padahi

    every night in my dreams i see you……
    i feel you…….
    that is is how i know you………..
    go onnnnnnnn
    iyyy enakum pattu varuthu

    18.26 10.8.2005

Comments are closed.