பாவியர் போற இடம்!

By சினிமா

பாவியர் போற இடம் பள்ளமும் திட்டியும் எண்டு சொல்லுவினம். ஆனா நான் பாவியில்லையே.. அப்பாவியெல்லோ!
அடச்சே… ஒரு நிமிச நேரத்தில எல்லாம் நடந்து முடிஞ்சுது.

150 டொலர்!

ரயிலில் கட்டணமின்றி பிரயாணம் செய்வது குற்றம் தான். அட.. ஆகக் குறைந்தது அந்தக் குற்றத்தை புரிந்திருந்தாலாவது தண்டம் அறவிட்டிருக்கலாம். போயும் போயும்.. ரயிலில் முன் சீற்றில் கால் வைத்ததற்கெல்லாம் தண்டம் அறவிடுவார்களா..?

அது குற்றம் என கண்ணுக்கு தெரியத்தக்கதாக எழுதி வைத்த பின்னரும் அவ்வாறு பிரயாணம் செய்தால் அறவிடுவார்கள் தானே!

இன்று மதியம் வகுப்புக்கள் முடிந்து வந்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 30 நிமிட பயணம் அது. ஆரம்பகாலங்களில் அவ்வாறான பயணங்களிடையே புத்தகங்கள் வாசிப்பது வழமை. இலங்கையில் இருந்த வரைக்கும் எந்தவொரு ஆங்கில நாவல்களையும் வாசித்ததில்லை. இங்கே அந்த வாய்ப்பு கிடைத்த போது சரி உலக இலக்கியங்களில் ஒரு வகையை ரயிலில் அற்நிது கொள்வோம் என்ற எண்ணத்தில் வாசிக்க தொடங்கினேன். கொஞ்சக்காலம் தான்.

இடையில் ஒரு MP3 Player வாங்க, உலக இலக்கியமாவது மண்ணாங்கட்டியாவது! என்ன இருந்தாலும் நமது தமிழ்ச்சினிமா பாடல்கள் போல வருமா என்கிற நிலைக்கு கீழிறங்கி கடைசியில் அதுவும் கைவிட்டாயிற்று. (அதற்கு Battery வாங்கி கட்டுப்படியாகவில்லை).

இப்பொழுதெல்லாம் பயண நேரங்களில் ஒரு குட்டித் தூக்கம் மட்டுமே. அது தானே.. ஓடுகின்ற வண்டியில் தூங்குவது போல சுகம் வேறு எங்கு வரும்?

இன்றும் அப்படித்தான்.. லேசாக கண்ணை மூட.. இயல்பாக ஒரு காலின் நுனி முன் இருக்கையில் முட்டிக்கொண்டது. (உன் காலை எடுத்து முன் இருக்கையில் போட்டாய் என்று எழுதேன்.)

கொஞ்ச நெரம் போயிருக்கும். தோளைத்தட்டியது ஒரு கை. சுதாகரித்து கண் விழிக்க ரிக்கெற் பரிசோதகர். ரிக்கெற்றை எடுத்து காட்டினேன். (இத்தனைக்கம் காலை உடனே கீழே எடுத்துவிட்டேன் மரியாதை நிமித்தம்)

ரிக்கெற் எல்லாம் சரியாகத் தான் இருந்தது.

காலை முன்னால் வைத்திருந்ததற்கு ஏதாவது காரணம் இருக்குதா என்று அவர் கேட்டபோது தான்.. ஓஹோ இந்த விசயத்தை அண்ணர் பெரிது பண்ணப் போகின்றார் என்று விளங்கியது.

ஏதாவது சொல்லி வைப்போமே என்று காலில் லேசான வலி என்றேன்.

தன்னிடமிருந்த குறிப்பு புத்தகத்தை விரித்து கொண்டு என் முன்பாக அமர்ந்தார். அந்த கணம் வரைக்கும் நான் எண்ணியது என்னுடைய தூக்கம் போச்சு என்று மட்டும் தான்.

இது பற்றி தான் றிப்போட் குடுக்க வேணும் என்றார். விசயம் கொஞ்சம் பெரிசு தான் என்று யோசித்துக் கொண்டு பேசாமல் இருந்தேன்.
பெயர் கேட்டார் சொன்னேன். என் பெரிய பெயரை (Family Name, அந்த Name இந்த Name சமாச்சாரங்கள் எல்லாம் சேத்து) அவர்களாக எழுதுவதற்கிடையில் எனது தரிப்பிடம் வந்துவிட கூடும் என்பதால் நானாகவே எனது பெயர் முகவரிகளை எழுதி கொடுத்தேன். தவிர களைத்திருந்தமையாலும் காலில் வலி உணர்நத காரணத்தாலும் அவ்வாறு இருக்கவேண்டியேற்பட்டது என்பதனையும் குறித்து கொடுத்தேன்.

முகவரியை உறுதிப்படுத்த வேணும் என்றார். எனது உறவினர் ஒருவரின் தொலைபேசி இலக்கத்தை குடுத்தேன். அங்கிருந்தே அவரோடு பேசினார். உறவினரும் வேலை இடத்தில் நின்று முதலில் என்னவோ ஏதோ என்று பதறி பிறகு உறுதிப்படுத்தினார்.

எல்லாம் முடிந்த பின்னர் நன்றி சொன்னார். இதை றிப்போட் பண்ணுவது தான் தனது வேலையென்றும் தண்டம் குறித்து தெரியாது என்றும் சொன்னார். கிட்டத்தட்ட 150 டொலர் வரலாம் என்றும் சொன்னார்.

ம்.. என்ன செய்வது சில நல்ல பழக்கங்களை 150 டொலர் குடுத்து படிக்க வேண்டியிருக்கிறது.

கொஞ்சக் காலமாகவே என்னுடைய செலவுகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வந்தன. இப்போதெல்லாம் வீட்டிலேயே சமைப்பதாலும் சாப்பிடுவதாலும் வெளிச் செலவு என்பது சரியாக குறைஞ்சு வந்தது. அப்பவே நினைச்சன். என்னடா செலவெல்லாம் குறையிதே ஏதோ நடக்கப் போகிறது என்று. இன்று நடந்து விட்டது.

ஆனி மாசம் வரையும் உனக்கு காலம் கூடாது கவனமாயிரு எண்டு அம்மம்மா அண்டைக்கும் சொன்னவ. ஒரு வேளை உண்மையாயிருக்குமோ? கடவுளே ஆனி மாசத்தை கெதியில முடி!

Last modified: May 11, 2005

12 Responses to " பாவியர் போற இடம்! "

  1. Anonymous says:

    எழுதிக்கொள்வது: maram

    அடப் பாவமே!., சரி விட்டுத் தள்ளிட்டு வேளையப் பாருங்கள்! ஆனால் train ல் வரும்போது இனிமேல் கவனம்!

    12.15 11.5.2005

  2. அப்டிப்போடு... says:

    அடப் பாவமே!., சரி விட்டுத் தள்ளிட்டு வேளையப் பாருங்கள்! ஆனால் train ல் வரும்போது இனிமேல் கவனம்!

  3. Anonymous says:

    எழுதிக்கொள்வது: maram

    அடப் பாவமே!., சரி விட்டுத் தள்ளிட்டு வேளையப் பாருங்கள்! ஆனால் train ல் வரும்போது இனிமேல் கவனம்!

    12.15 11.5.2005

  4. அப்டிப்போடு... says:

    அடப் பாவமே!., சரி விட்டுத் தள்ளிட்டு வேளையப் பாருங்கள்! ஆனால் train ல் வரும்போது இனிமேல் கவனம்!

  5. Anonymous says:

    எழுதிக்கொள்வது: துளசி கோபால்

    எழுதிக்கொள்வது: துளசி கோபால்

    இனிமே காலை மடக்கிவச்சு ‘பத்மாசனம்’ போட்டுக்கிட்டு வரவும்:-)

    சரி, விடுங்க! ஏதோ போன ஜன்மக் கடன்!!!!
    இப்ப வசூல் ஆவுது

    9.37 12.5.2005

    12.4 12.5.2005

  6. Anonymous says:

    எழுதிக்கொள்வது: துளசி கோபால்

    எழுதிக்கொள்வது: துளசி கோபால்

    இனிமே காலை மடக்கிவச்சு ‘பத்மாசனம்’ போட்டுக்கிட்டு வரவும்:-)

    சரி, விடுங்க! ஏதோ போன ஜன்மக் கடன்!!!!
    இப்ப வசூல் ஆவுது

    9.37 12.5.2005

    12.4 12.5.2005

  7. அருணன் says:

    உந்த விளையாட்டு நானும் காட்டிறனான்.ஆனா விடிய 5 மணி ட்ரெய்ன் எண்டபடியா தப்பிவாறன்போல கிடக்கு.இனி கவனமா இருக்கவேணும்.ஆனா நீங்கள் சொன்ன ரயில்தூக்கத்தை அனுபவிச்சா தெரியும் அதிண்ட சந்தோஷம்.அந்த மாதிரி இருக்கும்.ஏணை போல (எங்கட விஜயகாந்திண்ட ஆட்டம்போல எண்டும் சொல்லலாம); ட்ரெயினிண்ட சின்ன ஒரு ஆட்டத்துக்கு அந்த மாதிரி நித்திரைவரும்.

    என்ன செய்யிறது இனியாவது கொஞ்சம் அலேட்டா இருப்பம்.

    ம்…..

  8. அருணன் says:

    உந்த விளையாட்டு நானும் காட்டிறனான்.ஆனா விடிய 5 மணி ட்ரெய்ன் எண்டபடியா தப்பிவாறன்போல கிடக்கு.இனி கவனமா இருக்கவேணும்.ஆனா நீங்கள் சொன்ன ரயில்தூக்கத்தை அனுபவிச்சா தெரியும் அதிண்ட சந்தோஷம்.அந்த மாதிரி இருக்கும்.ஏணை போல (எங்கட விஜயகாந்திண்ட ஆட்டம்போல எண்டும் சொல்லலாம); ட்ரெயினிண்ட சின்ன ஒரு ஆட்டத்துக்கு அந்த மாதிரி நித்திரைவரும்.

    என்ன செய்யிறது இனியாவது கொஞ்சம் அலேட்டா இருப்பம்.

    ம்…..

  9. Anonymous says:

    எழுதிக்கொள்வது: Aval

    ´சரெ இஅன்ய்ஜவது கவனமக் வரவும்#

    13.27 13.5.2005

  10. Anonymous says:

    எழுதிக்கொள்வது: Aval

    ´சரெ இஅன்ய்ஜவது கவனமக் வரவும்#

    13.27 13.5.2005

  11. Anonymous says:

    எழுதிக்கொள்வது: Aval

    எழுதிக்கொள்வது: Aval

    ´சரெ இஅன்ய்ஜவது கவனமக் வரவும்#

    13.27 13.5.2005

    13.30 13.5.2005

  12. Anonymous says:

    எழுதிக்கொள்வது: Aval

    எழுதிக்கொள்வது: Aval

    ´சரெ இஅன்ய்ஜவது கவனமக் வரவும்#

    13.27 13.5.2005

    13.30 13.5.2005

× Close