சமகால இலக்கியக் குறிப்புகள்

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அல்ல என்ற ஜெயமோகனது கூற்று எனக்கு அதிர்ச்சியை அளிக்கவில்லை. ஒருவேளை, அவர் அது இனப்படுகொலையே என்றிருப்பாரானால் மாத்திரமே, “இல்லையே.. இவர் இதைச் சொல்வது தப்பாச்சே.. ஏதேனும் hidden agenda இருக்குமோ ” என்று யோசித்திருப்பேன். மற்றும்படி இலங்கையில் இனப்படுகொலை நடக்கவேயில்லை என்று கோத்தபாய ராஜபக்ச…

குழை வண்டிலில் வந்தவர் யார்..?

“தம்பி ஒரு கொமிக் சொல்லுறன். எலக்ஷென் நடந்ததெல்லே, முல்லைத்தீவுப் பக்கமா வெத்திலையில வோட்டுக்கேட்ட அரசாங்கக்கட்சி ஆளொருவர், எலக்ஷனுக்கு ரண்டு மூண்டு நாளுக்கு முதல், வீட்டு வசதிகள் சரியாக் கிடைக்காத கொஞ்ச சனத்துக்கு கூரைத் தகரங்களை அன்பளிப்பாக் கொடுத்து, வீட்டுக்குப் போடுங்கோ என்று சொன்னவராம். சனமும், நீங்கள் தெய்வமய்யா என்று…

திருத்தியெழுதப்பட்ட கதைகள்

பிரதீபா (சக்திவேல்) என்றொரு நண்பி கொழும்பில் இருந்தார். அப்பொழுது நாங்கள் உயிர்ப்பு என்றொரு இதழை வெளியிட்டுப் பழகினோம். அதற்கொரு ஆக்கம் கேட்டபோதுதான் சோமிதரன் தன் வாழ்நாள் எழுத்துக்களை ஒரு பைலில் இட்டு “என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்” என்ற ரேஞ்சில் தந்திருந்தார். பிறகது தொலைந்து போய்விட்டது என்று மூன்று…

தமன்னாவும் ஒரு ஆபிரிக்க இளைஞனும்

சுவிஸிலிருந்து கனடாவிற்குப் ‘பாய்ந்த‘ தமிழர் ஒருவரை போலந்து நாட்டில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இப்படி பரவலாக தமிழ் சனங்கள் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். சுவிஸில் விசா பிரச்சனைகளின் சிக்கல்களாலும் அதன் முடிவுகளை அறிந்துகொள்ள காலங்கள் வருடங்களை விழுங்குவதாலும் பலரும் அடுத்த தெரிவாக கனடாவினைத் தெரிவு செய்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி…

ஓகே, ரெடி.. இப்பொழுது காலில் விழலாம்

பத்து வயதுச் சிறுவனுக்கு குட்டிப் பிரபாகரன் என்று பட்டம் சூட்டியிருக்கிறார்கள். நான் முல்லைத்தீவில் பிறந்தவன், அதனால் தாய் தந்தையர் கால்களைத் தவிர, மற்றவர் (இந்த வார்த்தைக்குப் பதில் ஒவ்வொருவரும் அந்நியர், எதிரிகள் என்ற வார்த்தைகளை தம்பாட்டிற்குச் சேர்த்திருக்கிறார்கள்.) கால்களில் விழமாட்டேன் என சிறுவன் பேட்டியளித்ததாக வேறு சொல்கிறார்கள். சிறுவன்…