அஷேரா! காலங்கடந்தும் வாழவல்ல ஒரு படைப்பு – எஸ்.கே.விக்னேஸ்வரன்

எழுத்தாளர் சயந்தனின்  ஐந்தாவது நூலும்  மூன்றாவது நாவலுமாகிய அஷேராவை வாசித்துமுடித்த சூட்டோடு இந்தக் குறிப்பை எழுதும் சந்தர்ப்பம் வாய்த்தது ஒருவகையில் தற்செயலானதே. அவரது  சிறுகதைத் தொகுப்பான அர்த்தம்,  நாவல்களான ஆறாவடு, ஆதிரை  ஆகிய நூல்களை  நான் ஏற்கனவே வாசித்திருந்த போதும், ஆறாவடு  நாவலைத் தவிர, மற்றைய நூல்கள் பற்றி…

அஷேரா! ஆறாவடுவின் தொடர்ச்சி – மல்லியப்புசந்தி திலகர்

1990 களில்தான் ஐரோப்பிய நாட்டில் வாழும் இலங்கையர் ஒருவர் இலங்கை வந்திருந்தபோது முதன் முறையாக புலம்பெயர்ந்த ஒருவரை சந்தித்த அல்லது பார்த்ததாக நினைவு. அப்போது அவரை வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் என்றுதான் அழைத்தோம். புலம்பெயர்ந்தவர் என்ற சொல்லே அப்போது தெரியாது. அவர் அழகாக இருந்தார். அவர் ஆங்கிலம் பேசும்…

அஷேரா! உடல் உள ஏக்கங்களின் தேடல் – நிலாந்தி சசிகுமார்

சயந்தனின் படைப்புகளில் ஆறாவடு, ஆதிரை வரிசையில் இன்று அஷேரா. இலங்கைக்கு சம்பந்தமற்ற ஒரு தலைப்பில் போருக்கு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டமைந்த புனைவுகளின் செறிவு. அஷேராவின் வரலாற்றுக்கும் உலகத்தின் அனைத்துப் பெண்களின் கதைகளுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. அந்தவகையில் தான் நாவலை நாம் நோக்க வேண்டும். அதே சமயம் நாவலின்…

அஷேரா! ஈழத்தின் இன்னொரு முகம் – திராவிடமணி

ஈழத்திலிருந்து அகதிகளாக சுவிற்சர்லாந்திற்கு வந்த அருள்குமரன், அற்புதம், என்ற இருவர் கடந்து வந்த பாதைகளின் வலிகளைப் பற்றிப் பேசும் புதினம். அருள்குமரனும், அற்புதமும் ஈழத்தில் பிறந்து, பல்வேறு இயக்கங்களைக் கடந்து உயிர்வாழ்தலின் தேவையுணர்ந்து அந்நாட்டிலிருந்து தப்பித்து சுவிற்சர்லாந்திற்கு வந்து… அகதிமுகாமில் தங்கி, அந்நாட்டுக் குடியுரிமைப் பெற்று வாழ முற்படுகிறார்கள்….

அஷேரா! நீரோட்ட ஆழம் – கஜுரி புவிராசா

துரோகங்களால் இன்று இந்த நிமிஷம் வரை வதைபட்டுக்கொண்டிருக்கிறது ஒரு இனம்… அதன் இன்னல்களை பட்ட வதைகளை சிந்திய சிவப்புத் துளிகளை தெறித்த நிணக்குழம்புகளை எல்லாம் எதிர்காலத்திற்கு கடத்தியாக வேண்டியது காலத்தினது மட்டுமல்ல ஒவ்வொருவருடைய கடப்பாடும்.. காயங்கண்ட சிம்மங்களோ புலிகளோ நாவால் அந்த காயத்தை வருடி வருடி வலி மிகச்செய்து…