இன்னுமொரு உரையாடல் ஒலிப்பதிவு இது. இள வயது நினைவுகள் குறித்து நானும் சோமிதரனும் பேசியிருக்கின்….. ok.. அலட்டியிருக்கின்றோம். அனுபவங்களைப் பேசுதலில் கூட பதின்ம வயது அனுபவங்கள் தான் பெரும்பாலும் பேசப்படுகின்றன. அதனால் அதற்கும் முந்திய குழந்தைப் பராயத்து நினைவுகளைப் பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கின்றோம். (எங்கடை பதின்ம அனுபவங்களை பப்ளிக்கில சொல்வதில நிறைய சங்கடங்கள் இருக்கின்றன என்பது வேறு விடயம்.)
ஒலிப்பதிவுகளை ஒரு போதும் 10 நிமிடங்களுக்கு மேல் அனுமதிப்பதில்லையென்பதில் உறுதியாக இருப்பதனாலும் வலைப்பதிவில் கேட்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் உருப்படியான வேறு வேலைகளும் இருக்கின்றன என்பதனாலும் அதற்கேற்ப வெட்டிக் கொத்தி தொகுக்கும் போது சில வேளைகளில் தொடர்ச்சித் தன்மை இல்லாது போகலாம். ஒவ்வொரு தடவையும் பயனுள்ள வகையில் ஏதாவது பேச வேண்டும் என நினைப்பது உண்டு.. என்ன செய்ய.. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்….