சினிமா

மலைநாடான் மற்றும் கானா பிரபா காலத்திலே…

வேறொன்றும் இல்லைங்க… சும்மா நாங்க முன்று பேர் சேர்ந்து மிகப் பழைய காலத்துப் பாடல்கள் பற்றியும் அதுக்கு அப்புறமா வந்த படத்துப் பாடல்கள் பற்றியும் பேசினோம். நாங்கள் பிறக்கிறதுக்கு முன்பே வந்த பாடல்கள் சில ஏன் எங்களுக்குப் பிடிச்சிருக்கு அந்தப் பாடல்கள் என்ன என்பது தான் இந்த முறைக்கான விசயம். அவ்வப் போது பாடியுமிருக்கிறம் எண்டு சொல்லி உங்களை இப்பவே எச்சரிக்கையும் செய்யிறம்.

வழமையாவே நாங்கள் ஒலிப்பதிவுகளைத் தொடங்கிறதும் முடிக்கிறதும் மொட்டையாத்தான். தொடங்கும் போதாவது வணக்கம் சொல்லுவம். முடியும் போது அதுவுமில்லை. ஆனா இந்த முறை இந்த ஒலிப்பதிவு நீங்கள் ஆரும் எதிர்பார்க்கா வண்ணம் முடிஞ்சிருக்கு. அது என்னெண்டு அறிய ஒலிப்பதிவை முழுசாக் கேளுங்கோ எண்டு சொல்லுறது வீண்வேலை. ஏனென்டால் நீங்கள் ஓட விட்டும் கேட்பியள். எப்பிடியெண்டாலும் கேளுங்கோ.. ஆனா கடைசி நிமிடங்களைக் கேட்கத் தவற வேண்டாம். Play பொத்தானை அழுத்திய பின்னர் சற்றுத் தாமதித்தே ஆரம்பிக்கவும். பொறுமை காக்கவும்



By

Read More

கேரளாவில் சோமிதரனின் பிட்டு அனுபவங்கள்

அண்மையில் சோமிதரன் கேரளா போய் வந்திருக்கிறார். ஏற்கனவே அவருக்கு பிட்டு அனுபவங்கள் இருப்பினும் பிட்டுக்குப் பிரபல்யமாகப் பேசப்படுகின்ற கேரளாவில் அவரது பிட்டு அனுபவங்களைப் பற்றிப் பேசுகிறது இப்பதிவு.

மொக்கைப் பதிவு வழங்கி நீண்ட நாட்களாகி விட்டது என்பதனாலும் அதுவே எந்த விதமான புயல்களுக்கும் கால் கோலாய் அமையாது என்ற காரணத்தினாலும் எழுதுவதில் உள்ள ஆர்வமும் தீவிரமும் இல்லாது போய்விட்டதாலும் இவ்வாறான பதிவுகள் இலகுவாகத் தெரிகின்றன.

தவிர சென்ற முறை வெளியான சோமியை திட்டமிட்டுப் புறக்கணிக்கும் திரைமறைவு நாடகங்கள் என்பதான கிசுகிசுவை பொய்யாக்கவும்..::))))) வெளிவிடுகின்ற இவ் ஒலிப்பதிவைக் கேளுங்கள். பிட்டுப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.



By

Read More

சூடான பதிவர் ரவிசங்கருடன் ஒரு சந்திப்பு

Ravi Dreams ரவிசங்கருடன் நடாத்திய கலந்துரையாடல் ஒலிப்பதிவு இது. வலைச் சூழலில் தினமும் இரண்டு மூன்று பின்னூட்டங்களை மட்டுமே போட்டுக் கொண்டிருக்கும் சூழலில், தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டு பதிவுக் கயமை 🙂 செய்யும் ஒரு வலைப் பதிவர் அவர். ஒரு நாளில் 8 பதிவுகள் இட்டு சாதனை புரிந்த அவர், இதனால் திரட்டிகளின் முதற் பக்கத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து விடுவோமோ என்பாதாலேயோ திரட்டிகளை விட்டு போய்விட்டார். அவருடனான இக் கலந்துரையாடலில் உபுண்டு, வேர்ட்பிரஸ், மாற்று மற்றும் திரட்டிகள் குறித்து அவர் பேசியிருக்கிறார். இவை பற்றி ஏற்கனவே அவர் பல பதிவுகளில் எழுதியும் இருக்கிறார்.

இவ் ஒலிப்பதிவினை ஏலவே கேட்ட ஒருவர் எனக்குச் சொன்னார்.
உங்களுடைய சிரிப்புக்கு போட்டியாக ரவிசங்கர் உருவாகிறார்.



By

Read More

பண்டி (பன்றி) பார்க்கலாம் வாங்க

இது வழமையான ஒரு பன்றிப் பதிவு அல்ல 🙂
நான் வாழ்ந்த யாழ்ப்பாணப் பிரதேசச் சூழலில் பன்றி என்பதனை பண்டி எனத் தான் சொல்வது வழமை. இதுவே சில சமயங்களில் ஆட்களை போடா பண்டி எனத் திட்டவும் பயன்படுகிறது. தமிழகத்தில் கூட பன்றி என்ற சொல் சில இடங்களில் பன்னி எனத் திரிபடைந்திருப்பதை அறிந்திருக்கிறேன்.

இங்கே சுவிசில் நான் வாழும் நகரச் சூழல் அற்ற பெரு வயல்வெளிகளும் ஏரிகளும் பண்ணைகளும் அமைந்திருக்கின்ற கிராமச் சூழல் ஒன்றில் வீட்டிற்கு மிக அண்மையாக இருக்கும் ஒரு பன்றிக் கூண்டை பதிவு செய்து காட்சிப்படுத்துகிறேன். மாலை வெயிலில் வீடியோவிற்கான ஒளி அமைப்பு சரியாக வில்லை. அதனால் என்ன.. ?



By

Read More

காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு

2002 களில இலங்கையில யுத்தம் தவிர்க்கப்பட்டிருந்த அந்த சமாதான காலத்தில தான் எனக்கு நண்பர்களோடு அதிகம் வெளியில சுத்தும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையை சொல்லப் போனால் அதுக்கு பிறகு தான் வீட்டில தேடாமல் விட்டவை. கொழும்பில நான் ராகுலன் செந்தூரன் சோமி இந்த நாலு பேரும் தான் ஒரு செட். அந்தக் காலப்பகுதியில் கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரை திறக்கப் பட்டிருந்தது. அதனாலை பின்னேரங்களில அங்கை தான் நிப்பம். நாலு பேரும் சுத்த வர இருந்தமெண்டால் 9 அல்லது 10 மணி வரை உள்ள நாட்டு விசயம் எல்லாம் அலசுவம்.

நானும் ராகுலனும் மொக்கைக்கு மட்டுமே பெயர் போனவர்கள். சோமியும் செந்தூரனும் ஒருவித அறிவிஜீவித்தனத்தோடை கதைக்கிற ஆக்கள். அப்பிடி அவை கதைக்கும் போது கொமன்ற் அடிக்கிறது தான் எங்கடை வேலை. அதுவே நல்ல சுவாரசியமாக இருக்கும்.

அது மாதிரியான ஒரு அலசல் தான் இது. சோமிதரன் வழமைபோலவே ஒரு வித மிதப்பு நிலையில் இருந்து அறிவுசீவித்தனமாகவே கதைக்கிறார். கேளுங்க..



By

Read More

× Close