சினிமா

பொங்கல் நினைவுகளும் சோமிதரனும்

84 இல் அத்திவாரக் கல்லிட்ட எங்கள் வீடு முழுமை பெற்று முடிந்தது 94 இல் சந்திரிகா கொண்டு வந்த அரையாண்டுச் சமாதான காலத்தில்த் தான் என்றாலும், 88 களிலேயே பூச்சற்ற சுவர்களுடனும், ஒன்றிரண்டு பிரதான கதவுகள் தவிர மொட்டையாக நின்ற வாசல்களுடனும் இருந்த வீட்டினில் நாங்கள் குடி வந்திருந்தோம். ஆயினும் 95 வரை எங்கள் வீட்டீல் எத்தனை தடவை பொங்கல் கொண்டாடியிருக்கிறோம் என்றால் எனக்கு நினைவு தெரிய இரண்டு அல்லது மூன்று தடவைதான்.

அந்தக் காலங்களில் அதிகம் பொங்கல் கொண்டாடியது எனது பெரியப்பா வீட்டில்த் தான். பொங்கலுக்கு முன்னைய இரவில் வந்து அவர் அழைத்துச் செல்வார். மின்சாரமற்ற அப்போதைய யாழ்ப்பாணம் எட்டு மணிக்கெல்லாம் உறங்கி விடும். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து கிணற்றில் சில் என்ற தண்ணீரில் முழுகி விட்டுத் திரும்பினால் பெரியப்பா தனது வேட்டியொன்றைக் கட்டி விடுவார்.

அப்போது வெடிகள் வெடிக்கின்ற வழக்கம் எல்லாம் இல்லை. பட்டாசுகளைப் பயன்படுத்திப் புலிகள் ஏவுகணைகளைத் தயாரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அவை யாழ்ப்பாணத்துக்கு தடை செய்யப் பட்டிருந்தன.

(பிற்காலத்தில் இதற்கான மாற்றீடு ஒன்றினை நானே தயாரித்துப் பயன்படுத்தியிருக்கிறேன். அப்போதைய, காலத்துக்கு உதவாத தொலைக்காட்சி அன்ரனாவின் உணர் கம்பிகளை சிறிய அளவில் வெட்டி உள்ளே தீக்குச்சி மருந்துகளை அடைந்து இரண்டு பக்கத்தினையும் குறட்டினால் அமத்தி மூடிவிட்டு அதனை துணி கொண்டு சுற்ற வேணும். அதனை ஒரு தடவை மண்ணெண்ணையில் தோய்த்து எடுத்து விட்டு எங்காவது தூர இடத்தில் – இது முக்கியம் – வைத்து தீ மூட்டினால் சில நிமிடங்களில் டமார். பின்னர் குண்டு வெடித்த இடத்திற்குச் சென்று வெடித்துச் சிதறிய அன்ரனா கம்பியின் சிதறல்களைத் தேடி எடுப்பதுவும், அது எப்படிச் சிதறியிருக்கிறது என ஆராய்வதும் இன்னொரு பொழுது போக்கு. சில வேளைகளில் வெடிக்காது. அடைக்கப்பட்ட கம்பி ஏதாவதொரு பக்கத்தால் திறந்து புஸ் ஆகிவிடும். அது Mission Fail)

கோலங்களில் புள்ளிகள் கோடுகள் வளைவுகள் என பலவகை உள்ளன என்பதை நான் அறிந்து கொண்டது பிறகு தான். முன்னைய காலங்களில் எனக்கு தெரிந்த ஒரேயொரு கோலம் நீள் சதுரத்தில் வரைந்து ஒவ்வொரு மூலைகளிலும் வளைவுகள் போடும் கோலம் தான். ஒவ்வொரு பக்கத்திலும் வாசல் வேறு வைப்பார்கள்.

உலக்கையொன்றினைப் பயன்படுத்தி அதன் நடுவில் மாவினை இட்டு வர அது Double border கோலமாகும்.

பொங்கலுக்கான அடுப்பு இரு வாரங்களுக்கு முன்னரே தயாராகி விடும். பெரும்பாலும் ஒவ்வொருவரும் தமக்கென செய்து கொள்வார்கள். வாளிகளில் மண் குழைத்து அவற்றின் அச்சில் செய்யப்படும் அடுப்பு பின்னர் மாட்டுச் சாணம் கொண்டு பூசி மெழுகப்படும். எங்களுக்கான விசேட அடுப்பக்களை தயாரிப்பதற்கு டம்ளர் பயன்படுத்தப்படும்.

Photobucket - Video and Image Hosting

நான் கோலம் போடுவதற்கு சில தடவைகள் முயற்சித்திருக்கிறேன். முடியாத காரணத்தினால் பெரும்பாலும் உலக்கையை ஆடாமல் அசையாமல் பிடிக்கும் பொறுப்புத்தான் வரும். அதுபோலவே வீபுதி பூசிய அடுப்பிற்கு சந்தனப் பொட்டிடும் வேலையும் வரும்.

எல்லாம் சரியாகத்தான் போகும். ஆயினும் அடுத்த ஒரு விடயத்தினை நினைத்து பயந்து பயந்து மனம் இருக்கும். அது தேவாரம் பாடுவது. பொங்கலின் ஒரு கட்டத்தில் தேவாரம் பாட வேண்டும். அந்த நிகழ்வைக் கடக்கும் மட்டும், எங்கே என்னைத் தனிய பாட விட்டு விடுவார்களோ என லப் டப் அடித்துக் கொண்டேயிருக்கும். நாலைந்து பேரோடு சேர்ந்து பாடினால் கும்பலில கோவிந்தா போடலாம்.

பொங்கல் சூரியன் உதிக்கும் திசை நோக்கித்தான் பொங்கி வழியும் எனச் சொல்லி விட்டு அந்தத் திசையிலேயே பானையைச் சற்றுச் சரித்து வைப்பார்கள். பொங்கல் முடிய படையல் – அது முடிய எனக்கு எப்போதும் பிடித்தமான – நாவிற்கு சுவையை அடுத்தடுத்து மாற்றித் தரும் – புக்கை + வடை

—–இந்த இடத்தில கட் பண்ணி 2003 இல ஓப்பின் பண்ணுறம்—–

தீவில் சமாதான காலம். தைப்பொங்கல் 2003

யாழ்ப்பாணத்திற்கான பாதை திறக்கப்பட்டது. பட்டாசுகள் யாழ்ப்பாணத்திற்கும் ஏனைய பகுதிகளுக்கும் சென்றன. என்னோடு எனது வீட்டில் தங்கியிருந்தார் நண்பர் சோமிதரன். அப்போது சில வெளிநாட்டு வானொலிகளின் யாழ்ப்பாணச் செய்தியாளர் அவர். அன்றைய இரவு ஒரு வானொலியிலிருந்து சோமிதரனைக் கேட்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழா எப்படி இருந்தது?

சோமிதரன் ஆரம்பிக்கிறார்.

மிக நீண்ட காலத்தின் பின்னர் மகிழ்ச்சியுடனும் குதூகலத்துடனும் மக்கள் கொண்டாடினார்கள். இங்கே இப்போதும் வெளியே வாண வேடிக்கைகளும் வெடிச் சத்தங்களும் கேட்டுக்கொண்டிருக்கின்றன.யாழ் நகரம் மிக பரபரப்பாக இருக்கிறதை காணக் கூடியதாக உள்ளது. உண்மையில் யாழ்ப்பாண மக்கள் மிக நிறைவுடன் தைப்பொங்கலை கொண்டாடியிருக்கிறார்கள். ………….. ……… செய்திகளுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சோமிதரன்

நான் சோமியை ஆச்சரியமாகப் பார்த்தேன்.

இங்கை கட் பண்ணுற நாங்கள் வேறெங்கும் ஓப்பின் பண்ணப்போறதில்லை. இனி வருவது இயக்குனர் குரல்

2006 தைப்பொங்கலையொட்டிய காலம்தான். ஒஸ்ரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலியில் தமிழகம் குறித்த ஒரு செய்தி ஆய்விற்காக சோமிதரனைச் செவ்வி கண்டு கொண்டிருந்தேன். அவர் அப்போது உண்மையிலேயே தமிழகத்தில் இருந்தார்.

நன்றி – அருச்சுனா இணையம்

By

Read More

சோதனை மேல்…

தமிழ்மண பதிவு பட்டைக்கான பரிசோதனை

By

Read More

கவிதையில் களவு

சமீபத்தில்.. உண்மையாகவே சமீபத்தில் தான் ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் சோமிதரனுடன் பேசிக்கொண்டிருந்த போது கொழும்பில் அவர் எழுதிய கவிதை ஒன்றினை எடிற் செய்து வெளியிட்ட முன்னைய சம்பவம் ஒன்று தொடர்பாக தனது காரசாரமான கண்டனத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார். (.. மச்சான் எடிற் செய்தனோ.. இல்லை என்ன செய்தனோ.. இண்டைக்கு ஆனந்த விகடனில உம்மடை எழுத்துக்கு அவங்கள் செய்திருக்கிறதை விட மோசமாய் நான் ஒன்றும் செய்யவில்லை.)

1990ம் ஆண்டு இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் நினைவு கூரப்பட்ட இரண்டாவது மாவீரர் தினம்.
யாழ்ப்பாண பகுதியெங்கும் முன்னெப்போதும் பின்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு வார காலம் அனுஸ்டிக்கப்பட்டது. 27 நவம்பர் 90 இறுதி நாளன்று எங்கள் ஊரிலும் ஒரு மேடை நிகழ்வு ஒழுங்கு படுத்தியிருந்தார்கள்.

அதில் நானாக ? எழுதி கவிதை வாசிக்கும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனக்கு நினைவில் உள்ள வரை இதுதான் நான் எழுதி வெளிக் கொண்டு வந்த முதலாவது கவிதை.

குரலிலும் உடம்பிலும் கொஞ்சம் நடுக்கத்தோடு வேட்டி கட்டி இரண்டு கைகளாலும் ஒலிவாங்கியை அழுத்திப் பிடித்து அந்த நீண்ட கவிதையை வாசித்துக் கொண்டிருந்த போது எனது வயது 10.

மாவீரர் தினம் வந்ததுவே மாவீரர் தினம் வந்ததுவே என ஆரம்பித்து சாவிலும் தம்மை சந்தனமாக்கினர் என்றவாறாக தொடர்ந்தது அக்கவிதை.

அப்போதே எனக்கு எதுமை மோனை பற்றிய புரிதல் இருந்தது. சொல்லப் போனால் எதுகை மோனையுடன் ஒரு ஓசைச் சந்தத்தில் எழுதினாலே அது கவிதைதான் என்ற நினைப்பும் இருந்தது. அது நிறைய நாளாக இருந்தது.

மாவீரர் தின கவிதை கூட முடிந்தளவு எதுகை மோனைச் சந்தத்துடன் தான் இருந்தது.

கவிதையை முடித்து வெளியேறிய அடுத்த நாள் எனது ஊரைச் சேர்ந்த ஒருவர் என்னைச் சந்தித்தார். அவர் அப்போது முரசொலி பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

-நல்ல கவிதை. தாருமன் பேப்பரில போடுவம்- என்று அவர் கேட்டார்.

ஏதாவது ஒரு ஆக்கத்துடன் எனது பெயரும் அச்சில் வரவேண்டும் என்ற தணியாத தாகம் இருந்த அந்தக் காலத்திலும் அவரது கோரிக்கைக்கு என்னால் இணங்க முடியவில்லை.

-வேண்டாம் அங்கிள். –

-ஏன்.. இது நல்லதொரு கவிதை.. தாரும்.. நான் கட்டாயம் போட்டு விடுறன்..-

-இல்லை அங்கிள்.. நான் சின்னப் பெடியன்.. போடுவினமோ தெரியாது..- உண்மையில் அந்த வாய்ப்பை எப்படியெல்லாம் தவிர்க்க முடியுமோ அதற்கெல்லாம் முயன்றேன். -அங்கிள் மாவீரர் பற்றின இந்த நினைவுகள் என்ர ஆத்ம திருப்திக்காக எழுதினது. இதை அச்சில ஏற்றி பிரபல்யம் தேட வேணும் எண்டு நான் நினைக்கவில்லை- என்று சொல்லியாவது சமாளிப்பதற்குரிய ஆக்குறைந்த வளர்ச்சி கூட அப்போது என்னிடம் இல்லை.

அவரோ விட்ட பாடில்லை.அவர் அப்போது முரசொலியில் முக்கிய பதவியொன்றில் இருந்தார்.

வேறு வழியில்லாமல் அழுத்தங்கள் காரணமாக எனது கவிதையை முரசொலியில் பிரசுரிக்க கையளித்தேன். அது மேடை வாசிப்புக்காக எழுதப்பட்டதால் நீண்டதாக இருந்தது. பத்திரிக்கையில் வெளியிடுவதற்காக எடிற் செய்ய வேண்டியிருப்பதாகவும் அதனை என்னை வைத்துக் கொண்டே செய்தால் இலகுவாயிருக்கும் என்றும் அவர் கூறி அப்போதே அந்த வேலையை ஆரம்பித்தார்.

-இந்த வரி நல்லாயிருக்கு.. இந்தப் பந்தி பெரிசா நல்லாயில்லை.. ம்.. இது சுப்பர்.. -இப்படியாக முழுக்கவிதையும் எடிற் செய்யப்பட்ட பிறகு உண்மையிலேயே அது ஒரு ரசனைக்கு உரிய ஆக்கமாக மாறியிருந்தது.

-உம்மடை பெயரை அச்சில கொண்டு வாற முதல் ஆள் நான்- தான் என்ற புளகாங்கிதத்துடன் அவர் புறப்பட்டார்.

மூன்று நாட்கள் ஆகிய நிலையில் நானும் ஒரு நப்பாசையில் வாசிக சாலையில் முரசொலியைப் பார்ப்பதுண்டு.

அதே வாசிக சாலையில் அவரை அடுத்தடுத்த ஒரு நாளில் பார்த்தேன். ஒரு புழுவைப் பார்ப்பது போல அவர் என்னைப்பார்த்தார்.

-என்னடா.. இப்பிடி என்ரை மானத்தை வாங்கிப் போட்டாய்..? நீ தந்தது புதுவை இரத்தின துரையின்ர கவிதையாம். அதை கொண்டு போய்க் குடுத்த என்ர மானம் காத்தில போட்டுது. நீ சொல்லியிருக்கலாம் தானே.-

அவர் ஒரு வித விரக்தியில் அதிகம் பேசவில்லை. அவர் அவமானப் பட்டது அவரது பேச்சில் தெரிந்தது.

உண்மைதான். அந்தக் கவிதையில் ஐம்பதுக்கு மேற்பட்ட வீதம் கவிஞர் புதவை இரத்தின துரையின் வரிகள்தான். அதிலும் சிக்கல் என்ன என்றால் முரசொலிக்காரர் எடிற் செய்யும் போது எனது வரிகளைச் சரியில்லை என்ற காரணத்தால் தூக்கி விட்டதால் அந்தக் கவிதை முழுக்க முழுக்க புதுவையின் வரிகளாகிப் போனது.

ஆனாலும்.. .இதில நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நாம் மறைமுகமாக சாத்தியமான எல்லா வழிகளிலும் எமது மறுப்பைத் தெரிவித்திருந்த போதும் ….

நான் அதற்குப் பின்னரும் கவிதை எழுதினேன்..
இப்போது எழுதுவதில்லை.

By

Read More

மலை மலை மலை….

Säntis என்கிற ஒரு மலைக்கு போயிருந்த போது எடுத்த சில படங்கள். செங்குத்தாக உயரும் மலைகக்கு cable car மூலம் செல்லக்கூடியதாக இருந்தது.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

By

Read More

× Close