மலைநாடான் மற்றும் கானா பிரபா காலத்திலே…

வேறொன்றும் இல்லைங்க… சும்மா நாங்க முன்று பேர் சேர்ந்து மிகப் பழைய காலத்துப் பாடல்கள் பற்றியும் அதுக்கு அப்புறமா வந்த படத்துப் பாடல்கள் பற்றியும் பேசினோம். நாங்கள் பிறக்கிறதுக்கு முன்பே வந்த பாடல்கள் சில ஏன் எங்களுக்குப் பிடிச்சிருக்கு அந்தப் பாடல்கள் என்ன என்பது தான் இந்த முறைக்கான…

கேரளாவில் சோமிதரனின் பிட்டு அனுபவங்கள்

அண்மையில் சோமிதரன் கேரளா போய் வந்திருக்கிறார். ஏற்கனவே அவருக்கு பிட்டு அனுபவங்கள் இருப்பினும் பிட்டுக்குப் பிரபல்யமாகப் பேசப்படுகின்ற கேரளாவில் அவரது பிட்டு அனுபவங்களைப் பற்றிப் பேசுகிறது இப்பதிவு. மொக்கைப் பதிவு வழங்கி நீண்ட நாட்களாகி விட்டது என்பதனாலும் அதுவே எந்த விதமான புயல்களுக்கும் கால் கோலாய் அமையாது என்ற…

சூடான பதிவர் ரவிசங்கருடன் ஒரு சந்திப்பு

Ravi Dreams ரவிசங்கருடன் நடாத்திய கலந்துரையாடல் ஒலிப்பதிவு இது. வலைச் சூழலில் தினமும் இரண்டு மூன்று பின்னூட்டங்களை மட்டுமே போட்டுக் கொண்டிருக்கும் சூழலில், தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டு பதிவுக் கயமை 🙂 செய்யும் ஒரு வலைப் பதிவர் அவர். ஒரு நாளில் 8 பதிவுகள் இட்டு…

பண்டி (பன்றி) பார்க்கலாம் வாங்க

இது வழமையான ஒரு பன்றிப் பதிவு அல்ல 🙂நான் வாழ்ந்த யாழ்ப்பாணப் பிரதேசச் சூழலில் பன்றி என்பதனை பண்டி எனத் தான் சொல்வது வழமை. இதுவே சில சமயங்களில் ஆட்களை போடா பண்டி எனத் திட்டவும் பயன்படுகிறது. தமிழகத்தில் கூட பன்றி என்ற சொல் சில இடங்களில் பன்னி…

காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன தொடர்பு

2002 களில இலங்கையில யுத்தம் தவிர்க்கப்பட்டிருந்த அந்த சமாதான காலத்தில தான் எனக்கு நண்பர்களோடு அதிகம் வெளியில சுத்தும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையை சொல்லப் போனால் அதுக்கு பிறகு தான் வீட்டில தேடாமல் விட்டவை. கொழும்பில நான் ராகுலன் செந்தூரன் சோமி இந்த நாலு பேரும் தான் ஒரு…