அது அடுத்தவன் நெருப்பு!
காலக் கரைதலில் கரைந்து போவது குறித்து அவனுக்கு கவலையெதுவும் இல்லை.நாளையோ அல்லது பின்னோ அவன் காணாமல் போகலாம்.ஆயினும் அது வழமையான காணமல் போதல் இல்லை என்பது குறித்து அவன் தெளிவுற்றிருந்தான்.சன வெள்ளத்தில் அவன் தனித் தீவாயிருந்தான்.நண்பர்கள் நினைவில் வந்து போனார்கள். நண்பர்களின் கல்லறைகள் வந்து போயின. அவர்களோடு அவைகளோடு…