ஒட்டுக் கேட்கலாம் வாங்க.. sayanthan, March 23, 2007 இன்னுமொரு உரையாடல் ஒலிப்பதிவு இது. இள வயது நினைவுகள் குறித்து நானும் சோமிதரனும் பேசியிருக்கின்….. ok.. அலட்டியிருக்கின்றோம். அனுபவங்களைப் பேசுதலில் கூட பதின்ம வயது அனுபவங்கள் தான் பெரும்பாலும் பேசப்படுகின்றன. அதனால் அதற்கும் முந்திய குழந்தைப் பராயத்து நினைவுகளைப் பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கின்றோம். (எங்கடை பதின்ம அனுபவங்களை பப்ளிக்கில சொல்வதில நிறைய சங்கடங்கள் இருக்கின்றன என்பது வேறு விடயம்.) ஒலிப்பதிவுகளை ஒரு போதும் 10 நிமிடங்களுக்கு மேல் அனுமதிப்பதில்லையென்பதில் உறுதியாக… Continue Reading
மூன்று பாட்டு ஒரு மெட்டு! கானா பிரபா, இது வேறு தலைப்பு sayanthan, March 21, 2007 கானா பிரபா தனது பதிவொன்றில் இட்டிருந்த மெட்டு ஒன்று பாடல் மூன்று எனும் பதிவின் பாதிப்பில் உருவாகிய குரற்பதிவு இது. பொதுவாக சினிமா என்ற ஒரே தளத்தில் வெவ்வேறு மொழிகளில் ஒரு மெட்டு பல பாடல்களில் பயன்படுத்தப் பட்டிருக்கும். ஆனால் இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் மூன்று பாடல்களும் சினிமாவும் சினிமாவிற்கு வெளியேயுமான வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப் பட்டிருக்கின்றன என்பது குறித்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. கேட்டுப் பாருங்கள். Continue Reading
சுஜித் ஜியின் இன்னொரு பாடல் – சயந்தன் சயந்தன், March 15, 2007 சுஜித் ஜி யின் இன்னுமொரு பாடல் இது. (இதனோடு நிறுத்தச் சொல்லுப்படுகுது.) கேட்டுப் பாருங்கள். Continue Reading
சுஜித் ஜியின் We Tamil Boyz sayanthan, March 14, 2007 சுஜித் ஜியின் அடுத்த இசைத் தொகுப்பான Ceylon க்கான சில பாடல்கள் கிடைத்தன. இந்த We tamil Boyz பாடல் அதன் ஆரம்ப சில வரிகள் சில மாதங்களுக்கு முன்பே கிடைத்த போது என்னைக் கவர்ந்திருந்தது. இப்போது முழுமையாகக் கிடைத்திருக்கிறது. இதனைத் தவிரவும் அடிமேல் அடிவைத்து, Buyakka Buyakka, பிறப்பெடு போன்ற பாடல்களும் நன்றாகத் தான் உள்ளன. Continue Reading
வலைப் பதிவர்கள் பற்றிய உற்சாக உரையாடல் sayanthan, March 14, 2007 இது ஒரு உற்சாக அலட்டல் பதிவு. ஏற்கனவே நானும் சோமியும் அலட்டி இட்ட பதிவுக்கு முன்பாக சில காலங்களுக்கு முன்பு ஒலிப்பதிவு செய்யப் பட்டது. ஒரு வேளை இது எப்போது ஒலிப் பதிவு செய்யப்பட்டதென்பதை சோமியும் மறந்திருக்கலாம். வழமை போலவே நோக்கமெதுவுமற்ற பலதும் பத்துமான உரையாடல் தான் இப்பதிவாயினும் ஆரம்பத்தில் சோமி தனது வலைப் பதிவு குறித்தும் பதிவர்கள் குறித்தும் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார். பிற்பாதியில் சாதாரண அலட்டல்… Continue Reading