நான் வளர்கிறேனே! மம்மி

உங்கள் எல்லாருக்கும் இண்டைக்கு நான் வளந்த படங்கள் காட்டப்போறன். குட்டிப் பெடியனா இருக்கேக்கை எடுத்த படங்களில இருந்து இந்தா இப்ப முந்தாநாத்து எடுத்த படம் வரைக்கும்… படங்களோடை கொஞ்சம் கதைக்கவும் போறன்.. இந்தப்படம் என்ரை பிறந்தநாள் ஒண்டுக்கு எடுத்த படம். என்ன அமைதியா நல்ல பெடியனாய் இருக்கிறன் என்ன?…

கிட்டு மாமா பூங்கா

யாழ்ப்பாணத்தில நல்லூருக்கு கிட்டவாக இறுதிக்காலங்களில் நான் யாழ்ப்பாணத்திலிருந்த எங்கள் வீட்டுக்கு அண்மித்தாக கிட்டு மாமா பூங்கா இருந்தது. எனக்கு சுப்பிரமணிய பூங்கா தெரியாது. விருத்தெரிய முதலே அது அழிந்து விட்டது. பூங்கா என்றால் இப்படி இப்படி இருக்குமாம் என்று கேள்விப்பட்டதனை முதலில் நேரடியாக பார்த்தது இங்கு தான். அப்பிடியென்ன…

பனங்காய்ப் பணியாரமே..!

பனங்காய்ப் பணியாரம் தெரியுமோ? பனம்பழச்சாறெடுத்து மாவொடு பிசைந்து எண்ணையில் பொரிச்சு.. (அப்பிடிச்செய்யிறதெண்டு தான் நினைக்கிறன். )நல்ல சுவையாக இருக்கும். யாழ்ப்பாணத்தில பனம்பழ கால சீசனில எல்லா வீடுகளிலும் இந்தப் பணியாரம் செய்வினம். கிட்டடியில கேட்ட ஒரு பாட்டில காதலியை பனங்காய்ப்பணியாரத்திற்கு ஒப்பிட்டிருந்தவை. பனங்காய்ப் பணியாரமே பச்சை கொழும்பு வெத்திலையே…