ஆமியும் அரிசியும்

இந்திய ராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் யாழ்ப்பாணத்திலை ஒரு குறிப்பிட்ட காலத்தில உணவுத் தட்டுப்பாடு இருந்தது. முருங்கைக்காய் கறி, இலைக் கஞ்சி இப்படி ஏதாவது ஒன்று கண்டிப்பாக எல்லோரது சமையலிலும் இருக்கும். பாணுக்காக அதிகாலையிலேயே எழுந்து ஓட வேண்டியிருக்கும்!ஆட்டுக்கால் விசுக்கோத்து (பிஸ்கற் என்பதன் சரியான தமிழ் வடிவம் என்ன என்று…

யானைக் கதை

இண்டைக்கு ஒரு யானைக் கதை சொல்லப்போறன்! அப்ப நாங்கள் தேவிபுரத்திலை இருந்தனாங்கள். தேவிபுரம் வன்னியில புதுக்குடியிருப்புக்கும் உடையார் கட்டுக்கும் இடையிலை இருக்கு. உடையார் கட்டை நானும் நண்பர்களும் UK எண்டுதான் சொல்லுவம். ஒரு சித்திரை மாசம் நடுச்சாமம் தான் நாங்கள் தேவிபுரத்துக்கு வந்தம். அது ஒரு தென்னந்தோட்டம். அடுத்தடுத்து…

மீண்டும் வணக்கம்

ஒரு சில கால இடைவெளியின் பின்னர் மீண்டும் வந்துவிட்டேன். யாழ் தந்த வீட்டில் போட்டது போட்டபடி இருக்க கொஞ்சம் ஜிலு ஜிலுப்பாய் ஒரு வீடு கட்டி வந்தாச்சு. ( இங்கே மெல்பேர்ணில் வசிக்கும் வீட்டினையும் மாற்றியாச்சு). இனித் தொடர்ந்து எழுதுவதற்கு முன்பாக ஒரு படம்! புது வீட்டில் படங்கள்…

கண் கெட்ட பின்னும் சூரிய நமஸ்காரம்

அரசாங்கத்தில் இருக்கும் சில சக்திகள் வடக்கு கிழக்கு பிரச்சனைக்கு தீர்வு காணும் தனது முயற்சிகளுக்கு தடங்கலாக இருந்து வருவதாக இலங்கை ஜனாதிபதி அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்ததாக சற்று முன்னர் சக்தி வானொலி சொல்லியது. அது இப்பொழுதுதான் அவருக்கு தெரிந்ததா என்ற கேள்வியும் இப்போதாவது தெரிந்ததே என்ற…