நாமோர் உறுதியெடுத்திருந்தோம். வெறுமே அலட்டுகிறோமெனவும், வெறும் வெண்ணைகளாயிருக்கிறோமெனவும், சிரித்துச் சிரித்து வந்த சீனாத்தானா போல சித்தரிக்கப்பட்டிருந்த நிலையில், எங்களாலும் பயனுள்ள வகையில் எதையாவது தரமுடியுமென நிரூபித்திருக்கிறோம். இது ஆரம்பம் தான். இந்த ஒலிப்பதிவில் நிறையப் பயனுள்ள தகவல்களைத் தந்த சென்னைச் சாமி எங்கள் சோமிக்கு நன்றி.
சொதி மீதான மறு வாசிப்பும் சோமியின் பாடலும்
சுஜித் ஜியின் இன்னொரு பாடல் – சயந்தன்
சுஜித் ஜி யின் இன்னுமொரு பாடல் இது. (இதனோடு நிறுத்தச் சொல்லுப்படுகுது.) கேட்டுப் பாருங்கள்.
என் காதல் கதை
ஏதோ மின்னல் ஏதோ மின்னல் தேகம் தொடுகிறதே
பூட்டிப் போட்ட தாழம் பூவில் பூட்டு உடைகிறதே
சல்லாப வெயில் அடிக்க கள்ளூறும் புயல் அடிக்க
ஆசை மொட்டுவிட நாணம் கட்டிவிட கூந்தல் கூடச் சுடுதே
பார்வை பின்னலிட ஜாடை ஜன்னலிட தாகம் மூட்டி விடுதே..
செல்லக்கடிகளும் சின்னக் கீறல்களுமெனும் பூனைக் கதையை வாசித்த நண்பர் ஒருவர் அனுப்பிய நாய்க்காதற்கதை இது. அத்தோடு இன்னொரு விடயம், என் காதல் கதை எழுதுவது நாயாகிய நான் என தலைப்பினைத் திருத்தி வாசித்துக் கொள்ளவும்.
ஆடுகிறார் வசந்தன்
வசந்தனுக்கு இசையின் மீது தீராத காதல் இருப்பது உங்களில் பலருக்குத் தெரியாது. இசை மீதான அவரது காதல் நடனம் மீதான மோகமாக மாறியதில் வியப்பில்லைத் தானே. மாயாவின் பாடல் ஒன்றுக்கு அவர் எப்படி நடனப் பயிற்சி செய்கின்றார் என்பதை நீங்களும் பார்க்க வேண்டாமா..? வழமை போலவே என்னதான் தன் முகத்தை மறைக்க அவர் முயற்சித்தாலும் தருணங்கள் அவ்வப்போது காட்டிக்கொடுத்து விடுகின்றன.
நினைவில் வைத்திருங்கள் இது வெறும் ஒத்திகை தான்.
விடுதலைப் புலிகளைப் பற்றி வீராச்சாமி
ஈழவிடுதலை பற்றியும் விடுதலைப் புலிகள் பற்றியும் அசாதாரண ஒரு நிலையில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசும் எந்த ஒரு பேச்சையும் நான் இதுவரை கேட்டதில்லை. ஈழத்தில் தமிழ் அரசியல் வாதிகள் செல்வாக்கு செலுத்தாத காலத்தில் பிறந்தவன் என்பதாலேயோ வளர்ந்தவன் என்பதானாலேயோ இவ்வாறான உரைகளைக் கேட்டதில்லை. சமாதான காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆங்காங்கே பரப்புரைகளை நடாத்திய போதும் தமிழக தலைவர்களினது உணர்ச்சி மிகு உரைகளைப் போல அவை இருந்ததில்லை.
புலிகள் கூட தமது நிகழ்வுகளில் அவ்வாறு பேசியதில்லை. அதனால்த் தானோ என்னவோ ஆணி வேர் திரைப்படத்தில் நந்தா மேடையில் ஏறி நாம் பூனைகள் அல்ல புலிகள் என்று உறுமிய போது எனக்கு இந்திய தமிழ்ச் சினிமா பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால் முதல்த் தடவையாக விடுதலைப் புலிகள் பற்றியும் ஈழத்தமிழர்கள் பற்றியும் ஒரு தமிழக அரசியல் பிரமுகர் அத்தனை ஆக்ரோசமாகப் பேசியதைக் கேட்டேன். அவர் யாருமல்ல. வீராசாமியெனும் காவியம் அளித்த விஜய ரி ராஜேந்தர் தான் அவர். கேட்கிறீங்களா..?