மெல்பேணில் இசை நிகழ்வு

இன்று மெல்பேணில் தமிழர் புனர்வாழ்வு கழக நிதிக்காக இன்னிசை மாலை நிகழ்வொன்று நடைபெற்றது. போயிருந்தேன். வசந்தனும் வந்திருந்தார். அவர் என்னிடம் இலங்கையிலிருந்து கொண்டு வரச் சொன்ன சில புத்தகங்களையும் நானாக கட்டாயம் படியும் எனச்சொல்லிக் கொடுத்த ஷோபா சக்தியின் தேசத்துரோகிகள் தொகுப்பினையும் பெற்றுக்கொண்ட அதே வேளை எனக்கு இரவு…

என்னத்தை சொல்ல – இலங்கையில் 3

‘உவரோடை எதுக்கு அடிக்கடி தனகுறாய்’ எண்டு அம்மம்மா கேட்டா. ‘தனகேல்லையம்மம்மா, அவர் சொல்லுறதுகளுக்கு பின்னூட்டம் குடுக்கிறன் என்றன் நான். அம்மம்மாவுக்கு பின்னூட்டம் எண்டால் என்னெண்டு விளங்கேல்லைப் போலை. ‘என்ன விண்ணானக் கதை கதைச்சுக் கொண்டிருக்கிறாய் எண்டா அவ. எண்டாலும் நான் அவரோடை தனகுப்படுறது அவவுக்கு பிடிக்கவில்லை. ஆனா உண்மையா…

தொடர் தாக்குதல்கள்: இலங்கையில் – 1

நானும் அனந்தனும் சேயோனும் கொழும்பில் தாட்சாயினி வீட்டுக்கு போயிருந்தோம். சேயோன் கனடாவிலிருந்து வந்திருந்தான். படிக்கின்ற காலங்களில் முன் நெற்றியில் வந்து விழும் முடிகளை வாயிலிருந்து காற்றுக்கொண்டே ஊதிச் சரி செய்து வயிற்றெரிச்சல் தருகின்றவனை இப்போது பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. அகண்ட தமிழ்த்தனிநாடு எண்டுறது போல அவன்ரை நெற்றி…

என்னா இதுங்கிறேன்?

இதோ.. அண்ணாந்து ஆறுதலாக தேடியும் கிடைக்காத தீர்த்தம் போல இவர் அருந்துவது என்ன என்று தெரிகிறதா? யாழ்ப்பாணத்தில் எல்லோருமே படம் எடுத்துக்கொண்டோம். இவர் மட்டுமே மிக வாய்ப்பாக கமெராவுக்குள் அகப்பட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் என்னோடு தனது நேரத்தினை செலவழித்தமைக்காக இந்தப் பதிவினையும் படத்தினையும் அவருக்கு காணிக்கையாக்குகின்றேன். நன்றி நண்பா…