ஆறாவடு, ரஃபேல் உரை – காணொளி

04 மார்ச் 2012 அன்று கனடா செல்வச்சந்நிதி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற “ஆறாவடு”  நாவல் விமர்சன அரங்கில்,  ரஃபேல் ஆற்றிய விமர்சன உரையின் முழுமையான காணொளி வடிவம். நிகழ்விற்கு  எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் தலைமையேற்றிருந்தார். Audio Quality: Good – Video Quality: Poor

முதல் விமர்சனம்

விமர்சனங்கள் அவை எவ்வகைப்பட்டவையாக இருப்பினும், படைப்பாளியை ஒரு வித கிளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்லுமெனச் சொன்னார்கள். அது உண்மைதான். அண்மைக் காலமாக நான் அதனை அனுபவித்தேன். ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்னால் ஒரு விமர்சனத்தை நான் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தேன். எனது சிறுகதையொன்றிற்கான விமர்சனமது. (அர்த்தம் சிறுகதைத் தொகுப்பிற்கானது அல்ல….

ஆறா வடு – ரமணீதரன் கந்தையா

1. புலிசார்பு, சிங்கம் சாய்வு என்றில்லாமல் எல்லாவற்றையும் நுள்ளியிருக்கிற புதினம்…. 2. எள்ளல் + துள்ளல் நடை [ஷோபா சக்தியிடம் இதே நளினமும் திறமையும் உண்டு; சொல்லப்போனால், முத்துலிங்கத்திடம் உண்டு (துள்ளல் தவிர்த்து… மயிலாப்பூர்மிடில்கிளாஸுக்கான வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்க்காத மசாலாவுடன்); யோகநாதன் முரளியிடம் உண்டு… ஆனால், ஷோபாசக்தி+யோ.கர்ணன் இடம்…

ஆறா வடு – சேயோன்

எந்த உலத்தில் இது விளைந்தது?’ என்று சேயோன் கேட்கிறான், சயந்தன் எழுதிய ஆறாவடு புதினத்தை வாசித்தபிறகு. மிக அற்புதமாக வந்திருக் கிறது இப்புனைவு. ஈழத்தமிழத்தேசிய அரசியல் பற்றிய புதினங்கள் ஒரு கைவிரல்களுக்குள் மடிபடக்கூடியன. மு.தளையசிங்கத்தின் ஒரு தனி வீடு, அருளரின் லங்காராணி, கோவிந்தனின் புதியதோர் உலகம், ஷோபா சக்தியின்…

ஆறா வடு – அ.முத்துலிங்கம்

அன்புள்ள சயந்தனுக்கு, வணக்கம். உங்கள் ’ஆறாவடு’ நாவலை வாசித்து இன்புற்றேன். ஓர் இரவிலே படித்து முடித்துவிட்டு உடனேயே எழுதுகிறேன். உங்கள் முதல் நாவலே இப்படி அமைந்திருப்பதால் இனி வரும் நாவல்கள் எல்லாம் இன்னும் சிறப்பாக அ்மையும் என எதிர்பார்க்கலாம். நாவலிலே eve teasing பகுதியும் அதன் தண்டனையும் வந்த…