ஐந்து பதிவர்களுடன் ஒரே நேரத்தில் உரையாடல் சயந்தன், April 20, 2007 நடைமுறையில் மிகச் சிரமமான ஒலிப்பதிவொன்றை, சும்மா பரீட்சார்த்த முயற்சியாகச் செய்து பார்த்தோம். வெவ்வேறு இடங்களிலிருந்து கொண்டு, 5 பதிவர்கள் கலந்து கொள்வதென்பதும், அது ஒலிப்பதிவு செய்யப்படுவதென்பதும் நுட்ப ரீதியில் சாதாரண விடயம் (சிஞ்சா மனுசி கலையகத்திற்கு). ஆனால் நடைமுறையில் அந்த உரையாடல் ஒழுங்கமைக்கப் படுவது கடினமானது. இருவர் பேசுகின்ற போது ஒருவர் குறிக்கிடுவதென்பது சமாளிக்கக் கூடியது. ஆனால், அதுவே ஐவராகும் போது இறுதியில் அடிபிடிதான் எஞ்சும் எனத் தெரிந்தும் இதையும்… Continue Reading
ஒரு பூனையின் வாக்குமூலம் – வீடியோ சயந்தன், April 17, 2007 தமிழ் இணையச் சூழலில் வீடியோப் பதிவுகள் எவ்வளவு தூரம் பரவல்த் தன்மை கொண்டதென்பது கேள்விக்குரிய ஒன்றாயினும், Google विडो, You tube போன்றவற்றில் கொட்டிக் கிடக்கும் தமிழ் ஒளித் தொகுப்புக்கள் ஓரளவுக்கு அவற்றின் பரவல்த்தன்மையை எடுத்துச் சொல்கின்றன வீட்டுப் பூனையை வைத்து இரு மாதங்களுக்கு முன்பொரு தடவை செல்லக் கடிகளும் சின்னக் கீறல்களும் என ஒரு ஒளிப்படப் பதிவினை இட்டபோது, இவ்வாறே ஒரு வீடியோ பதிவிட்டால் என்ன எனத் தோன்ற… Continue Reading
இந்திய அரசியலில் ஈழம் பற்றியொரு உரையாடல் சயந்தன், April 10, 2007 ஈழச் சூழல் பற்றி ஈழத்தவரல்லாத ஒரு தமிழருடன் விரிவாகப் பேசியதில்லை நான். (மெல்பேணில் இருந்த ஆரம்ப காலத்தில் அடுத்த அறையில் அகப்பட்ட கிழக்குத் தீமோர் நண்பர் ஒருவரோடு சற்று அதிகமாகவே கதைத்திருந்த போதும் இப்போது நினைத்துப் பார்த்தால் நான் தனியே விடுதலைப் புலிகளின் வெற்றிகளை மட்டும் அவருக்குப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறேனே தவிர ஈழப்போரின் இன்னொரு அங்கமாகிய மக்கள் பற்றி அவருக்கு எதையும் எடுத்துச் சொல்லவில்லை.(: ) வலைப்பதிவுலகில் அறிமுகமான… Continue Reading
மொக்கை ஒன்று குறித்த விளம்பரம் சயந்தன், April 7, 2007 வலைப் பதிவில், வரப்போகின்ற ஒரு பதிவு குறித்து, இது வரை முன்கூட்டியே யாரேனும் விளம்பரம் கொடுத்திருப்பார்களா எள தெரியவில்லை. இல்லையெனின் அதனையும் முதற்செய்யும் பெருமிதத்தோடு.. இதுவரை உரையாடல்களில், இருவரை மட்டுமே இணைத்திருந்த நிலை மாற்றி மூன்று நபர்களோடு மொக்கையை ஆரம்பிக்கிறோம். வரவனையானுடனான இவ்வுரையாடலில் பல்வேறு பட்ட அவருடைய பார்வைகளை அறிந்து கொள்ள முடிந்தது. வலைப்பதிவுச் சூழல், பின்னூட்டங்களின் போக்கு, நன்றிப் பின்னூட்டங்களின் நாடகத் தன்மை, சமூக நிலையும் மாற்றங்களும் இவற்றோடு,… Continue Reading
கருத்து உருவாக்கமும் ஈழ ஊடகங்களும் – ஒலிப்பத்தி சயந்தன், April 4, 2007 ஈழத் தமிழ்ச் சூழலில் ஊடகங்கள், சர்வதேச மக்கள் மத்தியிலும், சர்வதேசத்தின் முடிவெடுக்கும் அதிகார மையங்கள் மத்தியிலும், எவ்வளவு தூரம் கருத்துக்களை உருவாக்கும் ஊடகங்களாக செயற்படுகின்றன என்பது குறித்த ஒலிப்பத்தி இது. புலம் பெயர்ந்த சூழலில், ஈழ நிலை குறித்து, வெளி மக்களுக்கு மிகச் சிறப்பாகக் கொண்டு சேர்க்கக் கூடிய வாய்ப்புக்களும், வசதிகளும் இருந்த போதும், அது பற்றி கிஞ்சித்தும் சிந்தியாது இணையம், பத்திரிகை, வானொலி, தொலைக் காட்சியென சகல ஊடகப்… Continue Reading