பனங்காய்ப் பணியாரமே..!
பனங்காய்ப் பணியாரம் தெரியுமோ? பனம்பழச்சாறெடுத்து மாவொடு பிசைந்து எண்ணையில் பொரிச்சு.. (அப்பிடிச்செய்யிறதெண்டு தான் நினைக்கிறன். )நல்ல சுவையாக இருக்கும். யாழ்ப்பாணத்தில பனம்பழ கால சீசனில எல்லா வீடுகளிலும் இந்தப் பணியாரம் செய்வினம். கிட்டடியில கேட்ட ஒரு பாட்டில காதலியை பனங்காய்ப்பணியாரத்திற்கு ஒப்பிட்டிருந்தவை. பனங்காய்ப் பணியாரமே பச்சை கொழும்பு வெத்திலையே…