படங்களில் நிற்பது நான் தான்

இந்தப் படங்களை எனது வலைப்பதிவில் அங்கங்கு எங்காவது பார்த்திருக்கலாம் நீங்கள். டிஜிற்றல் கமெரா கிடைத்த ஆரம்ப நாட்களில் ஒஸ்ரேலியாவில் அருகிருந்த வீட்டுப் பொடியன் செந்தூரனை சிப்பிலியாட்டாத குறையாக அப்படியெடு இப்பிடியெடு அந்தா எடு இந்தா எடு என்று ஆக்கினைப் படுத்தி எடுத்த ஒரு சில படங்களில் இரண்டு படங்கள்..


Image hosted by Photobucket.com

தோளுக்குப் பின்னிருந்து சூரியன் ஒளிர வேண்டுமென நினைத்து எடுத்தது. சற்றுத் தவறி விட்டது. நான் இந்தப் படத்தில் மிக அழகாக இருப்பதாக அப்போது யாரோ சொன்னார்கள்.

Image hosted by Photo bucket.com

Titanic பாதிப்பில் எடுத்தது. அந்த நேரத்தில் யாருமில்லாததால் நான் மட்டுமே நிற்க வேண்டியதாய்ப் போய் விட்டது. பரவாயில்லை. பறக்க முயற்சித்தேன் முடியவில்லையென்றும் சொல்லலாம்.

By

Read More

கேளுங்க.. கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க..

உங்களுக்கு வேலையற்ற நேரம் இருக்கிறதா..? இருந்தால் இந்த அலட்டலைக் கேளுங்கோ.. சென்னையில் உள்ள எனது நண்பர் சோமிதரனும் நானும் வலைப்பதிவுக்காக அலட்டியதன் ஒலிப்பதிவு இது. இலங்கைத் தமிழ் நல்ல தமிழ் சென்னைத் தமிழ் ஊடகத் தமிழ் என்பவை பற்றி பலதும் பத்துமான உரையாடல். வழமை போலவே ஆயத்தங்கள் ஏதுமின்றி வழ வழா கொழ கொழா என்று கதைத்துவிட்டு பிறகு நேரக் கணக்கிற்கும் விசயக் கணக்கிற்கும் ஏற்ப வெட்டியதும் கொத்தியதும் போக மிச்சத்தை உங்கள் செவிகளுக்கு கொண்டு வந்திருக்கிறோம். ஒலிப்பதிவு தரமாக இருக்கிறது. இரு பக்கமும் கணணியூடாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட இப் பதிவில் சில இடங்களில் நேரடியாக ஒலிப்பதிவு செய்தது போன்ற தோற்றம் வருகிறது. நன்றி voipcheap.com

இதனையும் எனது பிரேத்தியேக player ஊடாக வெளியிடுகிறேன். கேளுங்க.. கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க.. இது ஒரு Tea with sayanthan

By

Read More

ஒரு வழியாய் முடித்தாயிற்று

நிறைய நாளாக எனக்கே எனக்காக ஒரு Audio player செய்ய வேண்டும் என்ற ஆசை இன்று ஒரு 50 வீதம் நிறைவுக்கு வருகிறது என நினைக்கிறேன். வழமையாகக் குரல்ப் பதிவுகள் போடும் போது Real player பயன்படுத்துவது தான் வழமை. ஆனால் அது பலரைச் சென்றடைவதற்கான வாய்ப்பு இல்லையென்பதனால் வேறேதாவது Players பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் Flash இல் முயற்சி செய்யத் தொடங்கினேன். இணையத்தில் விழுந்து எழும்பிப் புரண்டு நிமிர்ந்ததில் கிடைத்த துணுக்கு அறிவினைக் கொண்டு Flash மற்றும் xml இல் தயாரித்த இந்தச் சாரல் ஒலியை வெள்ளோட்டத்திற்கு விடுகிறேன். வழமை போலவே இதுவும் என்னைக் கவிழ்க்கலாம்.

இப்போது நான் அடிக்கடி முணுமுணுக்கின்ற பாடல் தான் இங்கும் ஒலிக்கும்.
H. ஜெயராஜ், தாமரை, கெளதம் கூட்டணி பிடித்தவர்களுக்கு இந்தப் பாடலும் பிடிக்கும்.

சோமிதரன்.. அடுத்தது உனதுடனான அலட்டல் ஒலிப்பதிவுதான்.

By

Read More

எனக்கெண்டொரு றேடியோ

தடங்கலுக்கு வருந்துகிறேன். சொதப்பிட்டுது. சரி வந்தது தான் வந்தியள். பக்கத்தில இருக்கிற என்ர பாடலை கேட்டுப் போங்கோ. அதுவும் புது றேடியோத்தான்.

By

Read More

× Close