பாவியர் போற இடம் பள்ளமும் திட்டியும் எண்டு சொல்லுவினம். ஆனா நான் பாவியில்லையே.. அப்பாவியெல்லோ!அடச்சே… ஒரு நிமிச நேரத்தில எல்லாம் நடந்து முடிஞ்சுது. 150 டொலர்! ரயிலில் கட்டணமின்றி பிரயாணம் செய்வது குற்றம் தான். அட.. ஆகக் குறைந்தது அந்தக் குற்றத்தை புரிந்திருந்தாலாவது தண்டம் அறவிட்டிருக்கலாம். போயும் போயும்.. ரயிலில் முன் சீற்றில் கால் வைத்ததற்கெல்லாம் தண்டம் அறவிடுவார்களா..? அது குற்றம் என கண்ணுக்கு தெரியத்தக்கதாக எழுதி வைத்த பின்னரும்…
Author: sayanthan
சிவராம்! புலிகளின் குரலிலிருந்து..
கடந்த இருபத்தொன்பதாம் திகதி புலிகளின் குரல் வானொலியின் கருத்துப் பகிர்வு நிகழ்ச்சியிலிருந்து..
பழைய Passwords
முற்குறிப்பு: இணையம் பாவிக்க தொடங்கிய ஆரம்ப காலங்களில் (முன்னமொரு காலம்) மின்னஞ்சல் முகவரிகளை அளவு கணக்கில்லாமல் பெறுவது வழக்கம். (ஓசியாக என்றபடியால் ஒவ்வொரு நாளும் ஒரு மின்னஞ்சல்). நேற்று எனது பழைய முகவரிகளை நினைவுபடுத்தி ஒவ்வொன்றாக உள் நுழைந்து பார்த்தேன்… என்னமோ மூன்று வரியில் அது பற்றி சொல்ல வேண்டும் போல இருந்தது. சொல்கிறன்.. கடந்து போன காதல்கள்இன்னமும்கடவுச் சொற்களாக… பிற்குறிப்பு: கடவுச்சொல் – Password
ஒஸ்ரேலியாவில் சந்திரமுகி
முதல்நாள், முதல்க்காட்சி அலைமோதும் கூட்டம் இல்லை. ஆரவாரம் இல்லை. இரவு ஏழு மணிக் காட்சி. ஏற்கனவே ரிக்கெற்றுக்களை பதிவு செய்து விட்டதனால்.. அவ்வப்போது ஆறுதலாக வந்து சேர்ந்த கூட்டம்.. இடிபட்டு தள்ளுப்பட்டு சட்டைகிழிந்து பேச்சு வாங்கி இவ்வாறான எந்தவிதமான அனுபவங்களும் இல்லாமல் சந்திரமுகி படம் இன்று பார்த்தேன். படம் ஏதோ பரவாயில்லைப்பா.. பாபாவை விட பரவாயில்ல.. இது தான் வந்திருந்த பெரும்பாலானோர் சொன்னது. படம் ஆரம்பித்து ரஜினி தன் சப்பாத்துக்களை…
பாஞ்சாலியும் ஹெலியும்
ஊரில சிவராத்திரி மற்றது நவராத்திரி இந்த ரண்டுக்கும் விடிய விடிய நிகழ்ச்சிகள் நடக்கும். நாடகங்கள், பட்டிமன்றங்கள் எண்டு அந்த இரவு கழியும். தவிர மாவீரர் தினம் போன்ற நிகழ்வுகளும் இவ்வாறாக நடக்கும். 90 ஆண்டு மாவீரர் தினம் ஊர் முழுக்க வளைவுகள் வைத்து பெரிசா நடந்தது. கடைசி நாள் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஊரில நாலு திசைக்கும், ஆக்களை அனுப்பி விட்டு நிகழ்ச்சிகள் நடக்கும். ஏதாவது பிளேன் சத்தமோ, ஹெலிச்சத்தமோ கேட்டால்…