புதுசு கண்ணா புதுசு

புது புளொக்கருக்கு மாறிய பின்னரும் நான் கிளாசிக் வகை வார்ப்புருவையே பயன்படுத்துவதால் புளொக்கரின் புதிய வசதிகளைப் பயன்படுத்த முடியாது இருந்தது. குறிப்பாக லேபிள் இடும் வசதி.. அதற்காக சும்மா இருந்து விட முடியுமா..? இணையத்தில் விழுந்து மூழ்கி புரண்டு எழுந்ததில் கிடைத்த அறிவுத் துணுக்குக்களை முன்வைத்து எனது பதிவிலும்…

என் சிறுகதைகள் பற்றிய செய்திகள்

அர்த்தம். எனது சிறுகதைத் தொகுதியின் பெயர். சரிநிகர் என்னும் பத்திரிகையின் ஆசிரியர் குழுவைக் கொண்டு நிகரி என்னும் பத்திரிகை கொழும்பில் இருந்து வெளிவந்தது. அந்த நிகரி வெளியீடாகவே எனது அர்த்தமும் வெளிவந்தது. 1998 இல் தினக்குரல் பத்திரிகையில் என்னுடைய முதலாவது சிறுகதையான எங்கடை மக்கள் வெளிவந்தது. அப்பத்திரிகையின் ஆசிரியர்…

ஈழப் பாடல்களின் நினைவுகளில்..

பாடல்களுக்கு கடந்த காலங்களை நினைவு படுத்துகின்ற அற்புத சக்தி இருப்பதாகவே நான் கருதுகின்றேன். தமிழ்ச்சினிமாவின் பல பாடல்கள் என் சில கடந்த காலங்களை நினைவு படுத்துகின்றன என்பதற்கும் அப்பால் தமிழ்ச் சினிமாவிற்கு சற்றேனும் சம்பந்தப்படாத நாம் வளர்கின்ற காலங்களில் எந்த திணிப்பும் இல்லாமல் இயல்பாகவே எங்களுக்கு கேட்க கிடைத்த…

படங்களில் நிற்பது நான் தான்

இந்தப் படங்களை எனது வலைப்பதிவில் அங்கங்கு எங்காவது பார்த்திருக்கலாம் நீங்கள். டிஜிற்றல் கமெரா கிடைத்த ஆரம்ப நாட்களில் ஒஸ்ரேலியாவில் அருகிருந்த வீட்டுப் பொடியன் செந்தூரனை சிப்பிலியாட்டாத குறையாக அப்படியெடு இப்பிடியெடு அந்தா எடு இந்தா எடு என்று ஆக்கினைப் படுத்தி எடுத்த ஒரு சில படங்களில் இரண்டு படங்கள்..தோளுக்குப்…

கேளுங்க.. கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்க..

உங்களுக்கு வேலையற்ற நேரம் இருக்கிறதா..? இருந்தால் இந்த அலட்டலைக் கேளுங்கோ.. சென்னையில் உள்ள எனது நண்பர் சோமிதரனும் நானும் வலைப்பதிவுக்காக அலட்டியதன் ஒலிப்பதிவு இது. இலங்கைத் தமிழ் நல்ல தமிழ் சென்னைத் தமிழ் ஊடகத் தமிழ் என்பவை பற்றி பலதும் பத்துமான உரையாடல். வழமை போலவே ஆயத்தங்கள் ஏதுமின்றி…