கழுவியாக இருத்தலும் கொழுவியாதலும்

அவ்வப்போது புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களை நோக்கி, தட்டுக் கழுவிகள் என்றோ தூசு தட்டுபவர் எனவோ யாராவது இணையத்தில் எழுதுவார்கள். வலைப் பதிவுச் சூழலில் அனாமதேயப் பின்னூட்டங்களாக பெரும்பாலும் இவை இடம்பெறும். ஏதோவொரு வழியில் அவர்களை ஏளனம் செய்வதற்கும், காழ்ப்புணர்வைக் காட்டவுமே அவ்வாறு சிலரால் சொல்லப்படுகிறது என்பதற்கு பின்னணியில்…

ஒபரேசன் பூமாலை – அந்த நாள் நினைவுகள்

அண்மைக் காலச் செய்திகளின் படி இந்தியா இலங்கை அரசுக்கான சகல வித உதவிகளையும் செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது. மேற்கு நாடுகளிடம் வரிசையாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு ஆறுதல் சொல்லவும் அரவணைக்கவும் அருகில் யாராவது இருக்கத் தானே வேண்டும். ஆயினும் அது பற்றிப் பேசுவதல்ல இப்பதிவு. 1987…

நட்சத்திர வார அழைப்பு

அன்புடையீர் நிகழும் மங்களகரமான சர்வசித்து வருடம் ஆனித் திங்கள் 18ம் நாள் முதல் 25ம் நாள் வரையிலான அக்னி நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுப காலப் பகுதியான ஒரு வாரத்திற்கு சயந்தனாகிய என்னை இறைவன் திருவருள் துணை கொண்டு நட்சத்திர பதிவராய் நியமிக்க பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால் அத்தருணம்…

அது அடுத்தவன் நெருப்பு!

காலக் கரைதலில் கரைந்து போவது குறித்து அவனுக்கு கவலையெதுவும் இல்லை.நாளையோ அல்லது பின்னோ அவன் காணாமல் போகலாம்.ஆயினும் அது வழமையான காணமல் போதல் இல்லை என்பது குறித்து அவன் தெளிவுற்றிருந்தான்.சன வெள்ளத்தில் அவன் தனித் தீவாயிருந்தான்.நண்பர்கள் நினைவில் வந்து போனார்கள். நண்பர்களின் கல்லறைகள் வந்து போயின. அவர்களோடு அவைகளோடு…

றீகல் தியேட்டரில் படம் பார்த்திருக்கிறீர்களா..?

சாரல் பதிவின் தலைப்பில் இருக்கின்ற படம், யாழ்ப்பாணத்தில் இருந்த சினிமாத் திரையரங்குகளில் ஒன்றான றீகல் தியேட்டரின் முன்தோற்றம்.(அதற்காக பின்தோற்றமெல்லாம் இருக்குமென எதிர்பார்க்க முடியாது. முன்தோற்றம் மட்டும் தான்.) யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் முனியப்பர் கோவிலடிச் சூழலில் அமைந்திருந்த இத் திரையரங்கு, கோட்டைச் சமர்காலத்தின் அத்தனை வடுக்களையும் தாங்கி, இழந்தவை…