கோகுல் பிரசாத்

A depressing book about three generations living amidst bomb shells. The writing was crisp, vivid and chilling. The mental ravages of ‘insanity killing’ echoes throughout the book. Female protagonists’ characterisation was unique and complete. ‘Aachimuthu’…

பெயரற்றது – சிறுகதை

“ஓ.. பிரச்சனைதான். ஆர் என்னாக்கள் எண்டு ஒண்டும் தெரியாத கண்ட கண்ட நாயெல்லாம் வந்து கோயில் கிணத்தில குளிச்சிட முடியுமோ.. எல்லாத்துக்கும் ஒரு முறையிருக்கு. இது சாமிக்கு அபிசேகத் தண்ணியெடுக்கிற கிணறு.” என்ற கோயிற்காரர் “கொண்டா இங்கை” என்று வாளியை இவனிடமிருந்து பறித்து கயிற்றைக் கப்பியிலிருந்து கழற்றிய நேரம்…

குற்ற உணர்வின் பிரேத பரிசோதனை: யதார்த்தன்

நான் போரினை உணரத்தொடங்கும் போது போர் முடியத்தொடங்கி விட்டது. துப்பாக்கிகளும் பீரங்கிகளும் கிபிர் சத்தமும் உறுமி கேட்ட செவிப்பறைகளை கொண்ட இறுதித்தலை முறையாக நாங்கள் நிற்கின்றோம். தோற்ற தரப்புகளும் வென்ற தரப்பும் எஞ்சிய தர்ம அதர்மங்களை பங்கு போட்டு இன்னும் முடியவில்லை. ஒட்டு மொத்த மானுட இருப்பையும் போர்கள்…

சின்ராசு மாமா

சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் எப்போதுமிருக்கிற பீடிக் கட்டு அல்லது சுருட்டு அல்லது ஒற்றைச் சிகரெட் முதலானவற்றைப் பார்த்து அவரது தொழில் நிலவரத்தைச் சொல்லுகிற ட்ரிக்ஸ் எனக்குத் தெரிந்திருந்தது. “மாமோய், கடலம்மா இண்டைக்கு பார்த்துப் பாராமல் அள்ளித் தந்திருக்கிறா போல” என்றால் அன்றைக்கு ஒரு முழுச் சிகரெட் பெட்டி…

இறுதி வணக்கம்

நான் பார்த்த கணத்தில், வளவன் தன் காலின் கீழே, பச்சைநிற ஈரலிப்பான முதுகில் கருமை நிறப் புள்ளிகளைக் கொண்ட தவளையின் மீது, கையில் ஏந்தியிருந்த உடைந்த கொங்கிறீட் கல்லை நசுக் என்று போட்டான். புளிச் என்ற சத்தம் கேட்டது போலிருந்தது. நான் ஒருவித அசூசையான உணர்வில் ஆட்பட்டு கண்களை…