அது அடுத்தவன் நெருப்பு!

காலக் கரைதலில் கரைந்து போவது குறித்து அவனுக்கு கவலையெதுவும் இல்லை.நாளையோ அல்லது பின்னோ அவன் காணாமல் போகலாம்.ஆயினும் அது வழமையான காணமல் போதல் இல்லை என்பது குறித்து அவன் தெளிவுற்றிருந்தான்.சன வெள்ளத்தில் அவன் தனித் தீவாயிருந்தான்.நண்பர்கள் நினைவில் வந்து போனார்கள். நண்பர்களின் கல்லறைகள் வந்து போயின. அவர்களோடு அவைகளோடு…

றீகல் தியேட்டரில் படம் பார்த்திருக்கிறீர்களா..?

சாரல் பதிவின் தலைப்பில் இருக்கின்ற படம், யாழ்ப்பாணத்தில் இருந்த சினிமாத் திரையரங்குகளில் ஒன்றான றீகல் தியேட்டரின் முன்தோற்றம்.(அதற்காக பின்தோற்றமெல்லாம் இருக்குமென எதிர்பார்க்க முடியாது. முன்தோற்றம் மட்டும் தான்.) யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் முனியப்பர் கோவிலடிச் சூழலில் அமைந்திருந்த இத் திரையரங்கு, கோட்டைச் சமர்காலத்தின் அத்தனை வடுக்களையும் தாங்கி, இழந்தவை…

சொதி மீதான மறு வாசிப்பும் சோமியின் பாடலும்

நாமோர் உறுதியெடுத்திருந்தோம். வெறுமே அலட்டுகிறோமெனவும், வெறும் வெண்ணைகளாயிருக்கிறோமெனவும், சிரித்துச் சிரித்து வந்த சீனாத்தானா போல சித்தரிக்கப்பட்டிருந்த நிலையில், எங்களாலும் பயனுள்ள வகையில் எதையாவது தரமுடியுமென நிரூபித்திருக்கிறோம். இது ஆரம்பம் தான். இந்த ஒலிப்பதிவில் நிறையப் பயனுள்ள தகவல்களைத் தந்த சென்னைச் சாமி எங்கள் சோமிக்கு நன்றி.

ஆனந்தன் அண்ணா, நேற்றும் உங்களை நினைத்தேன்

ஆனந்தன் அண்ணை.. உங்களை நான் கடைசியாக் கண்ட போது நீங்கள் வழமைக்கு மாறாக அமைதியா இருந்தீங்கள். அப்பிடியொரு அமைதியில உங்களை நான் அதற்கு முதல் பார்த்ததே இல்லை. எப்பவும் சிரிப்பும் கும்மாளமுமா இருக்கும் நீங்கள் அண்டைக்கு ஏன் அப்பிடி இருந்தீர்கள்? அதுவும் ஆர்மோனியப் பெட்டியை நீங்கள் வாசிக்க, நாங்கள்…

ஒட்டுக் கேட்கலாம் வாங்க..

இன்னுமொரு உரையாடல் ஒலிப்பதிவு இது. இள வயது நினைவுகள் குறித்து நானும் சோமிதரனும் பேசியிருக்கின்….. ok.. அலட்டியிருக்கின்றோம். அனுபவங்களைப் பேசுதலில் கூட பதின்ம வயது அனுபவங்கள் தான் பெரும்பாலும் பேசப்படுகின்றன. அதனால் அதற்கும் முந்திய குழந்தைப் பராயத்து நினைவுகளைப் பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கின்றோம். (எங்கடை பதின்ம அனுபவங்களை பப்ளிக்கில…