வதைகளின் கதைப்பாடல் – ம.மணிமாறன்

துடிப்படங்கிய உடல்களைப் புரட்டித் தேடுகிறது கரும்பச்சை சூடிய சிங்களச்சிப்பாயின்  துவக்கு. புகை படர்ந்த பெருவெளிக்குள் துழாவித்திரிகிற அவனின் கண்களுக்குள் உறைந்திருக்கிற வன்மத்திற்கு ஓராயிரம் ஆண்டின் வரலாற்று ரேகை படிந்திருக்கிறது. தன்னுள் திளைக்கும் கொடுரத்தினை விதைத்தது புத்தபிக்கு மஹானாமாவின் சிங்கள காவியமான மகாவம்சம் என்பதை அந்த வீரன் அறிந்திருக்கச் சாத்தியமில்லை….

ஆறாவடு – யோ.கர்ணன்

அடிப்படையில் அ(இ)ந்த நாவல் விடுதலைப்புலியுறுப்பினராக இல்லாத ஒருவரினால், விடுதலைப்புலிகள் பற்றி அறிந்த தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டது. பெரும்பாலான ஈழத்து நாவல்களிற்கேயுரித்தான விபரிப்புக் குறைபாடு, பாத்திர உருவாக்க பலவீனங்களுடன் நாவலிருந்தாலும், அது வாசிப்புச் சுவாரஸ்யமுள்ள நாவல்தான். அதிலெல்லாம் சந்தேகமில்லை. ஆனால், பிரச்சனையென்னவென்றால், நாவலின் ஆதாரமாக இருந்திருக்க வேண்டிய உயிர்ப்பு அதிலிருக்கவில்லை….

தமிழகத்தையும் ஈழத்தையும் இணைப்பது எது எனக் கேட்டால்..? -தீராநதி

போருக்குப் பின்னர் ஈழத்திலிருந்து புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். சாத்தியாமான எல்லா எல்லைகளையும் தொட்டு விடும் துடிப்பு அவர்களிடம் உள்ளது. அந்த வகையில் தனது ‘ஆறாவடு’ நாவல் மூலம் தமிழ் இலக்கியப்பரப்பில் அறிமுகமாகியிருப்பவர் சயந்தன். நாவல் வெளி வந்த மிகக்குறுகிய காலத்திலேயே புகலிடத்திலும், இலங்கையிலும் விவாதிக்கப்படும் முன்னணி படைப்பாளியாகியிருக்கிறார்….

அதிகாரப் பரவலாக்கலும் இலங்கைக்கான பொருத்தப்பாடும்

17 யூன் 2012 சுவிற்சர்லாந்து உரையாடல் அரங்கு நிகழ்வில் சசீவன் ஆற்றிய உரையாடலின் முழுமையான காணொளி. கீழ்வரும் விடயங்கள் குறித்து உரையாடல் அமைக்கப்பட்டிருந்தது. Power : History and Devolution அதிகாரத்தின் வரலாறு. 1. குடும்ப அமைப்பு மற்றும் குழுக்களிடையே அதிகாரம். 2. நிலப்பிரபுத்துவகால அதிகாரம். (மன்னராட்சி மூலமான…

ஆறா வடு – பாரதி.சு

சமீபத்தில் வெளியான எந்தவொரு தமிழ் நாவலும் சயந்தனின் “ஆறாவடு” நாவல் அளவிற்கு சராசரி வாசக மட்டத்தில் அதீத கவனிப்பு பெற்றிருக்கவில்லை என்பது என் எண்ணம். சமூக வலத்தளங்களிலாகட்டும் அல்லது இணையப் பதிவுகளிலாகட்டும் தொடர்ந்தும் “ஆறாவடு” பற்றிய சிலாகிப்புகளோ அல்லது விமர்சனங்களோ தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறன. ஆக, சயந்தன் “எலக்கிய…