குழை வண்டிலில் வந்தவர் யார்..?

“தம்பி ஒரு கொமிக் சொல்லுறன். எலக்ஷென் நடந்ததெல்லே, முல்லைத்தீவுப் பக்கமா வெத்திலையில வோட்டுக்கேட்ட அரசாங்கக்கட்சி ஆளொருவர், எலக்ஷனுக்கு ரண்டு மூண்டு நாளுக்கு முதல், வீட்டு வசதிகள் சரியாக் கிடைக்காத கொஞ்ச சனத்துக்கு கூரைத் தகரங்களை அன்பளிப்பாக் கொடுத்து, வீட்டுக்குப் போடுங்கோ என்று சொன்னவராம். சனமும், நீங்கள் தெய்வமய்யா என்று…

தமிழ் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ்

ரமில் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ் என்று டிவியின் உள்ளே நின்று சற்றே நெஞ்சை முன்தள்ளியவாறு கைகளை உயர்த்திக் கத்திய இளைஞனை எங்கோ கண்டிருந்ததாக அகதித்தஞ்ச விசாரணையின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் குமாரசூரியர்  சோபாவில் புதைந்திருந்து விரல்களால் முன் நெற்றியைத் தேய்த்தபடி யோசித்தார். இளைஞனின் ரீ சேர்ட்டில் புலியொன்று பாய்ந்தபடியிருந்தது. தொப்பியிலும்…

செங்கடல் படம் பற்றிய உரையாடல்

24.03.2013 சுவிற்சர்லாந்து சூரிச் நகரில், செங்கடல் படம் திரையிட்டதன் பின்பாக படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலையுடனான கலந்துரையாடலின் காணொளிப்பதிவுகள். Youtube

வதைகளின் கதைப்பாடல் – ம.மணிமாறன்

துடிப்படங்கிய உடல்களைப் புரட்டித் தேடுகிறது கரும்பச்சை சூடிய சிங்களச்சிப்பாயின்  துவக்கு. புகை படர்ந்த பெருவெளிக்குள் துழாவித்திரிகிற அவனின் கண்களுக்குள் உறைந்திருக்கிற வன்மத்திற்கு ஓராயிரம் ஆண்டின் வரலாற்று ரேகை படிந்திருக்கிறது. தன்னுள் திளைக்கும் கொடுரத்தினை விதைத்தது புத்தபிக்கு மஹானாமாவின் சிங்கள காவியமான மகாவம்சம் என்பதை அந்த வீரன் அறிந்திருக்கச் சாத்தியமில்லை….

ஆறாவடு – யோ.கர்ணன்

அடிப்படையில் அ(இ)ந்த நாவல் விடுதலைப்புலியுறுப்பினராக இல்லாத ஒருவரினால், விடுதலைப்புலிகள் பற்றி அறிந்த தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டது. பெரும்பாலான ஈழத்து நாவல்களிற்கேயுரித்தான விபரிப்புக் குறைபாடு, பாத்திர உருவாக்க பலவீனங்களுடன் நாவலிருந்தாலும், அது வாசிப்புச் சுவாரஸ்யமுள்ள நாவல்தான். அதிலெல்லாம் சந்தேகமில்லை. ஆனால், பிரச்சனையென்னவென்றால், நாவலின் ஆதாரமாக இருந்திருக்க வேண்டிய உயிர்ப்பு அதிலிருக்கவில்லை….