-
மருது
எழுத்தாளர் சயந்தன் அவர்களுக்கு, நான் கடந்த முறை எழுதிய போது அடுத்த முறை தமிழில் எழுதுவதாக சொல்லி இருந்தேன். ஆனால் அதற்குள் இரண்டு வருடம் ஓடி விடும் என்று நினைக்க வில்லை. சோதி மலர் போல ஒரு பெண்ணை இதுவரை படித்த எந்த புத்தகத்திலும் சந்திக்க வில்லை. சந்திரா டீச்சரும் தான். ஆதிரை 2016 மதுரை புத்தக காட்சியில் தான் வாங்க முடிந்தது. ஆதிரை வாசிக்க தொடங்கும் முன் ஆறா வடு மீண்டும் ஒரு முறை வாசித்தேன்….
-
ப்ரகாஷ் சிவா
சயந்தன் இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் ஒரு இளைஞர், இவரின் பெயரற்றது என்ற சிறுகதை தொகுதியை படித்து முடித்த உடனேயே யோசிக்காமல் ஆதிரையை வாங்கினேன். 1977லில் ஆரம்பமாகும் இந்த நிஜங்களின் தொகுப்பு மூன்று தலைமுறைகளை கடந்து 2013 இல் முடிவடைகிறது. இதுவரை இலங்கையை நேரடியாக அறியாத, ஊடகங்களில், அரசியல் பிரசாரத்தில் மட்டுமே தெரிந்த, என் போன்ற சாதாரண தமிழ்நாட்டு வாசகனுக்கு, இலங்கை தமிழர்கள் வாழ்வு பற்றிய பிம்பம் சர்வ நிச்சயமாக உடைபடும். தூக்கம் தொலைய வைக்கும்…
-
ஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா? – நேர்காணல்
19FEB, 26FEB 2017 திகதிகளில் இலங்கை தினக்குரல் பத்திரிகையில் வெளியானது. நேர்காணல் : கருணாகரன் 1. கூடிய கவனிப்பைப் பெற்ற உங்களுடைய “ஆறாவடு”, “ஆதிரை” க்குப் பிறகு, யுத்தமில்லாத புதிய நாவலைத் தரவுள்ளதாகச் சொன்னீங்கள். அடுத்த நாவல் என்ன? அது எப்ப வருது? அந்த நாவலுக்கு இப்போதைக்குக் கலையாடி என்று பெயர். எழுதிக்கொண்டிருந்த காலம் முழுவதும் பெரிய மன அழுத்தத்தைத் தந்த நாவல் ஆதிரை. அந்த நாவல் ஒரு கட்டத்திற்குப் பிறகு தன்னைத்தானே கொண்டிழுத்துக்கொண்டுபோனபோது ஒரு கையாலாகாதவனாக நின்று…
-
காஸா! படுகொலை நாட்களின் குறிப்புகள்
Rasha N. AbuShaaban இங்கிலாந்தின் Aberdeen பல்கலைக்கழக முதுநிலைப்பட்டம் பெற்றவர். பலஸ்தீன சிவில் சமூக அமைப்புக்களிலும் மனிதாபிமான மற்றும் அபிவிருத்திச் செயற்திட்டங்களிலும் பணியாற்றியவர். தற்போது சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றார். உரிமைகளை உறுதிசெய்வதும், அதிகாரங்களைக் கையளிப்பதுவுமே, பெண்கள் குழந்தைகள், இளைஞர்கள் உள்ளடங்கலான அமைதிமிக்க பலஸ்தீன சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான திறவுகோல்கள் என்பது இவருடைய நம்பிக்கை. தற்பொழுது ஆக்கிரமிப்பு யுத்தம் நடைபெறும் காஸாவிலிருந்து இக்குறிப்புக்களை alochonaa.com இணையத்தளத்திற்காக எழுதுகின்றார். தமிழில் மொழிபெயர்ப்பு : சயந்தன் Gaza, July…
-
கருப்பையா பெருமாள்
கதாசரியர்கள் தங்கள் அனுபவங்களை ஆசைகளை நிராசைகளை வாழ்வனுபவங்களை தனது பாத்திரங்களின் வாயிலாக வாசகனின் வாசகஉலகிற்கு கடத்துவதே முதலான வேலை. அப்படி கடத்தப்படும் விஷயங்கள் வாசகனுக்கு விருப்பமாக இருந்தால் அந்த நாவல் வாசகனை ஈர்த்துவிடும்.சிலநேரம் வாசகனின் வாழ்வனுபவங்களின் சிறு தெரிப்பு படிக்கும் கதை மாந்தரின் அனுபவங்களோடு ஒன்றியிருந்தால் அந்த நாவல் நமது மனதிற்கு நெருக்கமாக மாறிவிடுவதை அவதானிக்கலாம். பள்ளி நாட்களில் கற்பனை மனவோட்டத்தால் சாண்டில்யனின் ஜலதீபம் யவனராணி நா.பாவின் மணிபல்லவம் பிடித்தது.கல்லூரி புகுமுக வகுப்பில் ஜெகசிற்பியன் அகிலன் பிடிக்க…
-
மணிமாறன்
அனைத்தையும் அழித்தொழித்தாகி விட்டது. அரை நூற்றாண்டு கால யுத்தத்தின் கடைசித் துளிகளில் எதை பெற்றது, எதை இழந்தது இந்த இனம். துட்டகை முனுவிற்கும், எல்லாளனுக்கும் துவைந்த யுத்தத்தின் சத்தங்களால் திகைத்திருந்த நிலத்தின் இனியான கதை என்னவாகப் போகிறது. உலகின் காணச் சகியாத காட்சிகளையெல்லாம் வர்ணமேற்றி காட்சி உருவைப் பெரிதினும், பெரிதாக்கி முள்ளி வாய்க்காலின் கம்பி வேலிகளைப் பிடித்தபடி வெறித்திருக்கும் இந்த தமிழ்க்குடிமகளின் கண்களுக்குள் பொதிந்திருக்கும் கேள்விகளை நாம் எப்படி எதிர் கொள்வோம். அரசியல் பிழைத்தோர் அணுகுவதைப் போலன்றி…