இது ஒப்பாரி அல்ல – நினைவு 1

புனைவுகளில் கற்பனை கலந்திருக்குமா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இந்த 86 களிலிருந்து என்பது எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து நான் நேரடியாகத் தொடர்புற்றிருந்த சம்பவங்களின் பதிவு. இவை அனைத்திலும் மகனாக நண்பனாக வழிப்போக்கனாக வாய் பார்த்தவனாக செய்தி கேட்டவனாக நான் ஏதோ விதத்தில் உள்ளிருப்பேன். டப்…

4 வது ஆண்டில் சாரல். வாழ்த்த வரிசையாய் வாருங்கள்

சும்மாயிருந்த பொழுதொன்றில் நானெழுதிய யானைக்கதையொன்றைத் தேடிப்புறப்பட்டபோதுதான் புலப்பட்டது. கடந்த பெப்ரவரி 13 இல் சாரல் நான்காவது வருடத்தில் நுழைந்து விட்டிருந்தமை. அட நான்கு வருடமாயிற்றா ? சாரல் Blogspot இற்கு வருவதற்கு முன்பே 2004 செப்டெம்பரில் யாழ்.நெற்றில் (நெட்டில்) சஜீ என்ற ஒற்றைப்பெயரில் வைத்திருந்த குடில் (அப்போது இந்த…

விருப்புக்குரிய புத்தகங்களும் சுவிசில் நூல் நிலையமும்

2005 இன் ஒரு நாள், கொழும்பின் பூபாலசிங்கம் கடையில் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூல் இருக்கா எனக் கேட்டதற்கு அங்கு வேலை செய்த அக்கா ஒரு மாதிரியா பார்த்தா. பிறகு அவ காட்டிய இன்னுமொருவர் அது விற்பதில் சில பல பிரச்சனைகள் இருக்கென்று சொல்லவும், பரவாயில்லையெனச் சொல்லி விட்டு…

நெருப்பெரிந்த நிலமாய் கிடக்கிறது நெஞ்சு.. :)

சற்றே ஓய்ந்து போன சிஞ்சா மனுசிக் கலையகத்தின் ? ஆரம்ப கால முயற்சிகளில் ஒன்று இந்தப் பாடல். கணணியை மட்டும் உபயோகப்படுத்தி கோர்த்த இசையில் பாடல் வரிகளைப் போட்டுப் பாடுவது நான்தான். (தேவையா இதெல்லாம் ?) இசையமைத்தவர் ராஜ். ஒஸ்ரேலியாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது :)))