ஆறா வடு – பொ.கருணாகரமூர்த்தி

சயந்தனின் ‘ஆறாவடு’ என்கிற நல்ல நாவலின் வரவுபற்றி ஊடகங்களில் அறிந்தபோதும், அவ்வப்போ நினைவூட்டப்பட்டபோதும் சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் நான் நாவலைப்படிக்கும்வரையில் மேற்கொண்டு பிரதி பற்றிய விமர்சனங்களைப் படிப்பதில்லை என்று இருந்தேன். என்இயல்பான மெத்தனத்தால் இப்போதுதான் நாவல் எனக்குக் கிடைத்தது. (நான் கேட்டதால் சயந்தனே எனக்கொருபிரதியை அனுப்பிவைத்தார்.) என் எதிர்பார்ப்பும்,…

மகாப் பிரபுக்கள்

கனகுராசா கக்கூசுக்குப் போகிற வழியில், கையில் வைத்திருந்த தண்ணீர் வாளி முழுவதுமாகத் துருப்பிடித்திருந்தது. அதன் ஓரங்களிலும் உள்ளேயும் பாசி பரவி பச்சைக் கலரிலிருந்தது. அவர் வெறும் மேலுடன் நின்றார். பழைய சவுதி சாரமொன்றை துாக்கிக் கட்டியிருந்தார். கக்கூசு வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்தது. பழைய காலக் கக்கூசு, யாழ்ப்பாணத்திற்கு கக்கூசுக்…

ஆறாவடு, ரஃபேல் உரை – காணொளி

04 மார்ச் 2012 அன்று கனடா செல்வச்சந்நிதி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற “ஆறாவடு”  நாவல் விமர்சன அரங்கில்,  ரஃபேல் ஆற்றிய விமர்சன உரையின் முழுமையான காணொளி வடிவம். நிகழ்விற்கு  எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் தலைமையேற்றிருந்தார். Audio Quality: Good – Video Quality: Poor

முதல் விமர்சனம்

விமர்சனங்கள் அவை எவ்வகைப்பட்டவையாக இருப்பினும், படைப்பாளியை ஒரு வித கிளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்லுமெனச் சொன்னார்கள். அது உண்மைதான். அண்மைக் காலமாக நான் அதனை அனுபவித்தேன். ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்னால் ஒரு விமர்சனத்தை நான் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தேன். எனது சிறுகதையொன்றிற்கான விமர்சனமது. (அர்த்தம் சிறுகதைத் தொகுப்பிற்கானது அல்ல….

புரட்சீ

April-24-2008 From Web Archive கிளர்ந்தெழுந்த வெட்கத்தின் படரலை என் முகத்தில் யாரும் கண்டுணர முடியாது. நான் நடந்து கொண்டிருந்தேன். மூடப்பட்டிருந்த பெருவீதியில் விதைத்திருந்த சன நெரிசலுக்குள் என்னை நுழைத்து நுழைத்து வெளிவருவது எரிச்சலைத் தந்தது. எங்காவது, இருப்பதற்குரிய வாய்ப்புக்களை மறுத்து நெரிசல் இரு திசைகளிலும் இயங்கிக் கொண்டிருந்தது….