பரதேசி நாய்

நேற்றிரவு தொடரூர்ந்து நிலையத்தில் அவரைச் சந்தித்தேன். ஆபிரிக்கர், அவராகச் சொன்னபின் சோமாலியர் எனத் தெரிந்து கொண்டேன். சற்றுத் தூரத்தில் நின்று சிரித்தார். சோமாலியா எரித்திரியா போன்ற நாட்டுக்காரர்களின் சிரிப்பில் ஒருவித குழந்தைத்தனம் இருப்பது போல எனக்கு நெடுநாளாகத் தெரிகிறது. பதிலுக்குச் சிரித்தேன். சிநேகபூர்வமாக கிட்ட வந்தவர் தமிலியனா என்றார்…

அந்தக் கண்களும் சில காதல்களும்

கிழிந்த கிடுகுகள் நிறைந்த வேலி முற்றத்தின் மத்தியில் பெயர் தெரியா ஒரு ஒற்றைப் பூமரம் எப்போதாவது எனைச் சந்தித்து சில மொழிகள் பேசும் இரு விழிகள் 0 0 0 சுப்ரமணியபுரம் பார்த்து முடித்த போது மனதைப் பாதித்த நம்பிக்கைத் துரோகத்திற்குமப்பால் இற்றைவரை துரத்துவதும் அதனூடே காலங்களைக் கிளறி…

நல்லவேளையாக அவர் கையில் ஆயுதங்கள் இல்லை

மாவீரர் தினம் முடிந்துவிட்டது. நானறிந்தவரை லண்டனிலும் கனடாவிலும் விசில் பறக்க நடந்ததாகக் கேள்வி. மற்றைய நாடுகளிலும் அவ்வாறே நடந்திருக்கலாம். தமிழ்நாட்டிலிருந்து யாரேனும் வந்து அனல்பறக்கப் பேச அதற்கு விசிலடித்து ஓய்வதோடு நமது தமிழ்த்தேசிய எழுச்சி முடிவுக்கு வருகிறதென நினைக்கிறேன். இம்முறை நெடுமாறன் (ஒஸ்ரேலிய மாவீரர் தினம்) திருமா (டென்மார்க்…

கலைஞருக்கு எழுதிய கடிதமும் காலாவதியான குறிப்புக்களும்

அவுஸ்ரேலிய நாட்டிலிருந்த ஏதோ ஒரு சம்மேளனம் தன் கடிதமொன்றில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஈழத்தெய்வம் ஜெயலலிதா! உண்மையாய் பெருத்த சோகத்தை உணர்ந்தேன். அது ஜெ/கருணாநிதி என்கிற ஒற்றைமனிதர்களை முன்னிறுத்தியதல்ல. கையில் பிஸ்கட்டுடன் யார்யாரோ எல்லாம் எட்டாத உயரத்தில் நீட்டி ஞ்சூ ஞ்சூ என்கிறார்கள். நாம் நாய்களைப்போல கொஞ்சம்…

போய்வருக தாய் நிலமே

UK central college இப்படித் தான் சொல்லுவோம். ஆனால் மத்திய கல்லூரி அல்ல. வெறும் மகா வித்தியாலயம் தான். UK மகா வித்தியாலயம். உடையார் கட்டு மகா வித்தியாலயம். பரந்தன் முல்லைத்தீவு வழியில் விசுவமடுவிற்கு அடுத்ததாக சில கட்டடங்கள் சில கொட்டில்கள் சில மர நிழல்கள் இவைதான் அப்பாடசாலையில்…

சிவத்தக் கன்னம் மட்டும் தான் சிவக்குமா

சத்தியமாக தஞ்சாவூரை ஆங்கிலத்தில் டன்சூர் என அழைப்பார்கள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் சொல்லும் வரை! ஆனால் அவருக்கு கூட அதில் பெரும் சந்தேகம் இருக்குமாப்போல முகபாவனைகள் உணர்த்தின. இத்தனைக்கும் அவர் அங்கே தான் பிறந்திருக்கிறார். சென்ற வாரம் ரயில் பயணமொன்றில் அருகிருந்து சிநேகமாய்ப் புன்னகைத்த அவர் “இந்தியாவா” என…

விருப்புக்குரிய புத்தகங்களும் சுவிசில் நூல் நிலையமும்

2005 இன் ஒரு நாள், கொழும்பின் பூபாலசிங்கம் கடையில் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூல் இருக்கா எனக் கேட்டதற்கு அங்கு வேலை செய்த அக்கா ஒரு மாதிரியா பார்த்தா. பிறகு அவ காட்டிய இன்னுமொருவர் அது விற்பதில் சில பல பிரச்சனைகள் இருக்கென்று சொல்லவும், பரவாயில்லையெனச் சொல்லி விட்டு…

எனது வானொலி அனுபவங்கள் 1

சிட்னியில் எனது நீண்ட நாளான ´´முடிஞ்சால் செய்து பாக்கலாம்´´ என்கின்ற ஒரு ஆசை நிறைவேறியது. அது ஒரு ஒலிபரப்பாளனாவது. கொழும்பில் ஆயிரத்தெட்டு வானொலிகள் முளைச்ச போது அப்பிடி ஒரு ஆசை வந்ததெண்டு நினைக்கிறன். அதுக்கு முதல் பள்ளிக்குடத்தில படிக்கும் போது ஒருமுறை இலங்கைத் தேசிய வானொலியில் மாணவர் மலர்…

நான் நாடகம் போட்ட கதை

UTS பல்கலைக்கழக தமிழ்ச்சங்க நிகழ்வு என்றாலும் கிட்டத்தட்ட சிட்னியின் அனைத்து பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் பங்களிப்புடனும் நடந்த நிகழ்வு அது! கதம்ப மாலை 2006! தமிழர் புனர் வாழ்வுக் கழகம் தாயகத்தில் முன்னெடுக்கின்ற மருத்துவப் பணியொன்றிற்கான நிதி திரட்டலுக்காக கடந்த சனிக்கிழமை சிட்னியில் அது நடந்து முடிந்தது. வருடாவருடம்…

இந்தாங்கோ நான் படிக்கிற புத்தகங்கள்

கறுப்பி மற்றும் துளசிக்காவிற்கு எனது முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இரண்டாவது கண்ணாக நான் பேச மன்னிக்கவும் எழுத எடுத்துக் கொண்ட விடயம் என்னவென்றால்.. சும்மா போங்கோ.. எனக்கு உப்பிடி எழுதவே வருகுதில்லை. வட்டார மொழிக்கதையள் பிடிக்காத ஆக்களும் என்ரை பதிவுகளை வாசிக்க வேணும் எண்டு விரும்பி வட்டாரமில்லாத கதையளாய்…