வதைகளின் கதைப்பாடல் – ம.மணிமாறன்
துடிப்படங்கிய உடல்களைப் புரட்டித் தேடுகிறது கரும்பச்சை சூடிய சிங்களச்சிப்பாயின் துவக்கு. புகை படர்ந்த பெருவெளிக்குள் துழாவித்திரிகிற அவனின் கண்களுக்குள் உறைந்திருக்கிற வன்மத்திற்கு ஓராயிரம் ஆண்டின் வரலாற்று ரேகை படிந்திருக்கிறது. தன்னுள் திளைக்கும் கொடுரத்தினை விதைத்தது புத்தபிக்கு மஹானாமாவின் சிங்கள காவியமான மகாவம்சம் என்பதை அந்த வீரன் அறிந்திருக்கச் சாத்தியமில்லை….