என்னா இதுங்கிறேன்?

இதோ.. அண்ணாந்து ஆறுதலாக தேடியும் கிடைக்காத தீர்த்தம் போல இவர் அருந்துவது என்ன என்று தெரிகிறதா? யாழ்ப்பாணத்தில் எல்லோருமே படம் எடுத்துக்கொண்டோம். இவர் மட்டுமே மிக வாய்ப்பாக கமெராவுக்குள் அகப்பட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் என்னோடு தனது நேரத்தினை செலவழித்தமைக்காக இந்தப் பதிவினையும் படத்தினையும் அவருக்கு காணிக்கையாக்குகின்றேன். நன்றி நண்பா…

படம் காட்டுறன்

யாழ்ப்பாணத்தில் எழுந்த மாற்றாய் ஒரு பத்துப்பேரை படம் பிடித்தால் கண்டிப்பாக ஒரு இராணுவ சிப்பாயோ அல்லது ஒரு இராணுவ வாகனமோ அவர்களுக்குள் அடங்குவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. உண்மையும் அது தான். யாழ்ப்பாணத்தில் பத்து நபர்களுக்கு ஒரு சிப்பாய் என்ற விகிதத்தில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளார்கள். இந்த படம் யாழ்…

பொதுக்கட்டமைப்பு கைச்சாத்து

புலி வருது.. புலி வருது கதையாக இறுதியில் புலி வந்தே விட்டது. இன்று சுனாமி நிவாரண பங்கீட்டுக்கான புலிகளுடன் இணைந்து பணியாற்றும் கட்டமைப்பில் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப்புலிகளும் கைச்சாத்திட்டு விட்டனர். சிங்கள இனவாத அமைப்புக்களின் கடுமையான எதிர்ப்புக்கள் ஆரம்பம் முதலே இதற்கு இருந்து வந்தது. இன்றும் காலை…

மெல்பேண் To கொழும்பு

இன்று அதிகாலை கொழும்பில் வீட்டுக்கதவினை தட்டி ( வழமையாக இது இலங்கை இராணுவம் செய்கின்ற வேலை.) அம்மாவை தூக்கத்திலிருந்து எழுப்பி எனது வருகை குறித்த அதிர்ச்சி மகிழ்ச்சியினை கொடுத்த போது நேரம் 2 மணி. மெல்பேணில் புறப்பட்ட விமானம் சிங்கையை வந்தடைந்த போது சிங்கை நேரம் இரவு 9.15….

இலங்கை அரசின் எதிர்காலம்?

ஜே.வி.பி விலகி விட்டது. இலங்கையின் தமிழர் பகுதிகளுக்கு சுனாமி நிவாரண உதவிகளை பங்கிடுதல் தொடர்பான புலிகளுடன் இணைந்து பணியாற்றும் கட்டமைப்பு யோசனையை கைவிடுமாறு அது சந்திரிகாவிற்கு கொடுத்திருந்த காலக் கெடு நேற்று இரவுடன் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இன்று அரசிலிருந்து விலகுவதாக அறிவித்தது. கடந்த வாரங்களில் கொழும்பின் அரசியல்…