சினிமா

என்னா இதுங்கிறேன்?

இதோ.. அண்ணாந்து ஆறுதலாக தேடியும் கிடைக்காத தீர்த்தம் போல இவர் அருந்துவது என்ன என்று தெரிகிறதா?

யாழ்ப்பாணத்தில் எல்லோருமே படம் எடுத்துக்கொண்டோம். இவர் மட்டுமே மிக வாய்ப்பாக கமெராவுக்குள் அகப்பட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் என்னோடு தனது நேரத்தினை செலவழித்தமைக்காக இந்தப் பதிவினையும் படத்தினையும் அவருக்கு காணிக்கையாக்குகின்றேன்.

நன்றி நண்பா நன்றி


Image hosted by Photobucket.com

By

Read More

படம் காட்டுறன்

Image hosted by Photobucket.com

யாழ்ப்பாணத்தில் எழுந்த மாற்றாய் ஒரு பத்துப்பேரை படம் பிடித்தால் கண்டிப்பாக ஒரு இராணுவ சிப்பாயோ அல்லது ஒரு இராணுவ வாகனமோ அவர்களுக்குள் அடங்குவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. உண்மையும் அது தான். யாழ்ப்பாணத்தில் பத்து நபர்களுக்கு ஒரு சிப்பாய் என்ற விகிதத்தில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளார்கள். இந்த படம் யாழ் பேரூந்து நிலையத்தில் எடுக்கப்பட்டது.

Image hosted by Photobucket.com

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் இருக்கின்ற முனியப்பர் கோயில் இது. இப்போது யாழ்ப்பாணத்தின் காதல் தெய்வம்.

By

Read More

பொதுக்கட்டமைப்பு கைச்சாத்து

புலி வருது.. புலி வருது கதையாக இறுதியில் புலி வந்தே விட்டது. இன்று சுனாமி நிவாரண பங்கீட்டுக்கான புலிகளுடன் இணைந்து பணியாற்றும் கட்டமைப்பில் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப்புலிகளும் கைச்சாத்திட்டு விட்டனர்.

சிங்கள இனவாத அமைப்புக்களின் கடுமையான எதிர்ப்புக்கள் ஆரம்பம் முதலே இதற்கு இருந்து வந்தது. இன்றும் காலை பாராளுமன்றத்திற்கு அண்மையாக மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

பொதுக்கட்டமைப்பு கையெழுத்திடப்பட்டிருக்கிறது. அவ்வளவே. இனி வரும் காலங்களில் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள்ää ஒத்துழையாமை குறித்த ஒவ்வொரு தரப்பினதும் குற்றச்சாட்டுக்கள் வர கூடும்.

ஏற்கனவே சிரான் என்ற ஒரு புனர்வாழ்வு அமைப்பு அமைக்கப்பட்டு தற்போது செயல் இழந்து கிடக்கிறது.

எதுவோ.. இதனை நடைமுறைப்படுத்தல் என்ற வெறியுடன் அதனூடாக பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை துடைத்தல் என்ற உண்மையான அக்கறையுடன் இலங்கை அரசு இக்கட்டமைப்பில் கையெழுத்து இட்டிருந்தால் அரசுக்கும் அதன் தலைவி சந்திரிகாவிற்கும் நன்றி சொல்வதில் எந்த விதமான துரோகமும் இல்லை.

ஆனால் முழுமையான நம்பிக்கையை கடந்த கால வரலாறுகள் தமிழ் மக்களுக்கு வழங்க வில்லையென்பதே உண்மை.

By

Read More

மெல்பேண் To கொழும்பு

இன்று அதிகாலை கொழும்பில் வீட்டுக்கதவினை தட்டி ( வழமையாக இது இலங்கை இராணுவம் செய்கின்ற வேலை.) அம்மாவை தூக்கத்திலிருந்து எழுப்பி எனது வருகை குறித்த அதிர்ச்சி மகிழ்ச்சியினை கொடுத்த போது நேரம் 2 மணி.

மெல்பேணில் புறப்பட்ட விமானம் சிங்கையை வந்தடைந்த போது சிங்கை நேரம் இரவு 9.15. மீண்டும் சிங்கையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட போது நேரம் 10.40.

ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த, நண்பர்கள் எனது வீட்டிற்கு எந்த விதமான தகவல் கசிவும் விடாதபடி கன கச்சிதமாக என்னை விமான நிலையத்திலிருந்து அழைத்து செல்ல வந்திருந்தார்கள்.

எல்லாம் திட்டமிட்ட படி முடித்தாயிற்று. அம்மாவிற்கு இன்னும் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் தீரவில்லை. நண்பர்களுக்கு நன்றி.

சிங்கை. பிரமிக்க வைத்த விடயம்.
சிங்கை விமான நிலையத்தோடு ஒப்பிட்டால் மெல்பேண் நிலையம் குடிசை. கொட்டில்.

சிங்கை. கவலையுற வைத்த விடயம்.
சிங்கை விமான நிலையத்தில் லோக்கல் அழைப்புக்களுக்கு இலவசம் என்பது முன்னமே தெரிந்திருந்தால் ஈழநாதனின் தொலைபேசி இலக்கத்தை கொண்டு வந்து அலட்டியிருக்கலாம்.

இந்த பயணத்தின் நோக்கங்கள் அல்லாத ஒன்று
நானும் வசந்தனும் வேறு நபர்கள் என்பதனை உணர்த்துதல்.

சந்திக்கலாம்.

By

Read More

இலங்கை அரசின் எதிர்காலம்?

ஜே.வி.பி விலகி விட்டது.

இலங்கையின் தமிழர் பகுதிகளுக்கு சுனாமி நிவாரண உதவிகளை பங்கிடுதல் தொடர்பான புலிகளுடன் இணைந்து பணியாற்றும் கட்டமைப்பு யோசனையை கைவிடுமாறு அது சந்திரிகாவிற்கு கொடுத்திருந்த காலக் கெடு நேற்று இரவுடன் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இன்று அரசிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

கடந்த வாரங்களில் கொழும்பின் அரசியல் பரபரப்புடையதாக இருந்தது. ஜே.வி.பி அரசிலிருந்து விலகுமா என்றும் சந்திரிகா ஜே.வி.பியின் நிபந்தனையை ஏற்றுக் கொள்வாரா என்றும் பலவாறான கேள்விகள் அங்கு இருந்தன.

பொதுக்கட்டமைப்பு என்பது ஒரு நிவாரண உதவி அமைப்பு. ஆயினும் அதற்கான எதிர்ப்புகளும் கோசங்களும் ஏதோ தனிநாட்டிற்கு எதிரான கோசங்களுக்கு ஒப்பானதாயிருந்தன. பெளத்த பிக்குகள் உண்ணாவிரதமிருந்தனர். ஊர்வலம் போயினர். தம்மீது பெற்றோல் ஊற்றினர். கண்ணீர் புகை குண்டுகளுக்கிடையில் சிக்கி கண்ணீர் விட்டனர்.

ஜே.வி.பி யும் தன் பங்குக்கு புலிகளுடன் வெற்றுக்காகிதத்தில் கூட கையெழுத்து இட கூடாது என்றது. காலக்கெடு விதித்தது. இறுதியில் அரசிலிருந்து விலகியிருக்கிறது.

சந்திரிகாவிற்கு இது ஒரு மானப்பிரச்சனையாக இருந்திருக்க வேண்டும். பாரம்பரியம் மிக்க ஒரு கட்சியை ஜே.வி.பியினர் ஆட்டிப்படைப்பதை அவர் விரும்பியிருக்காது இருக்க கூடும்.

உலக அரங்கில் புலிகளின் தரத்தை உயர்த்தி விடும் என்பதனாலும் அவர்களுக்கான அங்கீகாரம் ஒன்றினை வழங்கி விடும் என்பதனாலுமே சிங்கள இனவாத அமைப்புக்கள் இந்த பொதுக்கட்டமைப்பை விரும்பவில்லை என்பது தெளிவு. ஆனால் பெரும்பாலான உலக நாடுகள் புலிகளுடனான பொதுக்கட்டமைப்பினை ஆதரிக்கின்றன. விரைவில் அதனை நடைமுறைப்படுத்துமாறு வேண்டு கோள் விடுக்கின்றன.

இது ஆகக்குறைந்தது பாதிக்கப்பட்ட பகுதிகளில் புலிகளின் நிர்வாகம் என்ற யதார்த்தத்தினை அந்த நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை குறிக்கிறது.

பொதுக்கட்டமைப்பு தொடர்பில் சிங்கள இனவாத அமைப்புக்கள் நடந்து கொண்ட முறையே உலக நாடுகள் இலங்கையின் இனப்பிரச்சனை தொடர்பில் இன்றைய யதார்த்தம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள போதுமானது.

ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தினை பங்கிடுகின்ற சாதாரண ஒரு அமைப்புக்கு இத்தனை எதிர்ப்பு சிங்கள தேசத்தில் கிளம்புமென்றால் இடைக்கால நிர்வாக சபைக்கு, சமஷ்டி முறையிலான நிரந்தர தீர்வுக்கு சிங்கள தேசத்தின் இனவாதம் எத்தனை தூரம் கொந்தளிக்கும் என்பதை உலகு உணர்ந்திருக்கும்.

20 வருடங்களுக்கு மேலான தமிழர்களின் போராட்டத்திற்கு நியாயம் இருந்திருக்கிறது என்பதை இன்று சிங்கள இனவாதம் தானாகவே உணர்த்தி கொண்டிருக்கிறது.

By

Read More

× Close